இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
யாகூவும் தமிழில் … Print E-mail
விக்கி   

யாகூ இந்தியா, இந்திய மொழிகளில் தனது சேவையை துவங்கியிருக்கிறது ( via: oosi ).  தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஏழு மொழிகளில் யாகூ தளத்தின் முகப்பு அமைந்திருக்கிறது.  யாகூ மெசஞ்சர்களிலும் தமிழில் சாட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே மைக்ரோசாஃப்டின் MSN India, தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தனது சேவையைத் தொடங்கியிருக்கிறது.  இப்போதைக்கு இந்த இரு  சேவைகளிலும் முகப்பு பக்கத்தில் மாநில மொழிகளில் செய்திகளும் அந்நிறுவனத்தில் மற்ற சேவைகளுக்கான சுட்டிகளும் அமைந்துள்ளன. அடுத்ததாக அனைத்து சேவைகளையும் மாநில மொழிகளில் தர முயற்சிகள் மேற்கொள்ளும் என நம்புகிறேன். இரண்டு சேவைகளும் unicode வசதியில் அமைந்திருக்கிறது.

 

இணையத்தைப் பொறுத்தளவில் மாநில மொழிகளுக்கென உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழில் அதிகரித்து வரும் தமிழ் வலைப்பதிவுகளே இதற்குச் சாட்சி. ஆனாலும் தமிழைப் பொறுத்தளவில் செய்திகளுக்காக இணையத்தள சேவைகள் அதிகம் இல்லை. அவ்வாறு இருக்கும் சேவைகளும் 90களின் இணையப்பக்கங்களின் வசதியைக் கொண்டே அமைந்திருக்கிறது. யாகூ, மைக்ரோசாஃப்ட் போன்ற பெருந்தலைகள் களத்திலிறங்கியிருப்பது தரத்தையும் போட்டியையும் அதிகரிக்கும்.

 

பெரிய நிறுவனங்கள் மாநில மொழிகளுக்கு வருவதில் இன்னொரு மிகப்பெரிய advantageம் இருக்கிறது. மாநில மொழிகளில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு மிகமுக்கிய காரணமாய் நான் கருதுவது, மாநில மொழி தளங்களின் மூலம் வருவாய் ஈட்டும் வழி இல்லாததுதான். Google உள்ளிட்ட adsense முறைகள் இன்னும் தமிழ் வலைத்தளங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இப்போது அவர்களே மாநில மொழிகளுக்கு வருவதால் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட அவர்களே வழிவகைகளை உருவாக்குவார்கள்.

 

என்னைப்பொறுத்தளவில் இணையத்தில் தமிழைப் பொறுத்தவரை முக்கிய இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இது காலத்தில் கட்டாயமும் கூட :)

இணையத்தில் தமிழ் குறித்து நான் முன்னர் எழுதிய இடுகைகள்:

இணையத்தில் தமிழ் ஊடகங்கள்

தமிழில் கூகுள் ஆட்சென்ஸ்??

தமிழ் வலைப்பதிவுகளில் Google Ads

 

 

http://vicky.in/dhandora/?p=302

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)