இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
பர்சானியா Print E-mail
மணியன்   


குஜராத்தில் 2002இல் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அமெரிக்கவாழ் இயக்குனர் ராகுல் தோலாக்கியாவின் ஆங்கிலப் படம் 'பர்சானியா' திரையிடுவது அங்கு இந்துத்வா கட்சிகளின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு பார்சி குடும்பம் கலவரங்களின் போது மாட்டிக்கொண்டு தங்கள் குழந்தையைத் தவறவிடுவதும் அதன் தாக்கங்களையும் ஒரு கதையாக வடித்துள்ளனர். நிர்மலாவின் படவிமரிசனம் இங்கே.

நேற்று இந்தப் படத்தின் அவர்களுக்கான தனி திரையிடலை பார்க்க பல்லரங்கு அதிபர்கள் தவிர்த்துள்ளனர். மதக்கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ள இந்தப் படம் சிறுபான்மையரிடம் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மீண்டும் வன்முறை வெடிக்கும் என்று குஜராத் பல்லரங்கு (Multiplex) அதிபர்கள் சங்கத் தலைவர் மனுபாய் படேல் தெரிவித்துள்ளார். பஜரங் தளத்தின் மிரட்டலுக்குப் பயந்தே அரங்கு நிர்வாகிகள் திரையிட மறுக்கிறார்கள்.போலீஸ் பாதுகாப்பு தியேட்டருக்கு வெளியே தானே, உள்ளே கலவரம் நிகழ்ந்து தங்கள் உடமைகள் உடைபட்டால் யார் பாதுகாப்பு என்று அரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வந்து முகாமிட்டுள்ள இயக்குனர், சிறு தியேட்டர்களிலாவது திரையிட இயலுமா என முயன்று கொண்டிருக்கிறார். சில மாதங்கள் முன் அமீர்கானின் பானா(Fanaa) படமும் அவரது நர்மதா அணை குடிபெயர் மக்களுக்கு ஆதரவளித்ததிற்காக 'பொதுமக்களால்' தடை செய்யப் பட்டது.

ஓவியர் ஹுசேனின் ஓவியங்களை ஓவியங்களாகக் காண இயலாமற்போனோம். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ் திரைப்படங்களும் சின்னத்திரை ஒளிபரப்புகளும் கர்நாடகாவில் 'மக்களால்' தடை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் திரைப்படங்களின் பெயரிலிருந்து கருத்துவரை 'மக்களால்'வலியுறுத்தப் படுகின்றன.

இதெல்லாம் பார்க்கும் போது நமது அரசியல் சட்டத்தில் 'பேச்சு சுதந்திரம்' என்பது பேச்சளவிலேயே இருப்பது புலனாகிறது. மனவளர்ச்சியடையாத ஒரு குமுகாயத்தில் சட்டங்கள் மட்டுமே உயரிய விழுமங்களைக் கொண்டுள்ளன. தவறான பாதையில் செல்லும் தங்கள் குமுகாயத்தை சரியாக வழி நடத்த வாக்குவங்கி அரசியலில் ஒரு தலைவர்களும் இல்லாமற் போனதும் நமது துரதிருட்டம். மெதுவே காட்டு அரசாண்மைக்கு நகர்ந்து செல்கிறோமோ ?

 

http://manimalar.blogspot.com/2007/02/blog-post.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)