இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் 30 வது புத்தகக் கண்காட்சி பற்றி அதிக பதிவுகள் இவ்வாரம் எழுதப்பட்டுள்ளன. 1977ல் துவங்கி ஒவ்வொரு வருடமும் சென்னையில் இப்புத்தகக்கண்காட்சி நடந்துவருகிறது. விழா, பாபாசித் தலைவர் காந்தி கண்ணதாசன் மற்றும் அமைப்பாளர்களின் உழைப்பில் விளைந்தது இவ்வாண்டு. சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது தந்து ஊக்குவித்தல் மட்டுமில்லாது அதிக அளவு புதிய நூல் வெளியீடுகள், இலக்கியம் சார்ந்த மேடை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் என உண்மையில் ஒரு இலக்கியத் திருவிழாவாகவே இவ்விழா நடைபெற்று வருகிறது. இவ்வருடம் அரசு இப்புத்தகக் கண்காட்சிக்கு இடம் தருவதாக கூறியுள்ளதும், முதல்வர் 1 கோடி ரூபாய் அளித்துள்ளதும் இந்நிதியிலிருந்துவரும் வருவாய் 5 சிறந்த எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்படும் என்ற அறிவிப்பும் சிறப்பானது. எழுததாளர்களை ஊக்குவிக்க 10 பக்க அணிந்துரை எழுதுவதைக் காட்டிலும், மேடைதோறும் அவர்களது எழுத்தைப் புகழ்வதைக்காட்டிலும், எழுத்தாளர்களின் வாழ்நிலை உயர அரசு தாய் மனதுடன் அக்கரை எடுத்துக்கொள்ளுதலே முதன்மையாகச் செய்யப்பட வேண்டியது. தமிழுலகில் இன்றைய எழுத்தாளர்களின் நிலையைச் சொல்லத்தேவையில்லை. பல மணி நேரப் பணி (பணிநேரம் என்ற ஒன்று இவர்களுக்கு இருக்கிறதா என்ன?), ஊதியம் என்ற பெயரில் வாய்க்கும், கைக்கும் பத்தாத ஒரு தொகை. பல இதழ்களில் எழுதினாலும் சன்மானம் என்ற பெயரில் எழுத்திற்குப் பெறுமானமில்லா வருமானமே பலரின் வாழ்வாதாரம். திரைத்துறையில், தொலைக்காட்சியில் அல்லது பெரிய நிறுவனமாகிவிட்ட இடங்களில் இருப்போரின் நிலைகொண்டு எழுத்தாளர்களின் வாழ்வை எடைகாணது, தான் எழுத விரும்பும் ஒன்றிற்காக வீடு மறந்து, பிள்ளைகள் மறந்து சுற்றி அலையும் பல எழுத்தாளர்களை மனதில்  கொண்டு,  அவர்களது குடும்பங்களுக்கு உறைவிடம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்துதரப் படவேண்டும். நூலகங்களில் அவர்களுக்கு சிறப்பு வசதியும், ஆய்வெழுத்துகள் பெருக வசதிகள், போக்குவரத்தில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். பலநூற்றுக்கணக்கான பதிப்பங்கள் இருந்தும் நல்ல நிலையில் லாபகரமாக இயங்கும் பதிப்பகங்கள் எண்ணத் தகுந்த அளவில்தான் உள்ளன. புத்தக விற்பனைகூடங்கள் பலவற்றின் நிலையும் இதுவே. அனைத்துக் கலைகளையும் தான் விழுங்கி ஓங்கி நிற்கும் திரைத்துறைக்கு அரசு காட்டும் சலுகையில் சில பங்கையாவது எழுத்தாளர்களுக்கு, பதிப்பகங்களுக்கு மற்றும் புத்தக விற்பனை நிலையங்களுக்கு காட்டவேண்டும். அரசு விழாக்களில் "பொன்னாடை"களுக்குப் பதில் "புத்தகங்கள்" என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. புத்தகத் திருவிழா பற்றி தமிழ் நதியின் " சென்னை புத்தகக் கண்காட்சி சென்றதும் கொணர்ந்ததும்" , தீபக் வெங்கடேசனின் "சென்னை 30 வது புத்தகக்கண்காட்சி" பதிவும் கூறுகின்றன. நடிகர் சூர்யாவின் "இப்படிக்குச் சூர்யா" என்ற புத்தக மதிப்புரையைக் கொண்ட ஸ்ருசல் பதிவு மற்றும் பதிவர் சேவியர் இவ்விழாவில் வெளியிடப்பட்ட அவரது புத்தகம் பற்றியும், விழா பற்றியும் பகிர்ந்துகொள்ளும் பதிவும் பூங்காவில் தொகுக்கப்பட்டுள்ளது.

 

 

"பானை இறக்கி, பல பேர்க்கு இலையிட்டு, தேனை, பழச்சுளையைச் சேர்த்துப் படைப்பேன் நான்; எடுத்துண்டு நீவீர் அதை என்னவென்று சொல்வீர்?" என ஒரு பெண் கேட்க,

"அடடா இப்பொங்கல் அமிழ்தென்பேன் நான்" என ஒரு ஆண் விடை பகர,

"ஒப்புவாரோ இப்பொங்கல் அமிழ்தென்றுரைத்துவிட்டால்?....."

என்றொரு கேள்வியை அன்று பாட்டுப் பாட்டன் பாரதிதாசன் வெளியிட்டான். பொங்கலை "அமிழ்தென்றால்" கூட பலர் ஒப்பமாட்டார்கள் என்றிருந்த நிலைமாறி இன்று பொங்கல் மதம் சார்ந்ததா?, ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமா? அல்லது உழைக்கும் அனைவர்க்கும் உரியதா?வெனப் பட்டிமன்றங்கள் பதிவுகளில். பொங்கல் பற்றிய ஆய்வுடனும், இவ்வருடப் பொங்கலை கொண்டாடிய முறை பற்றியும் மற்றும் புலம்பெயர் உள்ளங்கள் தாங்கள் கொண்டடாடியதை நினைவுமீட்டலாக வெளியிட்டும் பதிவுகள் அதிகம். அவற்றில் மலைநாடனின் "எங்கள் பொங்கல்", கார்த்திகேயனின் "கிராமத்துப் பொங்கல்" மற்றும் திருவடியானின் "பொங்கல் வாழ்த்துக்களும், சில சிந்தணைகளும், மாட்டுப் பொங்கலை முன்னிருத்தாவிடினும் மாட்டிவண்டியைப் பற்றிய கானாபிரபாவின் பதிவும் பூங்காவை அலங்கரிக்கின்றன.

 

 

வாரலாறுகள் திரிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உண்மையை உரைக்க வருவோர் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், பல சாத்திரக் கதைகளால் பயமூட்டப்பட்டும் வெகுகாலம் வந்திருந்தாலும்,  புதைக்கப்பட்டவைகள்  மீட்டெடுக்கப்படுதல் அவசியம். ஆரூரான் அவர்களின் "ராஜ ராஜ சோழனின் சமாதி" என்பதைத் தமிழெதிரிகள் மறுப்பதேன்" என்ற பதிவும், மருதையன் அவர்களின் "திப்பு சூல்த்தான்" பதிவும் இதை உணர்த்துகின்றன. பாடத்திட்டங்களில் குப்த சாம்ராஜ்யத்திற்கு, விஜய நகரப் பேரரசுக்கு கொடுக்கும் முக்கியத்துவங்களை சோழர், சேரர், பாண்டியர் பற்றி அறியத் தருவதற்குக்  யாரும் கொடுப்பதில்லைதான். விடுதலைப்போருக்கு வித்திட்டவர்கள் வரலாறே தென்னகத்திலிருந்து துவங்கியிருக்க, திப்புசூல்த்தான் போன்றோர் ஆங்கிலேயரை வெளியேற்றுவது ஒன்றையே தன் ஆட்சி லட்சியமாகக் கொண்டு மாண்டிருக்க விடுதலை வரலாற்றில் 'சில பக்கங்கள்' மட்டுமே இன்று இவர்களின் வீரத்திற்கு சாட்சியாய் இன்று சன்று பகர்கின்றது....  அன்றைய வரலாறுதான் அப்படியென்றால் இன்றைய நிகழ்வுகளும்.... (நாளைய வரலாறு...) பலரின் கண்ணில் மண்தூவியே ஆவணப்படுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணம் அரசுனின் "அவலச்சுவை அரசியலை"ப் பற்றிய பதிவு. இம்முறை நவீன மெக்கலேக்களின் சமூகநீதி எதிர்ப்பு அரசியல் பற்றிப் பேசுகிறது ஜெகத்தின் பதிவு. மனிதம் மறைய மதம் காரணமானால் அம் மதம் தேவையா? எனக் கேள்வியெழுப்பிய பெரியார் பற்றிய பதிவையும், மதம் பற்றிய தனது புரிதல்களையும் பதிவு செய்கிறார் திரு. கம்பன் விழாவைப் பற்றிய தனது பார்வையை மயூரன் பதித்திருக்கிறார்.

 

 

டிசே தமிழனின் 'Little children' என்ற திரைப்பட விமர்சனமும், தாயக மண்ணைவிட சுதந்திரக் காற்றை வேற்று நாடுகள் அள்ளித் தந்தாலும், அங்கு தன்னை 'அகதி' யெனவே அடையாளப்படுத்துவதில் பெருமைகொள்ளும், தாய் மண்ணின் மீதான தன் நேசத்தை என்றும் சுமந்து திரியும் இன்றைய புலம் பெயர்ந்து வாழும் தலைமுறையை தனது வாயிலாகவே "எனது பெயரும் அகதி" என்ற பதிவில் காட்டுகிறார். இவரின் தமிழ்மண நட்சத்திர தேர்வுப் பதிவுகளாக சுகுணா திவாகரின் 'திராவிட இயக்க இலக்கியங்கள்' பற்றிய பார்வையும், "நொய்டா கொலைகள் மற்றும் ஷோபா சக்தியின் 'ம்' பற்றிய செய்திகளுடனும் எழுதப்பட்டுள்ள பதிவர் செந்திலின் பதிவும் இவ்விதழில் உள்ளன.

 

அஸ்ஸாம் தீவிரவாதத்தைப் பற்றிய பதிவுகள் இல்லை மற்றும் விளையாட்டு வீராங்கனை சாந்திக்கு நேர்ந்த அவமதிப்பிற்கு விளையாட்டு சங்கங்கள் "அவரே பொறுப்பு" என்றன. நடிகை சில்பா ஷெட்டிக்கு நேர்ந்த அவமானம் இங்கிலாந்து பாராளுமன்றம்வரை எதிரொலிக்கிறது. கண்டிக்கத்தக்க நிகழ்வுதான்... இதைப் பற்றிய விவரமான பதிவில்லை.

 

 

புலிகளின் படை நிலவரம் பற்றிய சசியின் பதிவு, மா.சிவக்குமாரின் புத்தகவிமர்சனம்,  தமிழ் குயிலின் மொழி பற்றிய பதிவு, தமிழ் பேச தங்கம் வழங்கும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிய பொன்ஸின் பதிவு, ஷ்ரேயாவின் பயணக்குறிப்புகள் தொடர்ச்சி, வைசாவின் இணையம் பற்றிய பதிவு, சிங்கைக்கு வேலைக்கு வருவோர் பற்றிய சலாஹூத்தீன் பதிவு, மாசிலாவின் அறிவியல் பதிவுடன் சுனாமியின் சோக நினைவைச் சுமந்துவரும் லட்சுமி அவர்களின் பதிவும் சேர்க்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்குத் தனி நல வாரியம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 70 லட்சம் மீனவர்களின் வாழ்க்கையில் சிறிதேனும் மாறுதல் இருக்கும், அவர்களது துன்பங்களுக்கு உடனடித் தீர்வுகள் இருக்கும் என நம்புவோம். 34,500 குடும்பங்களுக்கு எரிவாயு அடுப்புகள் வழங்க திட்டம் வகுக்கப்பட்டு, சில இடங்களில் அது துவங்கப்பட்டுவிட்ட நிலையில், "சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் - ஒரு பார்வை" என்ற பதிவர் நாகுவின் பதிவு முக்கியமானது.   

பன்முகப் பதிவுகளுடன் பல்சுவை தாங்கி இவ்வாரம் உங்கள் பூங்கா. 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)