இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
நுகர்வோர்கள் கவனத்திற்கு Print E-mail
மாசிலா   

உங்களது கற்பனை குதிரையை கொஞ்சம் அவிழ்த்துவிடுங்கள். இப்போது, நீங்கள் ஒரு ஆயத்த-ஆடை கடையினுள் காற்சட்டை ஒன்றை போட்டு கண்ணாடியில் நேர்த்தி பார்க்கிறீர்கள். அப்போது உங்கள் முன் உள்ள கண்ணாடியில் மேலோட்டமாக, ஒரு படம் வந்து நீங்கள் போட்டிருக்கும் ஆடைக்கு பொருத்தமான மேல்சட்டை ஒன்றை உங்கள் முன்வைத்து ஆலோசனை கூறுகிறது. கடைசியாக நீங்களும் அந்த சட்டையைச் சேர்த்தே வாங்க ஆசைப்படுகிறீர்கள். விருப்பபட்ட அந்த ஆடையை போய் எடுக்கையில் அங்கிருக்கும் இன்னொரு திரையில் ஆடையின் விலை, அவ்வகை ஆடைகளின் கிடைக்கும் அளவுகள், செப்பனிட ஆலோசனைகள் அனைத்தும் பளிச்சிடுகின்றன.
.
இவை எல்லாவற்றையும் ஒரு ஆச்சரிய தூதனக் கண்கொண்டு பார்த்து மகிழ்கிறீர்கள். நீங்கள் வாங்க ஆசைப்பட்ட அந்த சட்டைகளில் ஒரு செய்தி-கிடங்கு செயலி (chips) மறைந்திருக்கிறது உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தி-கிடங்கில் உள்ள அனைத்து கோப்புகளையும் உங்கள் வீட்டு துணி-துவை இயந்திரம் படித்து அதற்கு தகுந்தாற்போல் நீரின் சூடு, சுற்றும் நேரம், பிழியும் வேகம் ஆகிய அனைத்தையும் சரி படுத்திகொள்ளும். இதுபோன்ற நூதன அதி-நவீன விஞ்ஞான காலம் வருவதற்கு இன்னும் பத்தாண்டுகளாவது ஆகும். இருந்தாலும், நியூயார்க்கில், ப்ரேடா எனும் சொகுசு ஆடைகள் தொழிற்குழுமம் ஏற்கனவே இம்முறை 'புத்திசாலித்தனக் கண்ணாடி, சட்டை முறையை பரிசோதித்து முடித்துவிட்டது. இத்தாலியின் துணிதுவை இயந்திர உற்பத்தியாளர் 'மெர்லொனி' ஒரு சோதனை இயந்திரத்திற்கு இவ்வகை செய்தி-கிடங்கை படிக்கும் தொழில் நுட்பத்தை பொறுத்தி தயாராக கைவசம் வைத்திருக்கிறார்.
.
இன்று நாம் கனவுகாணும் இந்த முற்போக்கு காலம், RFID (radio frequency identification) என சொல்லப்படும் தொலைவில் இருந்தபடியே செய்தி அலைகளை அனுப்பும் செயலிகள் மூலம்  சாத்தியப்படும். சிறப்பங்காடிகள் மயமான இந்த காலத்தில் இந்த வித தொழில்நுட்பம் ஒரு பெரிய அடிப்படை மாற்றத்தையே உருவாக்க போகிறது. இதன்படி, கடைகளில் உள்ள ஒவ்வொரு பொருள்களின் உறை, பெட்டிகள் மீது இதுபோன்ற செயலி (chips) சிறிய ஏரியலுடன் பொருத்த பட்டிருக்கும். இந்த (ரேடியோ)விளக்க உரை செயலி, பொருள்களின் அனைத்து விடயங்களையும் தொலைவில் இருந்தபடியே தன்னுள் தங்க வைத்துக்கொள்ளும். இந்த செயலி பொருளுக்கு ஒரு மூளையை போன்றது. பணக்கார நாடுகளில் மிகபெரிய சிறப்பங்காடிகளில், நிர்வாகிகள் எண்ணில் அடங்கா பொருள்களை இம்முறை செயலிகளை பாவித்து இருப்பு-விற்றது-கொள்முதல் ஆகிய கணக்குகளை சுலபமாக நல்ல விதத்தில் நிர்வகிக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு இச்செயலியின் வியக்க வைக்கும் முக்கியகட்டமானது, இத்தொழில் நுட்பத்தை கடைகளில் செயல்படுத்தும்போதுதான் தெரியும். அமெரிக்காவில் இரண்டு சிறப்பங்காடிகள் இத்திட்டத்தை அமுல்செய்யும் பேரில் செயலியின் அலைகளை அலசும் இயந்திரம் பொருத்தப்பட அறிவு-கூடைவண்டியை (carrier) சோதனை செய்து வருகின்றனர். இவ்வண்டி வைத்திருப்பவர்கள், பொருட்களை வண்டிக்கருகில் கொணர்ந்ததும், பொருத்திய திரையில் பொருளைப் பற்றிய அனைத்து விடயங்களும் தெரிந்துவிடும். ஜெர்மெனியின் 'மெட்றோ' சிறப்பங்காடி, ரைன்ஸ்பெர்க் எனும் ஊரில் ஏற்கனவே இம்முறையை செய்து பார்த்தாகிவிட்டது.
.
இந்த 'ரேடியோ-அலை-அடையாளம்' செயலி (RFID) பயன்களை கண்டறிய, கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஐம்பது விதமான கண்டுபிடிப்புகள், சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
.
கணக்காளர் (cashier) இல்லாத கடைகள் : முழுவதும் எர்பிட் பொருத்தப்பட்ட சரக்குகளை கொண்ட அங்காடிகளில், RFID அலை படிக்கும் செயலியின் உதவியுடன் நீங்கள் வண்டியில் வைத்திருக்கும் அத்தனை பொருள்களின் மொத்த விலை நிலவரங்கள் ஏற்கனவே கணக்கிடப்பட்டடு இருக்கிறதாகையால், கடையை விட்டு வெளியே வரும்போது, சேகரித்த பொருட்களை வண்டியில் இருந்து வெளியே எடுத்து கணக்காளரிடம் காட்டவேண்டிய அவசியம் ஏதுமில்லை. மேற்கொண்டு வண்டியில் உள்ள மொத்த சரக்குகளையும் ஒரே வினாடியில் அலசி கணக்கெடுக்கும் சாத்தியமும் உண்டு.

டென்மார்க்கில் நுகர்வோர் உதவியுடன் ஒரு புதுவித அதி-நவீன சோதனை செய்யப்பட்டது. இதன்படி, ஒருவர் கடையில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு இருக்கும்போது, வீட்டில் குளிர்சாதன பெட்டியில் ஏற்கனவே அவ்வகை பண்டங்கள் இருப்பு இருக்கிறதா?, அதன் கடைசி உபயோகத் தேதி போன்றவற்றை தெரிந்துகொள்ள அவரது கணினி பொருத்திய குளிர்சாதன பெட்டிக்கு ஒரு "SMS" அனுப்பினால் போதும். உடனே கைமீது பலன்.
.
இணையம் மூலம் வீட்டில், அலுவலகத்தில் இருந்தபடியே நிறைய பேர் பொருள்களை வாங்கி வருவதால், மன வேதனையில் இருக்கும் சிறப்பங்காடி விற்பனையாளர்கள் பல்வேறு உத்திகளையும் கையாளத் தயங்குவதில்லை. இதன்படி, மென்பொருள் பொருத்திய ஒளிப்பதிவு கருவி உதவியுடன், கடையின் முக்கியம் வாய்ந்த இடங்களில் உலாவும் நுகர்வோரின் வயது, விருப்பம், வாடிக்கையாளர்கள் பிடித்த நேரம் என இன்னும் பலாதரப்பட்ட விடயங்கள் கணக்கெடுக்க படுகின்றன. நுகர்வோரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, அவர் விருப்பத்துக்கு ஏற்றார்போல் உத்திகளை கையாள்வதே இப்போது நடக்கும் சிறப்பங்காடிகளின் வியாபாரப் போராக ஆகிவிட்டது. அங்காடிக்கு வருபவர், தான் ஒரு அதி-நவீன கனவுலகத்தில் இருப்பது போன்ற நினைப்பை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
.
ஒரு பக்கம் இப்படி இருக்கிறது என்றால், மறு பக்கத்தில் இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதகங்களையும் எண்ணி பார்க்காமல் இருக்க முடியாது. நுகர்வு, வியாபாரம், போட்டி என்ற பெயரில், அளவுக்கும் அதிகமான கண்காணிப்புக்கு ஆளாகி இருக்கும் நுகர்வோர்களின் அந்தரங்கம் இதனால் உடைக்கப்பட்டு எல்லை தாண்டபடுகிறது.
*
*
நன்றி : லெ மோந்
மொழி பெயர்ப்பு : மாசிலா.
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)