இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
இயேசு காவியம் Print E-mail
SP.VR.சுப்பையா   

"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!"
- கண்ணதாசன்

-----------------------------------------------------------------
கவியரசர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற இறவாக்
காவியமான
'இயேசு காவியம்' படிப்பவர்களின் மனதில் படிக்கும்
போது ஏற்படுத்தும்
இன்பத்தாக்கத்தை அடியவனின் பார்வையில்
கீழே கொடுத்துள்ளேன்.


நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள் எடுத்துக்
கொள்ளலாம்.


புத்தகத்தைப் பிரித்தவுடன் 'என்னுரை' பகுதியில் தன்னுரையாகக்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள வரிகளைப்
படித்தவுடனேயே
நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம்!

"இயேசு காவியம் - பேச்சுவாக்கிலே துவங்கிய ஒரு முயற்சி.
கலைக்காவிரியின் சார்பில் தந்தையர் என்னைச் சந்தித்துப்
பேசிய பொழுதும், திரு.சந்திரமோகன் என்னை விடாப்பிடியாகக் குற்றாலத்திற்குக் கூட்டிச் சென்றபொழுதும் இது

ஏதோ ஒரிரு நாள் வேலை என்றே நான் எண்ணியிருந்தேன்.

ஆனால், வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப்
பிடித்தது. 'என்ன பிரம்மாண்டமான வேலையில் நாம்
கைவைத்து விட்டோம்' என்று பீதியடைந்தேன்.இயேசு பெருமான்
அருள் பாலித்தார்! நான் இதுவரை உழைக்காத வகையில்,
தொடர்ந்து பதினைந்து நாட்கள், தினமும் எட்டு மணி நேரம்
வேலை செய்து இதை முடித்தேன் என்றால் அது அவரது
கருணையே!"


காவியம் எழுதப்பெற்ற கதைக்கு என்னதொரு விளக்கம் பார்த்தீர்களா?

மேலும் கவியரசர் சொல்கின்றார்,"பலர் என்னை இறவாக்
காவியம்
ஒன்று எழுதுங்கள்
என்று வற்புறுத்தியதுண்டு.அந்த
இறவாக் காவியம் 'இயேசு காவியம்'தான் என்று நான்
உறுதியாகக் கூறமுடியும்"


இந்தக் காவியம் உருவாவதற்குக் கவியரசருக்கு உறுதுணையாக
இருந்த
அன்பர் திரு.ஜே.பி.ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் மனம்
நெகிழ்ந்து இப்படிச் சொல்கின்றார்.


"தமிழகத்தின் தனிப்பெரும் கவிஞராய் விளங்கிய கண்ணதாசன்
அவர்கள்
தமிழ்கூறும் நல்லுலகிலுள்ள அனைவருக்கும்
பொதுவான சொத்து. அந்தச் சொத்தில் நமக்கும் உரிமை
உண்டு என்று எண்பித்து, பேருவகை கொண்டு, இறைமகன்
இயேசுவின் புகழ் பாடும்படி அழைத்தோம். கிறிஸ்துவின்
வரலாற்றையே காவியமாக வடிக்க வேண்டினோம். கவிஞரும்
அதை உடனே ஏற்று அற்புதமாக எழுதிக்கொடுத்தார்


குற்றாலாம் அருவி தோற்கும் அளவிற்குக் கவிதை வெள்ளம்
அங்கே
கரைபுரண்டோடியது!"

மேலும் அவர் இந்த நூலைப் பற்றி, "தம் வேலை முடிந்ததும், கவிஞர்
அவர்கள்
காவியத்தை, விவிலியத்திலும் தமிழிலும் தேர்ச்சி பெற்ற
கிறிஸதுவ அறிஞர்கள்
ஆய்ந்து ஆலோசனை கூறவேண்டுமென
விரும்பினார். தனது நூல், யாராலும்
குறைசொல்ல முடியாத
அளவுக்குச் சிறப்புடன் அமைய வேண்டுமென்பதில்

அவர் கருத்தாயிருந்தார்" என்கின்றார்.

அதன்படி காவிய நூல் அச்சாவதற்கு முன்பு, பதினோரு பேர்கள்
கொண்ட
ஆய்வுக்குழு அமைக்கப்பெற்று, அவர்கள் சமர்ப்பித்த
சில திருத்தங்கள்
கவியரசர் அவர்களால் சரி செய்யப்பெற்றுப்
பின் பதிப்பிக்கப் பெற்றதாம்.
அந்தக் குழுவில் எட்டு அருள்
திருவாளர்களும், மூன்று தமிழ் அறிஞர்களும்
கூடிப் பணியாற்றியிருக்கிறார்கள் எனும்போது இந்த நூல் உருவான பிரம்மாண்டம்
கண்ணில் வந்து நிற்கின்றது!


1981ம் ஆண்டு ஜூன் மாதம், கவியரசர் மேல் நாட்டுப் பயணம்
மேற்கொள்
வதற்குச் சில தினங்கள் முன்பு அவருடைய ஒப்புதலைப்
பெற்ற புத்தகம்
அச்சிற்குத் தயாரானதாம். தாயகம் திரும்பியதும்,
சிறப்பான முறையில்
வெளியீட்டு விழா நடத்தவேண்டும் என்று
கவியரசர் பெரிதும் விரும்பினாராம்.

ஆனால் இறைத்திட்டம் வேறு வகையில் அமைந்துவிட்டது.

ஆமாம், அவர் தாயகம் திரும்பாமலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அதைப் பற்றித் தன் கண்ணில் நீர் திரையிட திரு.ஜே.பி.ஸ்தனிஸ்லாஸ்
இப்படிக் கூறுகின்றார்.

"இருப்பேன் பலநாள் என்றானே - எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே - அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே - அந்த
தேவன் அருகில் அழைத்தானோ!"

என்னவொரு அற்புதமான மனவெளிப்பாடு பாருங்கள்!

1982ம் ஆண்டு பதிப்பிக்கபெற்ற இந்த நூல் இதுவரை ஆறு
பதிப்புக்களைக்
கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு
மேலும் விற்றுள்ளது.


இந்த அரிய நூலைப் படிக்கும் வாய்ப்பை எனக்கு இறைவன்
இன்றுதான்
நல்கினார்.

அடியவன் படித்து மகிழ்ந்து எழுதுவதற்கு 2002ம் ஆண்டு
வெளிவந்த
பதிப்பு உதவியது. அதன் பதிப்பாசிரியர்
திரு.செ.பிலோமின்ராஜ் அவர்கள்,
"இறைமகன் இயேசுவின்
வாழ்வையும், வாக்கையும் கவிதை வடிவில் படித்து

மகிழ்வதில் மக்களின் தாகம் இன்னும் தணியவில்லை
என்பதை இதுவரை
வெளியான பதிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன!"
என்று தன் பதிப்புரையில் சிறப்பாகக் கூறியுள்ளார்

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும் நல்லுலகத்தோர்
அனைவரும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற ஆதங்கத்தில்
இதற்கு
ஒரு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.

இயேசுநாதரின் வரலாறு கவிதை வடிவில் அற்புதமாக எழுதப்
பெற்றுள்ள
இந்த நூல் 400 பக்கங்களைக் கொண்டது. நூலில்
உள்ள அத்தனை கவிதைகளுமே
முத்துக்கள். எல்லாவற்றையும்
எடுத்து நான் எழுத விரும்பினாலும்
பதிப்பாளர்கள் தங்கள்
காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது!

அதேபோல மிகவும் அதிகமாக நெஞ்சைத் தொட்ட வரிகளைக்
குறிப்பிட்டு
எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது
என்ற திகைப்புத்தான்
மேலிடும். ஒரு காவியத்தில் அதைச்
செய்வதும் சரியல்ல!


ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து
வாங்கிப் படியுங்கள்.
அதுதான் எழுதிய கவியரசருக்கும்,
வெளியிட்டவர்களுக்கும் நாம் செய்யும்

மரியாதையும், நன்றிக் கடனுமாகும்.

பதிப்பாளர்களின் முகவரி:
கலைக்காவிரி,
49-J, பாரதியார் சாலை,
திருச்சிராப்பள்ளி - 620 001

 

http://classroom2007.blogspot.com/2007/01/blog-post_21.html

 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)