உயர் இரத்த அழுத்தம் (hypertension) என்பது இரத்த நாளங்களில், வழக்கத்துக்கு முரணான வகையில் மிக அதிக அழுத்தம் ஏற்படுவதாகும். பெரும்பாலானோர், அதிக கோபம், படபடப்பு, மனஅழுத்தம் போன்றவைகளையே இரத்த அழுத்தம் எனப் பொருள் கொள்கின்றனர். ஆனால் மருத்துவ துறையைப் பொருத்தவரை, ஹைபர்டென்சன் என்பது, ஒரு உள்ளுரை நோய், காரணமில்லாத உயர் இரத்த அழுத்தம். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் பல வருடங்கள் நமக்கு உள்ளிருந்தாலும், அதற்கான அறிகுறிகள் எதுவும் வெளியில் தென்படுவதில்லை. எப்போது நமக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியவரும் என்றால், நம் அத்தியாவசிய உறுப்புகள் அல்லது இதய பாகங்கள் பாதிக்கப்படும்போதுதான். எனவேதான் இந்நோய் ஒரு "அமைதி உயிர்கொல்லி நோய் ( silent killer ) என அழைக்கப்படுகிறது.
கட்டுப்படுத்தப் படாத உயர் இரத்த அழுத்தமானது, திடீரெனத் தாக்கும், உடற்பாகம் செயலிழந்து போகும் நோயான பக்கவாதம் (stroke) , இரத்தக் குழாய் பலூன் மாதிரி உப்பிக்கொள்ளும் நோயான அன்யுரிசம்(aneurysm), இரத்தக் குழாய்கள் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தம் பாய்ச்ச மறுக்கும் இதய நோயான ஹார்ட் ஃபெயிலியர் ( heart failure), திடிரென ஏற்படும் இதய தாக்குதல் வலி நோயாகிய ஹார்ட் அட்டாக் (heart attack) மற்றும் சிறுநீரகம் செயலிழந்து போதல் போன்ற பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நாம் இரத்த அழுத்தத்தை சோதிக்கும் போது, இரண்டு மதிப்பீடுகள் (எண்களாக) ஒன்றின் கீழ் ஒன்றாக பதிவு செய்யப்பெறும். ஒன்று, அதாவது மேலிருக்கும் எண் இரத்த தமனி குழாய்கள் அல்லது நாளங்களில் காணப்படும், அதிகபட்ச இரத்த அழுத்ததின் அளவு ஆகும். இதயம் இரத்தம் பாய்ச்சுகையில், இதய தசைகள் சுருங்குமல்லவா? ந்த சுருங்கியக்கத்தின் போது, (மருத்துவத்தில் இது systolic pressure எனப்படும்) எடுக்கப்படுவது. கீழிருக்கும் இரண்டாவது எண் மதிப்பு, சுருங்கிய இதயம் விரிவடையும் போது (diastolic pressure), இரத்த குழாய்கள் அல்லது நாளங்களில் காணப்படும் மிகக்குறைந்த அழுத்த மதிப்பாகும். உயர் இரத்த அழுத்தம் அதிக இதய சுருங்கியக்க அழுத்தம்/இதய விரிவியக்க குறைவழுத்தம் எனக் குறிக்கப் பெருகிறது. எடுத்துகாட்டாக, 120/80 மில்லி மீட்டர் பாதரச அளவு (mm H g), என ஒருவரது இரத்த அழுத்த அளவு குறிக்கப்பட்டிருந்தால், அது இயத சுருங்கியக்கத்தின்போது ஏற்பட்ட உயர் அழுத்தம் 120 mm Hg / இதய விரிவியக்கத்தின் போதேற்பட்ட குறைவழுத்தம் 80 mmHg எனக் கொள்ள வேண்டும். இதய சுருங்கியக்கத்தின் போது அதிக அழுத்தம் 140 மில்லி மீட்டர் பாதரச அளவுக்கு சமம் அல்லது அதற்கு அதிகம் இருந்தாலோ, இதய விரிவியக்க அழுத்தம் 90 mmHg யாகவோ அதற்கு மேலிருந்தாலோ அது உயர் இரத்த அழுத்தம் எனப்படும். அதிக இரத்த அழுத்தம் அதிக ஆபத்தை விளைவிக்கும். முறையான இரத்தம் அழுத்தம் உடையோருக்கும் சில வேளைகளில் இதய நோய்கள் ஏற்படுபவதால், இந்த மதிப்பீடுகள் அறுதியானவை அல்ல. மேலே சொன்ன மதிப்பீடுகளில் இதய அழுத்தம் உள்ளோர் பெரும்பாலும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் இவ்வளவுகள் காட்டப்படுகின்றன.
உயர் இரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பான்மையோருக்கு இதய சுருங்கியக்க அழுத்தமும், விரிவியக்க அழுத்த குறைவும் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக இரத்த உயர் அழுத்த நோயுள்ள, முதிய வயதினருக்கு பெரும்பாலும் இதய சுருங்கியக்க அழுத்தம் அதிகமாகவும் (140 மில்லி மீட்டர் பாதரச அளவு அல்லது அதற்கு மேல்) , இதய விரிவியக்க அழுத்தம் குறைவாகவும் (90 மில்லி மீட்டர் பாதரச அளவு அல்லது அதற்கு குறைவாகவும்) உள்ளது. இந் நிலை இதய விரிவியக்க, சுருங்கியக்க இரத்த அழுத்தம் (isolated systolic hypertension) என அழைக்கப்படுகிறது. உடலே தானாக கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தம்நம் உடலே, தானாக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது. எவ்வளவு அளவு இரத்தம் உடலுக்கு பாய்ச்ச வேண்டும் என்பதையும், இரத்த தமனி அல்லது நாளங்களின் குறுக்களவையும், இரத்த குழாய்களின் இரத்த அளவையும் தானாக நம் உடல் தேவையான போது மாற்றிக் கொள்ளும். இரத்த அழுத்தம் அதிகம் தேவைப்படின் நம் இதயம் தானாக அதிக அளவு இரத்ததை, அதிக அழுத்தமாக தொடர்ந்து அழுத்தும் (pumping). சிறிய தமனிகள் அல்லது இரத்த நாளங்களைச் சுருக்கி, குறுகியதாக்கி, அதன் வழியே ஒவ்வொரு இதயத் துடிப்பின்போதும் அதிக அழுத்ததுடன் இரத்தத்தை இதயம் பாய்ச்சும். இரத்த நாளங்களில் இடம் குறுகி இருப்பதாலும், அதன் வழியே பாயும் ஒரே அளவு இரத்தம், இரத்த அழுத்த நோய்க்கு காரணமாகிவிடும். நாளங்கள் தங்கள் இரத்தக் கொள் அளவைக் குறைக்க தாமாகவே சுருங்கி, தமினிகளில்(குழாய்கள்) இரத்தம் பாய அதிக அழுத்தம் ஏற்படுத்தும். அதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இரத்த ஓட்ட பாகங்களில் திரவங்கள் சேர்ப்பதால், இரத்ததின் அளவு அதிகமாக, இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. அதேபோல், இதற்கு மாறாக, இரத்த அழுத்ததை குறைக்க, இதயம் குறைந்த அழுத்தத்தில் தொடர்ந்து இரத்தத்தை அழுத்துவதால், தமனி குழாய்களும், நாளங்களும் அகலமாகும், திரவங்கள் இரத்த ஓட்டப் பாதையிலிருந்து நீக்கப்படும். இதயத்தின் இச் செயற்பாடுகள், நமதுடம்பில், தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலத்தின் (இத்தைய தன்னிச்சையான நரம்பு மண்டலம், நமது உடலின் மத்திய நரம்பு மணடலத்தின் ஒரு பகுதியாகும். இவை உடலின் உள்ளியக்கங்களை தாமாகவே, தன்னிச்சையாக ஒழுங்குபடுத்தும்.) ஸிம்பத்திடிக் பகுதி என்ற முக்கியப் பகுதியாலும், சிறுநீரகங்களாலும் கட்டுப்படுத்தப் படுகின்றன. நரம்பு மண்டலத்தின் ஸிம்பத்டிக் பகுதி பல்வேறு வகைகளில், சட்டென ஆபத்துக்கள் வரும்போது, (இது fight-or-flight response என்று அழைக்கப்படுகிறது) தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.
நரம்பு மண்டலத்தின் இப்பகுதி, தன்னிச்சையாக சிறுநீரகங்களின் மேல் உள்ள சுரப்பிகளைத் தூண்டிவிட்டு, எப்னிஃப்ரின் என்ற ஹார்மோன்களை வெளிப்படுத்தச் செய்கிறது. இத்தகைய ஹார்மோன்கள் இதயத்தை இரத்தக் குழாய் சுவர்களை சுருக்கவும், விரிக்கவும் தூண்டி, அதை வேகமாகவும், அழுத்தமாகவும் துடிக்கச் செய்கின்றன. இரத்தக் குழாய்ச் சுவர்கள் விரிவான தமனிகளுக்கு தேவையான, அதிக அளவு இரத்தம் செலுத்தப்பட வேண்டும். எலும்புக் கூட்டில் உள்ள தசைகள் மற்றும், உணர்வுகளால் கட்டுப்படுத்தப்படும் தசைப்பகுதிகளில் இருக்கும் இரத்த தமனிகளுக்கு அதிக அளவில் இரத்தம், நாளங்கள் விரிவடைவதால் தேவைப்படுகிறது. தன்னிச்சை நரம்பு மண்டலத்தின் ஸிம்பத்திடிக் பகுதி சிறுநீரகங்களைத் தூண்டி, உடலுக்கு தேவையில்லா கழிவு நீரையும், உப்பையும் பிரிக்கும் செய்கையை குறைத்து, இரத்த அளவை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்த மாறுபாடு சிறுநீரகத்தின் செயற்பாட்டையும் நேரடியாக பாதிக்கிறது. இரத்த அழுத்தமும், சிறுநீரக செயல்பாடும் ஒன்றுக் கொன்று தொடர்புடயவை. அதிக இரத்த அழுத்ததின் போது சிறுநீரகம் அதிக நீர் மற்றும் உப்பை கழிவாக்குகிறது. அதனால் இரத்ததின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் ஒழுங்கு படுத்தப் படுகிறது. அதுபோல இரத்த அழுத்தம் குறையும் போது, குறைவான அளவு நீர் மற்றும் உப்பை மட்டுமே சிறுநீரகம் பிரித்து கழிவுப் பொருட்களாக்குகிறது. இதனால் இரத்தின் அளவு அதிகரிப்பட்டு, இரத்த அழுத்தம் கட்டுக்குள் ஒழுங்காக வைக்கப்படுகிறது. சிறுநீரகம், ரெனின் ( renin) என்ற என்ஸைம்களைப் பிரிப்பதன் மூலம், ஆன்ஜியோடென்ஸின் II ( angiotensin II) என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்து, இரத்த அழுத்ததை, அதிகரிக்கச் செய்யும். ஆன்ஜியோடென்ஸின் II, இரத்த அழுத்ததை அதிகரிப்பதால் நாளச் சுவர்களை சுருங்கச் செய்து, அல்டோஸ்ட்ரோன் (aldosterone) என்ற மற்றொரு ஹார்மோன்களை வெளிவரச் செய்கிறது. அல்டோஸ்ட்ரோன், சிறுநீரகத்தின் இயக்கத்தை வேகப்படுத்தி, நீரையும், உப்பையும் பிரிக்கச் செய்கின்றது.
| இரத்த அழுத்ததை ஒழுங்கு படுத்துதல்: ரெனின் - ஆன் ஜியோடென்ஸின் II - அல்டோஸ்ட்ரோன் அமைப்பு (Renin-Angiotensin-Aldosterone System) |
|
|
மேற்காட்டியுள்ள ரெனின் - ஆன்ஜியோடென்ஸின் II - அல்டோஸ்ட்ரோன் அமைப்பானது (renin-angiotensin-aldosterone system) ஒரு இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் தொடர்வினையயகும். 1. இரத்த அழுத்தம் குறையும் போது ( இதய சுருங்கியக்கம் 100 மில்லி மீட்டர் பாதரச அளவாகவும் அல்லது அதற்கு குறைவாகவும் இருக்கும் போது), சிறுநீரகம், ரெனின் என்ஸைம்களை வெளியிட்டு, இரத்த ஓட்டப் பாதையில் கலக்கச் செய்கிறது. 2. ரெனின் என்ஸைம்கள், ஆன்ஜியோடென்ஸின் ஹார்மோன்களை பிளவு படுத்துகிறது அல்லது பிரிக்கிறது. இரத்த ஓட்டப் பாதையில் சுற்றும் பெரிய அளவு புரதங்களை பிளப்பதால் ஏற்படும் ஹார்மோன்கள்தான் ஆன்ஜியோடென்ஸின் I எனப்படும். 3. அதிகம் செயல்படாத, இந்த ஆன்ஜியோடென்ஸின் I, மீண்டும் ஆன்ஜியோடென்ஸின் மாற்று என்ஸைம்களாக ( angiotensin-converting enzyme (ACE)) பிரிக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் ஆன்ஜியோடென்ஸின் II என்கிற அதிகம் செயல்படுகின்ற, அவசியமான ஹார்மோன்கள் ஆகும். 4. ஆன்ஜியோடென்ஸின் II ஹார்மோன்கள், சிறிய, இரத்த நாளச் சுவர்களை சுருக்கி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இந்த ஆன்ஜியோடென்ஸின் II, அல்டோஸ்ட்ரோன் என்கிற மற்றொரு ஹார்மோன்களை வெளியிட சிறுநீரகங்களின் மேற்புறமுள்ள சுரப்பிகளை தூண்டுகின்றன. அல்டோஸ்ட்ரோன் ஹார்மோன்கள், சிறுநீரகங்களை உடலில் உள்ள உப்புகளைப் பிரித்து, சோடியம் உப்ப தக்க வைத்துக் கொண்டு, பொட்டாசியம் உப்பை கழிவுப் பொருளாக்குகிறது. சோடிய உப்பு நீரை தக்க வைக்கவும், இரத்த அழுத்தம் மற்றும் அளவை அதிகரிக்க உதவுகிறது. பொதுவாக ஒருவருடைய மனநிலையிலோ அல்லது இயக்கத்திலோ மாறுதல் ஏற்படுவது இரத்த அழுத்தத்த சற்றே அதிகரிக்கிறது. அதே சமயம் உடலின் மற்றொரு இயக்கம் இதற்கு எதிரான இயக்கத்தை செய்வித்து இரத்த அழுத்தத்தை மறுபடியும் பழைய நிலைக்கே கொண்டு வருகிறது. ஒரு மனிதனின் வாழ்நாளில் இரத்த அழுத்தம் நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கும். கைக்குழந்தைகளும் சிறுவர், சிறுமிகளும்,
இளவயதினரைவிட குறைந்த இரத்த அழுத்தம் கொண்டிருப்பர். வயதுக்கேற்றவாறு இரத்த அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே வரும். இயந்திரமயமான அமெரிக்கா போன்ற நாடுகளில் தகைவின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது இயல்பே. சுருங்கியக்கத்தின் போது ஏற்படும் இரத்த அழுத்தமானது வயதாக, வயதாக அதிகரித்து கொண்டிருக்கும். ஆனால் இதயம் விரியும் போது ஏற்படும் அழுத்தம் 60 வயது வரை அதிகரித்து பின் அப்படியே நிலையாகி விடும். வளரும் நாடுகளில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவது இல்லை. இதற்கு உடல் உழைப்பு அதிகமாக இருப்பதும் ஒரு காரணம்.இரத்த அழுத்தம் சோதித்துப் பார்த்தால், காலையில் சோதிக்கும் போது இருக்கும் அழுத்தம் அதிகமாகவும், மாலையில் சற்று குறைந்தும் இருக்கும். வீட்டிலேயே இரத்த அழுத்தத்தை பரிசோதனன செய்து கொள்வோர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எப்போதும் செய்து கொள்வது நல்லது. ஒருவித காரணமும் இல்லாமல் அதிகமாகும் இரத்த அழுத்தம் முதல் நிலை இரத்த அழுத்தம் (primary hypertension) ஆகும். 80 முதல் 90 சதவிகிதம் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முதல்நிலை இரத்த அழுத்தமே கொண்டுள்ளனர். இதயத்திலும் இரத்த குழாய்களிலும் ஏற்படும் நிறைய மாற்றங்கள் இத்தகைய இரத்த அழுத்தத்தை உருவாக்கும். ஒரு நிமிடத்தில், இதயம் வெளியேற்றும் இரத்தம் அளவு அதிகரிக்க கூடும். ஆனால் அவற்றை கொண்டு செல்லும் குழாய்கள் விரிவடையாவிட்டால், அல்லது கொழுப்பு முதலானவை சேர்ந்து எதிர்ப்பு அதிகமானால் இரத்த அழுத்தம் ஏற்படும். இன்னும் சிலருக்கு பரம்பரையாக இரத்த குழாய்கள் சுருங்கி இருக்கக்கூடும். இதனால் அதிக இரத்தம் பாய்ந்து செல்ல முடியாமல் எதிர்ப்பு அதிகமாகி அழுத்தம் அதிகரிக்கும். உடலில் ஏற்பட்டுள்ள சில பாதிப்புகளினாலும் இரத்த அழுத்தம் அதிகமாகும். இது இரண்டாம் நிலை (secondary) இரத்த அழுத்தம் எனப்படும். சிறுநீரகங்களில் ஏற்படும் கோளாறுகளால், அது உப்பையும், அதிக நீரையும் வெளியேற்ற முடியாமல் போகும். இதனால் இரத்த அளவு அதிகரித்து, அழுத்தம் அதிகமாகலாம்.
அறிகுறிகள்:
பெரும்பாலோருக்கு உயர் இரத்த அழுத்த நோயானது எந்த அறிகுறிகளையும் வெளிக் காட்டுவதில்லை. பொதுவாக தலைவலி, மயக்கம், மூக்கில் இருந்து இரத்தம் வருதல், அடிக்கடி சோர்வடைதல் போன்றவை ஏற்படலாம்.மிகவும் அதிகமான இரத்த அழுத்தம் மருத்துவர்களால் கவனிக்கப்படவில்லையெனில், மூளை, கண்கள், சிறுநீரகங்கள், மற்றும் இதயத்தை அது பாதிக்கும். இதனால் கலங்கலான பார்வையும், வாந்தி வருவது போன்ற உணர்ச்சியும் ஏற்படும். இன்னும் சிலருக்கு பக்கவாதம் ஏற்படலாம். மூளை செயலிழந்து போகும் கோமா ஏற்படலாம். இது ஹைபர்டென்சிவ் என்செபலோபதி என குறிப்பிடப்படுகிறது. இது உடனடியாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நிலையாகும்.இரத்த அழுதத்தின் சிகிச்சை அதன் தீவிரத்தை பொறுத்தே அமையும். காட்டாக, 160/92 இருக்குமானால் அது இரண்டாம் கட்ட இரத்த அழுத்தம் எனவும், 150/115 இருந்தால் அது மூன்றாம் கட்ட இரத்த அழுத்தம் எனவும் மருத்துவர்களால் பரிந்துரைக்க படுகிறது.
| |
| வகை |
சுருங்கியக்க இரத்த அழுத்தம் |
இதயம் விரிவடையும் இரத்த அழுத்தம் |
கவனிக்க வேண்டிய அறிவுரைகள் |
| சாதாரண இரத்த அழுத்தம் |
130க்கு கீழே |
85 க்கு கீழே |
2 வருடத்திற்கு ஒருமுறை பரிசோதனை |
| அதிக இரத்த அழுத்தம் |
130-139 |
85-89 |
வருடத்திற்கு ஒருமுறை பரிசோதனை, உடற்பயிற்சி செய்ய அறிவுரைகள் |
| முதல் கட்ட ஆரம்ப நிலை |
140-159 |
90-99 |
ஒரு மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை, உடற்பயிற்சி, எடை குறைப்பு, உணவில் கட்டுபாடு போன்றவை |
| இரண்டாம் கட்டம்(மிதமான நிலை) |
160-179 |
100-109 |
மருந்துகள் கொடுக்க ஆரம்பித்தல் |
| மூன்றாம் கட்டம் (தீவிரம்) |
180 க்கு அதிகம் |
110க்கு அதிகம் |
உடனடி கண்காணிப்பு |
உடற்பருமன் உள்ளவர்கள் அதிக இரத்த அழுத்தம் இருந்தால், உடற்பயிற்சியோ உணவு கட்டுபாடோ கொண்டு எடையை குறைக்க வேண்டும். 5 கிலோ எடை குறைவதுகூட இரத்த அழுத்ததை கட்டுப்பாடிற்குள் கொண்டு வரும்.கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் உணவில் கட்டுபாட்டை கொண்டுவருவதும், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்துவதும் நலம் தரும். உப்பை குறைத்து கொள்வதும் (அதே நேரம் பொட்டாஸியத்தின் அளவை சீராக வைத்திருக்க வேண்டும்), குடிப்பதை குறைத்து கொள்வதும் (ஒரு நாளைக்கு 24 அவுன்ஸ் பியரும் அல்லது 8 அவுன்ஸ் ஓயின் அல்லது 2 அவுன்ஸ் மிக சக்திவாய்ந்த விஸ்கி போன்றவை) என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். விறுவிறுப்பாக 20 நிமிடம் நடப்பதும், ஓடுவதும் இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதை தவிர மருத்துவர்கள் தேவை என்று தீர்மானித்தால் இரத்தத்தில் உள்ள நீரை பிரித்து அளவை குறைத்து இரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும் மருந்துகள், அல்லது கால்சியம் வழிகள் (calcium channel) வேலை செய்வதை சீராக்கி இரத்த அழுத்ததை குறைக்கும் மருந்துகள், கொழுப்பை குறைத்து இரத்த அழுத்ததை குறைக்கும் மருந்துகள் இன்னும் இதய சுருங்கி விர்வதை சீராக்கும் மருந்துகள் என பலவகையில் ஒன்றை தேர்ந்தெடுத்து வழங்குவதன் மூலம் இரத்த அழுத்ததை குறைத்துக்கொள்ள முடியும்.
|