--------------------------------------------------------------------------
பூங்கா குறித்து வாசகர்கள் பூங்காவிற்கு வந்த எதிர்வினைகள் இங்கே பதிவாகும்.
http://poongaa.com/component/option,com_contact அல்லது
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
From: லட்சுமி
Date: Jan 29, 2007 1:47 AM
Subject: Poonga: thanks
To:
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
பூங்காவிற்கு நன்றி.
என்னுடைய பதிவுகளை பூங்காவில் இட்டு ஊக்கபடுத்தி வருவது விருது வாங்குவது போன்ற உணர்வைத் தருகிறது. மேலும் நன்கு எழுதவேண்டும் எனும் உத்வேகத்தை தருகிறது.
+++++++++++++++++++++++++++++++++
From: Laxminarayan Vikaram
Date: Feb 4, 2007 3:27 AM
Subject: Poonga: திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு: ஒரு தமிழ்க் கருவூலம்
To:
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
பூங்காவிலே திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு: ஒரு தமிழ்க் கருவூலம் என்று ஜடாயு என்பவர் எழுதியுள்ளார். நெட்டிலே திண்ணை மெகசீனில் வந்த கட்டுரை இது. மெகசீனில் வந்த கட்டுரை இது. ஒரு மெகசீனில் வந்ததை இன்னொரு முறை நீங்கள் சேர்ப்பது ஏன்?
~~~
பூங்காவிலே சேர்த்துக்கொள்ளப்பட்ட இடுகை குறித்த சுட்டிக்காட்டுதலுக்கு நன்றி. அது தோன்றிய இணைப்பின் சுட்டியினையும் தந்திருப்பின், மேலும் பயனாகவிருந்திருக்கும். பதிவர்கள் தமது இடுகைகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கும்போது பூங்காவுக்குச் சேர்த்துக்கொள்ள, பூங்கா விதிகளுக்குச் சம்மதித்தே தருகின்றனர். முடிந்தவரை, பூங்கா ஆசிரியர் குழு, இணைய வலைஞ்சிகைகளிலே பூங்காவிலே சேர்த்துக்கொள்ளப்படத் தேர்தெடுக்கப்பட்ட இடுகைகள் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டிருக்கின்றதா என்று தேடியபின்னரே வெளியிடுகின்றது. மனிதவழுவின் காரணமாக ஓரிரு இடுகைகள் பிறிதெங்கேனும் தோன்றியபோதுங்கூட, தவறிச் சேர்க்கப்பட்டுவிடுகின்றது. பூங்காவுக்குச் சேர்த்துக்கொள்ள அனுமதி தரும் பதிவர்களே இதிலே பதிப்புத்தார்மீகத்தினைத் தம் கையிலே கொண்டு, ஓரிடத்திலே மட்டும் பதியப்பட்ட அனுமதி வழங்கவேண்டுமென நம்புகின்றோம். அப்போது மட்டுமே முழுமையாக ஓரிடுகை- ஒரு வலைஞ்சிகை எனத் தேர்வும் பதிப்பும் இருக்கமுடியும்.
ஆசிரியர் குழு
.
|