இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பட்டாம்பூச்சி விளைவுகள் Print E-mail
நிர்மல்   


Chaos Theory
Originally uploaded by
jurvetson.

எங்கோ ஏதோ நடக்குது எனக்கென்ன என்ற உயரிய கொள்கை(!) நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. எனக்கென்ன சித்தாந்தம் எல்லா நேரமும் வேலை செய்யாது என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கமாய் பட்டாம்பூச்சி விளைவுகளை கூறுவார்கள். காற்றில் நகரும் ஒரு பட்டாம் பூச்சியின் இறகு துடிப்பு எனும் சிறு நிகழ்வு பெரும் சூறாவளியை உண்டாக்கும் பெருநிகழ்வின் முதற்படியாகவும் இருக்கலாம். பனி மலைகளில் சிறு பனி உருண்டு விழும்போது பெரிதாவது போல் சிறு நிகழ்வுகள் பல தொடர்ந்து நிகழ்ந்து பெருநிகழ்வாக மாறுகின்றன.

எதிர்காலம் என்பது நிகழ்கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. எந்த ஒரு சிறு செயலும் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் சில நேரம் வெளிப்படையாகவும் , சில நேரம் மறைமுகமாகவும் பரவுகின்றன. அந்த பரவுதலின் தாக்கம் அடுத்த அடுத்த நிகழ்வுகளின் துவக்கத்தில் சேர பரவுதலின் விட்டம் அதிகரிக்கின்றது.

மில்லியன் விந்தணுக்களில் ஒன்று சினைமுட்டையுடன் சேர கரு உருவாகின்றது. இந்த சேருதல் என்னும் சிறு நிகழ்வு ஒரு உயிரை உருவாக்குகின்றது. அந்த உயிரின் உருவாக்கம் சமூகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளை உருவாக்குகின்றது. சில விந்தணுக்கள் முட்டையுடன் சேரும் சிறு நிகழ்வு ஏற்படாமல் போனால் உலகில் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். போர், நாட்டின் வளர்ச்சி, அமைதி, அறிவியல் வளர்ச்சி, வன்முறை வெறியாட்டம்,ஜாதிக் கட்சி போன்ற பல நிகழ்வுகளும் ஒரு சிறு நிகழ்விலிருந்தே தோன்றுகின்றன.

கேயாஸ் கருத்தாக்கம் எனப்படுவது கணிக்கமுடியாத,தொடர்ச்சியான, குறிப்பிட்ட இடைவெளி இல்லாத மாறிக்கொண்டே இருக்கக் கூடிய சூழல்களை அவதானித்து அவற்றை கணித வடிவப்படுத்தும் முயற்சியாகும். இந்த கருத்தாக்கத்தில் பட்டாம் பூச்சி நிகழ்வு குறிப்பிடதக்க ஒன்றாகும்.

 

http://sinthipoma.blogspot.com/2007/01/blog-post_30.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)