இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
Reduce tuion fee- Day of action Print E-mail
வி. ஜெ. சந்திரன்   

இது கனடாவில் இன்று அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக, கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்குமாறு நடத்தப்பட்ட போராட்டம்



























































































இந்த நிகழ்வு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது/ அதை எப்படி இங்குள்ள ஊடகங்கள் செய்தியாக்குகிறன என்பதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.  ஒவ்வொரு மாநில அரசும், கனேடிய மத்திய அரசும் இதற்கு எவ்விதத்தில் செயற்படப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

இது சம்பந்தமாக நடந்த அறிமுகக் கூட்டம் ஒன்றில் மாணவர் தலைவர் ஒருவரால் சொல்லப்பட்ட செய்தி ஒன்று எனக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்கியது. எல்லா ஊரிலும் அரசியல்வாதிகள் தமது வாக்கில் தான் குறியாக இருப்பார்கள் என்பது. இங்குள்ள மாநிலக் கல்வி அமைச்சரைச் சந்தித்த போது கல்வி அமைச்சர் கூறினாராம், கனேடிய மாணவர்களுக்குக் கட்டணக் குறைப்பைப் பற்றிப் பரிசீலிக்கலாம். ஆனால் சர்வதேச மாணவர்கள் தமது கவனத்துக்கு உரியவர்கள் அல்ல என்பதாக. மாணவ தலைவர் கூறியது உண்மையானால் அரசியல்வாதிகளின் நோக்கம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வின்னிபெக்கில் உள்ள மாநில பாராளுமன்றின் முன் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடி இருந்தனர். அங்கு கூடி இருந்த மாணவர் எண்ணிக்கை எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. பல்கலைக்கழக வகுப்புக்களும் நடந்தன. பெரும் எண்ணிக்கையானோர் வகுப்பில்தான் இருந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.

மிகக்குளிரான வெளிச்சூழல் குறைவான மாணவர் பங்களிப்புக்கு ஒரு காரணமாக இருக்க முடியும். அல்லது அனைத்து நிகழ்வுகளுமே இப்படி குறைவான மாணவர் பங்களிப்புடன் தான் நடைபெறுமா?? அதை இங்கு நெடு நாட்களாக இருப்பவர்கள், அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இங்கு மாணவர் போராட்டத்தை அடுத்து நியு பவுண்லாந்து மாநிலம் கட்டணத்தை ஏற்கனவே குறைத்ததாகவும் அறிய முடிந்தது.

எனக்கு ஏன் எண்ணிக்கை ஏமாற்றத்தை கொடுத்தது என்றால், எனது ஒப்பிடுகை ஈழத்து நிகழ்வுகளோடான ஒப்பீடாகவே இருந்தது.

ஈழத்தில் இருக்கும் காலத்தில் பல்வேறுவகையான மாணவர் நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வோரு நிகழ்வும் மிகவும் உணர்வு பூர்வமாக, பல்லாயிரக்கணக்கான மாணவர்களால் ஒருங்கிணைவாக நடாத்தப்படும் போராட்டம்/ பகிஸ்கரிப்பாக இருந்தால் ஒருமித்து மாணவர் சமூகமே அந்நிகழ்வில் இறங்கி இருக்கும்.  அண்மையில் கூட வடமராட்சி மாணவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து 2 வாரமாக யாழ்குடா நாடு தழுவிய போராட்டம் பகிஸ்கரிப்பு போராட்டம் நடாத்தப்பட்டு வருவதாக தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது. அந்தப் போராட்டம் யாராலும் கண்டுகொள்ளப்படாமலே போய்க்கொண்டு இருக்கிறது.

அதே போன்றே நான் ஈழத்தில் இருந்த காலப்பகுதியில் பொங்குதமிழ் நடாத்துவதில் முன்னின்று உழைத்த யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டபோது பல்கலைக்கழக மாணவர் பகிஸ்கரிப்பை ஆரம்பித்தனர். அன்று இருந்த அரசு உடனடியாக பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் பலகலைக்கழகத்துக்குள் நுழையத் தடை விதித்தது.  இதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தைத் தோற்கடிக்க முனைந்தது.

கடந்த வருடம் கூட துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் இராணுவத்தால் அடாவடியாக அடக்கப்பட்டது.

அண்மையிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ் பல்கலைக்கழகம் இன்றுவரை மூடப்பட்டே உள்ளது.

மாணவர் போராட்டங்கள் பல கோரிக்கைகளை வைத்து ஈழத்திலாயினும் சரி தென் இலங்கையிலாயினும் சரி நடாத்தப்பட்டாலும் அவற்றிற்கான விளைவுகள் எதுவுமே கிடைத்ததாக அறியவில்லை.

 

http://viriyumsirakukal.blogspot.com/2007/02/reduce-tuion-fee-day-of-action.html

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)