இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சூப்பர் பவ்ல் 41 Print E-mail
வாசன்   

அமேரிக்கக் கால்பந்து பலராலும் எளிதாக தவறாக புரிந்து கொள்ளப்படும் விளையாட்டு. ஏதோ கற்கால மனிதர்கள் அடித்து மோதிக் கொள்வதாய்ப் பலரும் கற்பிதம் செய்து கொள்ளும் ஆட்டம். ஓகஸ்ட் மாதம் கடைசி ஞாயிறு அல்லது செப்டெம்பர் முதல் ஞாயிறு தொடங்கி, பெப்ரவரி முதல் ஞாயிறு வரை பலருடைய ஓய்வு நேரத்தின் பெரும்பங்கை எடுத்துக் கொள்ளும் விஷயம். ரொம்ப நல்ல சமாச்சாரம். இன்று இவ்வருடத்திய கடைசி சேம்பியன்ஷிப் போட்டி எனும் ‘சூப்பர் பவ்ல் ‘ மயாமி நகரம், ப்ளாரிடாவில் நடக்கவிருக்கிறது. 120 மில்லியன் அமேரிக்கர்களாலும் மற்றும் பல விளையாட்டை ஓரளவு புரிந்து கொண்ட, அடிப்படை விதிகள் கூட அறியாத உலக விசிறிகளாலும் (232 நாடுகள்) கண்டு களிக்கப்படும் நிகழ்ச்சி.

 

என் உளம் கவர்ந்த டென்வர் வெண்குதிரைகள் முதல் சுற்று ஆயத்த இறுதி போட்டியில் கூட பங்கு பெறாத இவ்வருடத்திய சூப்பர் பவ்ல் தனிப்பட்ட முறையில் மற்றொரு விளையாட்டு போட்டிதான், ஒரு முன்னோடியான, திருப்புமுனை போட்டி என்பதைத் தவிர. அமேரிக்கக் கால்பந்தின் ‘உலக’ சேம்பியன் போட்டியில் பங்கு பெறும் இரு அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் ( head coach ) இருவரும் கறுப்பினத்தவராய் அமைவது இதுதான் முதல் தடவை. 75 விழுக்காடு என்றளவில் விளையாட்டு வீரர்கள் கறுப்பினத்தவராய் இருக்கும் விளையாட்டு அ.கால்பந்து என்றாலும், தலைமைப் பதவிகள் வகிப்பதில் கறுப்பினத்தவர்கள் போன்ற சிறுபான்மையினர்களுக்கு பல வருடங்கள் வாய்ப்புகள் இல்லாமலிருந்து வந்தது. இறுதிப் போட்டியில் பங்கு பெறும் தலைமைப் பயிற்சியாளர்கள் டோனி டஞ்சி & லவ்வி சிமித் இருவரும் உழைப்பால் படிப்படியாக உயர்ந்தவர்கள். ஒருவர் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர். மற்றொருவர் டெக்சஸ் மாநிலத்தின் சிற்றூரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, கனவுகளை மெய்பித்துக் காட்டியவர். இவ்வகையில் மனதிற்குப் பெரும் உவகை தரும் நிகழ்வாக இவ்வருடத்திய போட்டி அமைகிறது. வரும் காலத்தில், புதிதாகத் தலைமைப் பயிற்சியாளராக அமையக் கூடியவர்களின் பெயர்களில், டென்னசி டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக இருக்கும் Norm Chow என்ற ஆசிய அமேரிக்கரின் பெயரும் உண்டு,

 

இறுதிப் போட்டியில் பங்கு பெறும் Indianapolis Colts எப்போதும் எனது டென்வர் வெண்குதிரைகளைக் கவிழ்ப்பவர்கள். இளங்குதிரைகளான கோல்ட்ஸ் பெரும் குதிரைகளான் ப்ராங்கோஸ் ஐக் கவிழ்ப்பது சகஜம் என்றெல்லாம் சமாதானம் அடைய முடியாது. ஏனெனில் இது கால்பந்து, வாழ்க்கையைவிட இன்றியமையாதது. ஆயினும் கோல்ட்ஸ் அணி, ப்ராங்கோஸ் பங்கு பெறும் அமேரிக்கன் கான்பரன்ஸைச் சேர்ந்தது. Fraternal உறவு உள்ள அணி.

 

போட்டியின் மற்றொரு அணியான ஷிகாகோ பேர்ஸ் ( கரடிகள் ) பாரம்பரியம் நிறைந்த அணி. Monsters of the Midway என மத்திய மாநிலங்களின் நாயகனாக அன்புடன் அழைக்கப்படும் அணி. கரடிகளின் தலைமை வீரர் எமது நியு மெக்சிக்கொ மாநிலத்தைச் சேர்ந்தவர், பெயர் ப்ரயன் எர்லாக்கார். பள்ளி, கல்லூரி படிப்பு என அனைத்தையும் சொந்த மாநிலத்திலேயே முடித்து பெரும் புகழ் பெற்றுக் கொண்டுள்ளவர். எங்கு இருந்து வந்தோம் என்பதை மறக்காதவர். கடந்த வருடம் நியு மெக்சிக்கொ பல்கலைக்கழகத்திற்கு $ 500,000.00 அமேரிக்க வெள்ளி நன்கொடை அளித்தவர்.

 

பல நாட்களாகப் பெரிய தலைவேதனை எனக்கு. இரண்டு அணிகளுக்குள் எந்த அணி வெற்றி பெற நான் விரும்ப வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. மகன் எப்போதும் வெற்றி பெறப் போவதாக ஆரூடம் சொல்லப்படும் அணி பக்கம் சாய்பவர். அவர் கோல்ட்ஸ் அணிப் பக்கம் முழுதும் சாய்ந்துவிட்டார். நாலைந்து வாரங்கள் முன்பு இதே அணி மீது சாபம் விட்டுக் கொண்டிருந்த பொடி ஆசாமி, இவர்.

 

நேற்று இரவு யோசித்து, யோசித்துப் பார்த்ததில் மண்பாசம் வென்றுவிட்டது. நியு மெக்சிக்கொ புகழ் எப்படியாவது பரவினால் சரி; ஏன் கொஞ்சமாக வெளி உலகிற்குத் தெரிய ஒரு அரிய வாய்ப்பு என்பதும் ஒரு காரணம்.

 

‘விளையாட்டு உலகம்’ வாய்ப்புகள் வெகு குறைவு எனப் பிதற்றினாலும் - எல்லோர் முகத்திலும் கரி பூசுவார்கள் கரடிகள் என நம்பி - GO BEARS ! YOUR ARE THE NEXT WORLD CHAMPIONS !

Photobucket - Video and Image Hosting

 

சூப்பர் பவ்ல் பார்த்து ரசிக்கவிருக்கும் விசிறிகள், ஏறத்தாழமான விசிறிகள் அனவைருக்கும் ** அமேரிக்கக் கால்பந்து ** இது உலகின் தலைசிறந்து விளையாட்டு - பார்த்து ரசியுங்கள் என இப்பதிவு வழியாகச் சொல்ல விழைகிறேன் !!

 

பி.கு : இந்தியத் தமிழர்களுக்குப் பிறந்த, அமேரிக்க இந்தியர் வின்னி ஐயர் Super Bowl பற்றிச் சொல்லியுள்ளதை இங்கு படிக்கலாம் வின்னி ஐயர்

 

http://vassan.kollidam.com/?p=38

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)