இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
அப்படிப் போடு அருவாளைன்னானாம்...! Print E-mail
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்   

கிரிக்கெட் ஒரு நாள் போட்டி ஆட்டத்தில் முன்னூறு என்கிற இலக்கை முதலில் தாண்டியது மே.இ.தீவுகள். எதிர்த்து ஆடிய இலங்கை இதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை 328 ரன்களைக் குவித்துவிட்டது. ஒரு பந்து மீதி. எதிர் கொண்டது சனத் ஜெயசூரியா. இழுத்தார் ஒரு இழுப்பு. பந்து பந்தாக அல்ல பஞ்சாகப் பறக்கிறது.. எல்லைக்கோட்டின் அருகே நெட்டிலிங்க மரத்துக்கும் சற்று குறைவான் உயரத்தில் கோர்ட்னி வால்ஷ். கையை உயரே தூக்கினார். பந்து சிக்கிக் கொண்டது. கோட்டைக் கடந்திருந்தால் 'சிக்சர்' இலங்கைக்கு வெற்றி. கடக்கவில்லை. மே.இ. தீவுகளுக்கு வெற்றி.
இது இப்படியென்றால் 400 என்கிற இலக்கை கடந்த முதல் அணி ஆஸ்தி்ரேலியா. இந்த இலக்கை எவன் தொட முடியும் என்கிற அதன் இறுமாப்புக்கு 'வேப்பிலை' அடித்தது தென் ஆஃப்ரிக்கா. சுளையாக 438 ரன்கள். 1999 உலகக்கோபையை வென்றிருக்க வேண்டியது இந்த அணிதான். ஆனால் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரு பந்தை கோட்டை விட்டார். அப்போது லண்டன் ஐ.பி.சி.வானொலியின் அழைப்பின் பேரில் நான் அங்கிருந்தேன். அப்போது கிப்ஸ் பந்தை மட்டும் அல்ல உலகக் கோப்பையும்  கோட்டை விட்டுவிட்டார் என்று வர்ண்னையில் சொன்னேன். அதே கிப்ஸ்தான் இந்தப்போட்டியைப் பொறுத்தவரை ஆஸியின்.சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்க உதவினார்.
இந்திய-மே.இ.தீவுகளின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 338 ரன்கள் குவித்தது ஷிவநாரயண் சந்திரபால் அதை ஒரு கை பார்ப்பார் என்ற நிலை ஏற்பட்டது. என்றாலும் கடைசிவரை ஆட்டமிழக்காமலிருந்தாலும் அவரால் அது முடியவில்லை.
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 'சொதப்பியது' உன்னைவிட நான் மோசமா என்ன என்று அதைவிட மோசமாக் 'சொதப்பி மே.இ.தீ.  தோற்றது. காயம் காரணமாக லாரா அணியில் இல்லை என்பது ஒரு சமாதானமே அல்ல. அதை 'நொண்டிச்சமாதனம் என்று நண்பர் ஒருவர் வர்ணித்தார். நான் அப்படிச் சொல்லத் தயாரில்லை. ஏனெனில் அந்தச்
சொற்றொடரே 'அதரப்' பழசு. அதுவும் ஊனமுற்றவர்களை புண்படுத்தும் பதப்பிரயோகங்களை நான் கையாள்வதில்லை.
மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் 265 என்பது ஒன்றும் மோசமான எண்ணிக்கை அல்ல. ஆனால் 'ஆடுகளம்' என்கிற பெயரில் உருவாக்கப்பட்டிருந்த அந்த வெட்டவெளி கட்டாந்தரையில் இந்த எண்ணிக்கை - அதுவும் மே.இ.தீவுகளுக்கெதிராக போதவே போதாது.
ஆறு விக்கட் இழப்புக்கு 245 என்ற நிலையிலிருந்து் மீண்டும்் 300 ஐக் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா 265 ரன்களுக்கு சுருண்டபோது  சரிதான் விக்கட்டுக்கு திடீரென்று உயிர் வந்துவிட்டது போலும் மே.இ.தீ. அவ்வளவுதான் என்று எண்ணியவர்களை லாராவின் அற்புதமான ஆட்டம் ஏமாற்றி விட்டது. முதன் வெற்றி ருசி மே.இ. தீவுகளுக்கு.
நான்காவது போட்டியில் காசைச் சுண்டிப்போடுவது லாராவுக்கு சாதகமாக அமைந்தும் இந்திய அணியை முதலில் ஆடச் சொன்ன இமாலயத் தவறை லாரா செய்தார்.
துவக்க ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா சென்னையில் தான் உதிர்த்த 'சிக்சர்'களும் பவுண்டரிகளும் அதிர்ஷ்டத்தின் விளைவல்ல் அது தன் திறமையின் பிரதிபலிப்பு என்பதை நிரூபித்தார். இடையில் சில காலம் தூங்கிப்போன கும்பகர்ணன் சச்சின் விஸ்வரூபம் எடுத்தார். 40 சதங்களால் நிரம்பியிருந்த அவரது வண்ணத் தொப்பியில் இன்னொரு பொன் இறகு ! தொடர்ந்து வந்த டிராவிடும் தன் சுபாவத்துக்கு எதிராக விளாசத் தொடங்கினார். தன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கும் கங்குலி மட்டும் கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவாரா என்ன்? டோனி 'மீன்குஞ்சல்ல' சுரா மீன். நீந்தியது அல்ல நீர் நிலையையே கலங்கடித்தார். 50 ஓவர்கள் நிறைவு பெற்றதும் ஆளை விட்டால் போதும் என்கிற நிலை மே.இ.தீவுகளுக்கு. வெந்த புண்ணில் வேலாக எதிகொள்ள வேண்டிய எண்ணிக்கை வேறு 341.
எடுத்த எடுப்பிலேயே ஐந்து விக்கட் இழப்புக்கு 85 என்பது நல்ல தொடக்கம் அல்ல. மே.இ.தீ தோற்கும் என்று தெரிந்தது ஆனால் இவ்வளவு மோசமாக 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும் என்பது யாரும் எதிர்பாராத்து. தலைகள் போய் வால்கள் சிறிது ஆடின அதையும் இந்திய பந்து வீச்சாளர்கள் ஒட்ட நறுக்கி விட்டார்கள்.
வெகு காலத்துக்குப் பிறகு மூன்றுக்கு ஒன்று என்கிற அளவில் ஒரு தொடர் வெற்றி. அடுத்து உலகக் கோபை வருகிறது அதற்கு முன்பு இலங்கை வருகிறது என்ன நடக்கிறது பார்ப்போம். இது இரு நாடுகளுக்கிடையிலான போட்டி என்று மட்டும் கருதப்படவில்லை இரண்டு நாட்டின் பயிற்சியாளர்களான் ஆஸ்ததிரேலியாவைச் சேர்ந்த் கிரக் சப்பலுக்கும் டொம் மூடிக்கும் இடையிலான போட்டி என்றும் கணக்கிடப்படுகிறது.

பார்க்கலாம் எந்த  பயிற்சியாளர் கை ஓங்குகிரது என்று?.
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)