அடுத்தவீட்டில விலைபேசுறான் வடக்கத்தையான் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளான, தமிழீழம் என்றழைக்கப்படும் வட கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தீவின் மூன்றில் இரண்டு பங்கு கரையோரத்தை உள்ளடக்கியது என்பது யாவரும் அறிந்ததே. அதை விட மீன்வளம் நிறைந்ததும், பெற்றோலியப் படிமங்களைக் கொண்டதுமான ஏழு பெரிய தீவுகளும், மூன்று சிறிய தீவுகளும் உள்ளடங்கிய 100% தமிழர்கள் வாழும் தீவுக் கூட்டமும் தமிழீழத்துக்குரிய பகுதிகளாகும்.
இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும், தீவுக் கூட்டங்கள் அடங்கிய கடற்பகுதியிலும், உள்ள மன்னார் வளைகுடாவிலும் பாரிய பெற்றோலியப் படிவுகள் இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர். தமிழ்நாட்டின் காவேரிப் படுகையில் (Cauvery Basin) IPB Company Ltd (Indian Oil Group) எண்ணெய் எடுக்கிறார்கள். அதை விடப் பெருமளவில் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய செய்திகளின் படி இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஸ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், இலங்கை அரசின் திட்டத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
தமிழீழத்தை அங்கீகரிக்காமல், தமிழீழத்தில் அதுவும் பெற்றோலியப் படிமங்களுள்ள பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், விடுதலைப் புலிகளை ஆலோசிக்காமல், அங்கு வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுடன் கலந்தாலோசிக்காமல், தமிழீழக் கடலில், தமிழர்களின் மூல வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய நிறுவனங்கள் முன்வருவது சரியா? நாம் தமிழர்கள் தமிழீழக் கடலெல்லைக்குள் இந்திய நிறுவனங்கள் சிங்களவரின் அனுமதியுடன் மட்டும் தொழில் நடத்துவதை அனுமதிக்கலாமா?
இந்து சமுத்திரத்தை தன்னாதிக்கத்தில் வைத்திருக்கவும், ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்தவராகவும் விரும்பும் இந்தியா, தனது ஆதிக்க எல்லைக்குள் உள்ளதும், மொழி, கலாச்சார, மத, சரித்திர தொடர்புகளுள்ள இலங்கையில், குறிப்பாக எப்பொழுதும் இந்தியாவைத் தமது தந்தையர் நாடாகக் கருதும் ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் சுயநல எண்ணமின்றித் தலையிட்டு, தமிழர்களின் உரிமைகளைச் சுமுகமாகத் தீர்க்காமல், ஈழத்தமிழர்கள் இலங்கை இனவெறியரசின் திட்டமிட்ட இனக்கொலைகளினாலும், உணவு, மருந்துத் தடையினாலும், பட்டினியாலும் சாகும் போது இந்திய தனியார் நிறுவனங்கள் மட்டுமன்றி இந்திய அரசு நிறுவனங்கள் கூட, தமிழீழப் பகுதியின் மூலவளங்களைக் கொள்ளையிடுவதில் சிங்கள் அரசுக்கு உதவுவது முறையான செயலாகுமா?
ஈராக் எரிந்து கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் ஈராக் மக்கள் கொல்லப்படும் போது, அமெரிக்கா ஈராக்கில் எண்ணெய்யை அள்ளினால், புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டினால், இங்கு எத்தனை வலைப்பதிவாளர்கள், குய்யோ, முறையோ என்று ஒப்பாரி வைத்திருப்பார்கள்.
அந்த மனிதவுரிமை வீரர்களின் கண்களில் ஈழத்தமிழர்களின் துன்பமும், துயரமும் மட்டும் ஏன் கண்ணில் படவில்லை. அமெரிக்கா செய்தால் பிழை, இந்தியா செய்தால் சரியா? அமெரிக்காவுக்கு ஒரு நீதி, இந்தியாவுக்கு ஒரு நீதியா?
ஈராக்கில் வட பகுதியான குர்திஸ் மாநிலம் தான் கூடியளவு எண்ணெய் வளமும், கனிமங்களும் உள்ள பகுதியாகும், குர்திஸ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தபின்பு தான் குர்திஸ் மாநிலத்தில் உள்ள கனிமங்களையும், எண்ணெய் வளங்களையும் அமெரிக்கா அகழ்வாய்வு செய்யும், அதன் முதல் படிதான் ஈராக்கின் வடபகுதியில் உருவாக்கப்பட்ட குர்திஸ் மாநிலம், அப்படியானால் அமெரிக்கர்களை விடவா இந்தியர்கள் சுயநலவெறி பிடித்தவர்கள். எப்பொழுது தமிழ்நாட்டின் மனநிலையை இந்தியா கருத்தில் கொள்ளும்?
ஜப்பானியர்களும், ஜேர்மன்காரர்களும், பல ஐரோப்பிய நாடுகளும், தமிழீழத்தில் கரையோரம் முழுவதும், வல்லிபுரம் தொடக்கம் திருகோணமலையின் புல்மோட்டை வரையும் மிகவும் தூய்மையான வடிவில் குவிந்துள்ள TITANIUM ORE க்காகத் தான் தமிழீழத்தில் சமாதானம் வருவதற்காகப் பாடுபடுகிறார்கள், ஜப்பானியத் தூதரும், ஜப்பானிய ஆலோசகர்களும் வன்னிக்கு அடிக்கடி செல்கிறார்கள்.
ஆனால் இந்தியா சிங்களவருக்குத் தான் ஆயுத உதவி செய்கிறது, தமிழர்களை எதிரிகளாக நடத்திக் கொண்டு தமிழீழத்தின் மூல வளங்களைக் கொள்ளையிட ஆசைப்படுகிறார்கள். இதைத் தமிழர்கள் அனுமதிக்கலாமா?
புல்மோட்டையில் TITANIUM ORE ஐ அள்ளிக் கொண்டிருந்த சீனக்கப்பலை விடுதலைப் புலிகள் அழித்த பின்பு தான் புல்மோட்டையில் TITANIUM ORE இன் ஏற்றுமதி நிறுத்தப் பட்டது, இன்று வரை தமிழீழத்தின் மூலவளங்களை அன்னியர்கள் தொடமுடியவில்லை.
இந்தியர்கள் தமிழீழக் கடலில் எங்களின் அனுமதியின்றி எண்ணெய் அகழ்வு செய்ய முன்வருவது முறையானதா அல்லது இது ஈழவிடுதலைப் போர் இந்தியாவுடனான எண்ணெய் வளத்துக்கான போராக மாறும் ஆபத்தை ஏற்படுத்துமா?
தமிழீழ மூலவளங்களைக் காப்பது விடுதலைப் புலிகளின் கடமை என்பதை யாராலும் மறுக்க முடியுமா? அப்படியிருக்க எங்களின் வீட்டு வாழைக்குலையை வாங்க விரும்புகிற வடக்கத்தையான், அடுத்த வீட்டுக்காரனிடம் விலை பேசி விட்டு வாழையை வெட்ட வந்தால், நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்கலாமா?
அம்மா, ஐயா நல்லாய்ப் படிச்ச புண்ணியவான்களே, புண்ணியவதிகளே பதில் சொல்லுங்க!!
Black Gold Aplenty
by Sunday Observer, Colombo.
Question: Can you pin- point specifically the high potential areas where you may find oil in Sri Lanka?
Answer: If you draw a line across the map of Sri Lanka from Chilaw to Trincomalee, our major oil fields are on the north of that line. That's where much of the Cauvery Basin deposits are. There are prospects of oil along the coast from Chilaw to Jaffna and from Jaffna to Trincomalee both onshore and offshore in very shallow waters. An arm of that deposit is extending parallel to the Eastern coast.
Dharmasiri Weerasinghe is a leading engineer in the oil exploration industry. During his career spanning more than three decades, he has worked for some of the biggest multi-national corporations in the business. He has successfully explored oil from the foot- hills of Andes in Colombia to the deep sea sites in Angola. At present he is engaged in oil fields close to the Red Sea in Egypt.
(*வடக்கத்தையான்= இந்தியன் - இலங்கைக்கு வடக்கில் இந்தியா உள்ளது)
|