இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
வாசகர் எதிர்வினை Print E-mail
பூங்கா வாசகர்கள்   

--------------------------------------------------------------------------

பூங்கா குறித்து வாசகர்கள் பூங்காவிற்கு வந்த எதிர்வினைகள் இங்கே பதிவாகும்.

-------------------------------------------------------------------------------------------------------

From: sugunadiwakar
Date: Jan 22, 2007 9:53 AM
Subject: Poonga: about \'poonga\'



உங்களின் சமீபத்தைய பூங்கா தொகுப்புகள் ஏமாற்றத்தையே கையளிக்கின்றன. ஒரு சிலருக்கே அதிகமும் வாய்ப்பளிப்பதாய் உணர்கிறேன். என்னையும் சேர்த்துத்தான், எனது இரண்டு பதிவுகளையும் போடவேண்டிய அவசியமில்லை. ஒரு பதிவைப் போட்டு வேறு யாருடைய பதிவையாவது போட்டிருக்கலாம். சுகுணாதிவாகர், வரவணையான் போன்ற சில முகங்களையே பார்த்துப் போரடிக்கிறது. புதியவர்களுக்கு வாய்ப்பளியுங்கள். (தகுதி, தரம் போன்ற வழமையான அளவுகோல்களையும் தாண்டி..)

எனது ஜான் ஆபிரகாம் பற்றிய பதிவில் சில பகுதிகளை நீக்கியிருக்கிறீர்கள். குடிப்பது போன்றவற்றின் மீதான உங்கள் அறவியற்சார்ந்த பிரச்சினையாக அது இருக்கலாம். ஆனால் ஜானை நான் எப்படி உணர்ந்தேன் என்பதே நான் சொல்ல வந்ததே தவிர ஜானைப் பற்றிய தகவல்களை வாசிப்பவர் முகத்தில் வீசியெறிந்துவிட்டது போவதையல்ல. இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. குறைந்தபட்சம் என் கட்டுரையில் சில வரிகளை நீக்கும்முன் என்னைத் தொடர்புகொண்டிருக்கலாம். (மண் படம் பற்றிய விமர்சனத்தை வெளியிடும்முன் அப்படியாகத் தொடர்புகொண்டீர்கள்.)

நன்றி

பிரியங்களுடன்
சுகுணாதிவாகர்.

~~~~~~~

 

பதிவர் சுகுணா திவாகர்:

 

உங்கள் வாசகர் அஞ்சலின் முதற்பகுதியிலே சுட்டியிருப்பதைப் பூங்கா கவனத்திலே கொள்கிறது. ஆனால், இதற்கு பூங்கா முழுமையாகவும் பொறுப்பேற்க முடியாத நிலை. ஒவ்வொரு பூங்காவின் உள்ளடங்கிய படைப்புகளும் தெரிந்தெடுக்கும்போது, கீழ்க்கண்டவை அடிப்படை தேர்ந்தெடு விதிகளாகப் பயன்படுகின்றன.

 

1. ஓரளவுக்கேனும் தரமெனப் பூங்காவின் ஆசிரியர்குழுவினாலே அவ்வாரத்திலே கண்டறியப்படுவது; இதிலே எண்ணிக்கை கணக்கிலே கொள்ளப்படுவதில்லை

2. முன்வாரத்து தமிழ்மணம் நட்சத்திரம் இவ்வாரத்துப்பதிவுகளிலேயிருந்து தேர்ந்தெடுத்துத் தரும் பதிவுகள் சில (உங்கள் பதிவு இவ்வாரம் தேரப்பட்டதும் அவ்வாறே); இதிலே பூங்கா ஆசிரியர்குழுவின் தலையீடு பெருமளவு இருப்பதில்லை

3. வேறெங்கும் பதியப்படாதவை (இயலுமானவரை திண்ணை, பதிவுகள், கீற்று போன்ற வலைஞ்சிகைகளைத் தேடிப் பார்த்த பின்னரே படைப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்; குமுதம், மாலைமலர், தினபூமி, தினகரன் போன்ற அச்சுப்பதிவூடகங்களிலே தோன்றிய செய்தித்துணுக்குகளும் சேர்க்கப்படுவதில்லை)

4. பூங்காவுக்குத் தெரிவு செய்ய தமிழ்மணத்திலே அனுமதி தரப்பட்ட இடுகைகள் (சில சிறந்த படைப்புகள் அவற்றின் ஆக்கிகளாலே பூங்காவிலே சேர்த்துக்கொள்ளப்பட அனுமதி தரப்படுவதில்லை)

5. பதிவுகளிலே தோன்றும் தொடரிடுகைகள் வாராவாரம் சேர்க்கப்படுகின்றன

 

இவ்வாறான விதிகளின் வழிப்பட்ட கட்டுரைகளே ஒரு சிலரின் இடுகைகள் தொடர்ந்தும் தோன்றும் மயக்கம் ஏற்படுகின்றதென நம்புகிறோம். இயலுமானவரை, பல புதிய பதிவர்களைச் சேர்த்துக்கொள்கிறோம். இதன் ஒரு வழியாகவே சிறப்புத்தொடர்களும் அவர்களிடமிருந்து கேட்டுப்பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இன்னமும் இவ்வாரத்துப்புதியபதிவர் என்ற பகுதியையும் விரைவிலே சேர்த்துக்கொள்ள எண்ணமுண்டு.

 

புதிய பதிவர்களுக்கு அப்பால், நிச்சயமாக தகுதி, தரம் என்பன குறித்து பதிவுமட்டத்திலே எதுவிதமான விட்டுக்கொடுப்புகளும் செய்வதற்கில்லை. அப்படியாகச் செய்யப் பூங்கா முயற்சிப்பின், பூங்காவின் நோக்கம் சிதறடிக்கப்பட்டுப்போகுமென நம்புகிறோம்.

 

உங்களின் கட்டுரையின் ஒரு பகுதி நீக்கப்பட்டது குறித்து: இதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இஃது எவ்விதத்திலும் அறவியல்சார்ந்த சிக்கல் அல்ல; பதிவர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது, இயலுமானவரை பூங்காவுக்குப் பொருத்தமான படைப்புகள் எனக் கருதுகின்றதென்பதையே தேர்ந்தெடுக்கிறோம். அப்படைப்புகளிலே ஏதேனும் மாற்றம் உணர்த்தும் ஒலிப்பின் தன்மை காரணமாக வேண்டினால், பதிவரோடு தொடர்பு கொண்டு அவரின் உரிமை பெற்றே வெளியிடப்படுகின்றது. மொழியிலக்கணத்திருத்தங்களை மட்டுமே பூங்கா ஆசிரியர் குழு பதிவரிடம் கேட்காமல், ஆசிரியர் குழு என்ற உரிமையோடு செய்கிறது. நிதானமான ஒலிப்போடு முன்வைக்கப்படும் எப்படைப்பினதும் அறவியல் குறித்த பிரச்சனையும் நிச்சயமாக எமக்கில்லை.

 

உங்கள் படைப்பிலே நிகழ்ந்தது, உங்கள் கட்டுரையை உங்கள் பதிவிலிருந்து ஒற்றி, பூங்காவிலே ஒட்டும்போது ஏற்பட்ட ஒற்றற்றவறு; உங்கள் கட்டுரையின் கடைசிப்பந்தி ஒற்றும்போது விட்டுப்போயிருக்கின்றது. நீங்கள் சுட்டிக்காட்டியபின்னாலேயே கண்டு கொண்டோம். விட்டுப்போன பகுதியை விரைவிலே சேர்த்துக்கொள்வோம்.

 

தொடர்ந்தும் பூங்காவுக்கு உங்கள் இடுகைகளைச் சேர்த்துக்கொள்ள அனுமதி தருவதற்கும் தவறுகளெனத் தோன்றுபவைகளைச் சுட்டிக் காட்டுவதற்கும் நன்றி.

 

பூங்கா ஆசிரியர் குழு.

 
Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)