இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
Orkut - இணைய இளைஞர்களின் இருப்பிடம் Print E-mail
ரவிசங்கர்   

Orkut பற்றி விளக்கி பதிவு போடுறதும் கொல்லன் தெருவில் ஊசி விற்கிறதும் ஒன்னு தான். ஆனா, இது வரைக்கும் Orkut பத்தி தெரியாத தமிழ்ப் பதிவுலக அப்பாவிகள், முதிய வலைமக்கள் (Netizens) யாரும் இருந்தால் படித்துத் தான் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகமும் !

கூகுளோட சேவைகள்ல ஒன்னு தான் ஆர்குட். கூகுள் மெயில் முதல்ல தொடங்கியப்ப அழைப்பு மட்டும் மூலம் தான் சேரலாம்னு சொன்னப்ப - எனக்கு இல்லையே எனக்கு இல்லையேன்னு அழைஞ்சவங்க நிறைய பேர். இப்படி அழைப்பு மூலம் பயனர்களை சேர்க்கிறது எரிதங்களை (spam) தடுக்க உதவுது. ஆர்குட் பத்தி போன 2005 முடிவு வாக்குல தான் என் கண்ணுல பட்டுச்சு. இணைய மன்றங்கள்ல (online forums) யாராச்சும் ஆர்குட் அழைப்பு தாங்கன்னு அழாத குறையா கேட்டவங்க நிறைய பேர் இருந்தாங்க..அப்படி என்னடா இதுல இருக்குன்னு சுவாரசியமா இருந்துச்சு..ஆனா, அது hi5 தளத்துக்கு ஒத்த சமூகப் பிணையத் தளம்னு (Social networking site) மட்டும் தெரியும். (வழக்கம் போல கூகுள் அண்ணன் இங்க பூந்து ஏற்கனவே பொழப்பு நடத்திக்கிட்டு இருந்த தளங்களோட ஆட்டைய களைச்சிட்டாரு ;))

அது என்னங்க சமூகப் பிணையத் தளம்? அது என்னன்னா, உங்களுக்கு ஒரு நண்பர் இருக்காங்கன்னு வைச்சுக்கங்க..அவர் உங்க கூட படம் பார்க்க வர்றப்ப அவரோட இன்னொரு நண்பர அழைச்சிட்டு வர்றார். உங்களுக்கு அறிமுகப்படுத்தியும் வைக்கிறார். அன்னையில இருந்து நீங்களும் புதியவருக்கு நண்பராயிடுறீங்க..இது போல நண்பரோ நண்பரோட நண்பர்னு சங்கிலி மாதிரி பிடிச்சு தொடர்ப வளர்க்கிறவங்க இருக்காங்க..மனுசனோட வாழ்க்கைல வெற்றி பெற முக்கியமான காரணம் இந்த பிணைக்கிற திறமை அப்படின்னு சொல்றாங்க..(ஆமா, யாரு சொன்னாங்க ;))

Photobucket - Video and Image Hosting

நேர்ல பண்ற இந்த விசயத்த இணையத்துல பண்றது தான் இந்த Orkut, hi5, Myspace போன்ற தளங்களின் வேலை. சரி, இது எப்படி நடக்குது? ஏற்கனவே, இந்த தளத்துல இருக்கிற உங்க நண்பர் ஒருவர் உங்களுக்கு அழைப்பு விடுக்கணும். நீங்க அதுல சேர்ந்ததும், உங்க பெயர் உங்க நண்பரோட நண்பர்கள் பட்டியல் பக்கத்துல தெரியும். உங்க பக்கத்துலயும் உங்க நண்பரோட பெயர், அவரது பக்கத்துக்கான இணைப்பு இருக்கும். இப்ப நீங்க சேர்ந்தாச்சா? இனி உங்க நண்பர்கள் யாராச்சும் இந்த தளத்துல இருக்காங்களான்னு தேடிப் பார்க்கலாம். பத்தாம் வகுப்புல கூடப் படிச்ச குமார் இருக்கானான்னு தேடிப் பார்த்தா நிறைய குமாருங்க வருவாங்க..பொறுமையா அலசிப் பார்த்து நம்ம குமார அமுக்கிடலாம். இது போல காணாம போன சிறுவயது நண்பர்கள கண்டுபிடிச்சு புளங்காகிதப்பட்டவங்க நிறைய பேர் இருக்காங்க..பள்ளி, கல்லூரியில் படித்த ஒரு நண்பரை பிடித்தாலும் அவர் பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் பட்டியலை கண்டு நம்முடைய பல விட்டுப் போன நண்பர்களை கண்டுபிடிக்கலாம்.

கல்லூரிக் காலத்தில் ஒரு வார்த்தை கூட பேசாத நண்பர்கள் கூட இப்போது இதன் மூலம் இணைய, பேசிக் கொள்ள முடிகிறது. ஒருவரின் பக்கத்துக்கு நண்பராக ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும். நாம் நண்பராக இருந்தாலோ இல்லை எதிராள் கல கல ஆளாக இருந்தாலோ நம்மை நண்பராக ஏற்றுக் கொள்வார். என் சில நண்பர்களின் ஆர்குட் நண்பர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டுகிறது. சிலர் நண்பர்கள் பிடிக்கிறார்களா இல்லை கட்சிக்கு ஆள் பிடிக்கிறார்களா என்று தெரியாத அளவுக்கு நண்பர்கள் பிடிக்கிறார்கள்.

Orkutக்கு மகுடம் வைத்த விசயம் என்னான்னா scrap book (கிறுக்குற கடுதாசி-ன்னு சொல்லலாம்) தாங்க..இது உங்க நண்பரின் ஒரு திறந்த inbox போல..நீங்க அங்க எழுதுறத யார் வேணும்னாலும் படிக்கலாம். மின்மடல், இணைய அரட்டை-னு ஆயிரம் வசதி இருந்தாலும் நம்ம மக்களுக்கு இதுல கிறுக்குறதுல ஒரு அலாதி இன்பம். அத விட அடுத்தவங்க scrap book படிக்கிறதுல பேரின்பம். ஒரு நாளைக்கு 5 பேரின் scrap book படிச்சாலும் உங்களுக்கு screw கழல்வது உத்தரவாதம்.

அரட்டை, வெட்டி அரட்டை, பொழுது போக்கு, நேரங்கடத்தல் தவிர இதுல ஒன்னும் இருக்கக்கூடாது. மீறி எழுதுனா உங்களுக்கு fashion, trend தெரியலன்னு அர்த்தம். அதுலயும் பொண்ணுங்க-பசங்க scrap உரையாடல் படிச்சுப் பார்த்தா கடலை போடுவது எப்படி-ன்னு புத்தகமே போடலாம். நேரம் காலம் பார்க்காம பல இளைஞர்கள் scrapக்கிட்டே இருக்காங்க..இதுனால பல பேரோட கவனம் சிதறி இருக்கு..அலுவலகங்கள்ல வேலை பாதிக்கப்பட்டிருக்கு..இது ஒரு வகைல அடிமைப்படுத்தும் ஈடுபாடு தான். தண்ணி அடிக்க மாட்டேன்னு விரதம் வைக்கிற மாதிரி No Orkuting till exams னு விரதம் வைக்கிறவங்க எல்லாம் இருக்காங்க..அதையும் தெளிவா அறிவிச்சுட்டுப் போணும், இல்லாட்டி நமக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிடுவாங்க நம்ம நண்பர்கள் ;)

101, 1001-ன்னு மொய் மாதிரி எண்ணி வைச்சு scrap எழுதுறவங்களும் அதிக எண்ணிக்கைல scrap இருக்கிறத பெருமையா நினைக்கிறவங்களும் இருக்கிறாங்க.

Photobucket - Video and Image Hosting

வேற என்னன்ன வசதி இதுல இருக்கு?

1. உங்க நண்பர்கள் அனைவருக்கும் ஒரே சொடுக்கில் மடல் அனுப்பலாம்.

2. விருப்பங்கள் அடிப்படையில் குழுமங்கள் உண்டு. அதில் இணைந்து கலந்துரையாடல் செய்யலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், girl friend இல்லாதோர் சங்கம், இளையராஜா ரசிகர் சங்கம், சாதி ஒழிக சங்கம், india 2020 சங்கம், biochemistry சங்கம்னு வகை வகையா இருக்கு. ஊர் வாரியா இருக்கிற குழுமங்கள் போற இடத்தில புதிய நண்பர்கள அறிமுகப்படுத்திக்க உதவுது. நான் நெதர்லாந்துல இருக்கிறதப் பார்த்துட்டு இந்தியாவுல இருந்து கிளம்புறவங்க இங்க உள்ள நிலைமைய கேட்டுட்டு வர்றது உண்டு.

3. உங்கள் விருப்ப நிழற்படங்களை, நிகழ்படங்களை (video) காட்சிப்படுத்தலாம். அதை பார்த்து உங்கள் நண்பர்கள் scrapவார்கள்.

4. அழகழகான பொண்ணுங்க பக்கமா போய் கடலை போடலாம். படங்களை பார்த்து ரசிக்கலாம். ஆனால், ஒருவரின் பக்கத்துக்கு யார் யார் வருகிறார்கள் என்று Orkut போட்டுக் கொடுத்து விடும். அதனால், இதில் anony ஆட்டம் எடுபடாமல் போகலாம். சும்மா sight அடிப்பது தவிர, bharath matrimony அளவுக்கு இதில் வாழ்க்கைத் துணை தேடுபவர்களும் இருக்கிறார்கள்.

5. உங்கள் நண்பர்கள் பிறந்த நாள் வரும்போது உங்களுக்கு நினைவு படுத்தும்.

6. கூகுள் கணக்குடன் இணைந்திருப்பதால் google talk, gmail போன்றவற்றுடன் ஒருங்கிணைப்பு உண்டு.

பெரும்பாலும் இளைஞர்கள் தான் இதுல குடி கிடக்கிறாங்க.. பிரேசில், இந்திய இளைஞர்கள் கிட்ட பரவலான பயன்பாட்டுல இருக்கு..''என்னடா பண்ண"-ன்னா, "I was orkutting மச்சான்"-னு சொல்றது இப்ப சர்வ சாதாரணமாயிடுச்சு.

பெருசுங்களுக்கு இது என்ன loose தனமான தளம்னு கூடத் தோணலாம். மேம்போக்கா பார்த்தா நேரம் வெட்டின்னு தோணுனாலும், இப்படி வெட்டி வேலை எல்லாம் கொஞ்சம் நாள் தான் இருக்கும். போகப் போக மக்கள் தெளிஞ்சதுக்கப்புறம், நண்பர்கள்ட்ட தொடர்பு கொள்ள, அவங்களோட புதுப் புது ஈடுபாடுகளை அறிய, காணாமல் போன நண்பர்களை கண்டுபிடிக்க Orkut ஒரு அருமையான தளம். பல சமயங்களில் நண்பர்களின் வேடிக்கையான புகைப்படங்கள், நையாண்டி scrapகள், தத்துவம் பொழியும் புனைப்பெயர்கள் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு அன்றாட வாழ்வில் இருக்கும் இறுக்கத்தை குறைக்கின்றன. கண்டத்துக்கு ஒருவராய் சிதறிக் கிடக்கும் என் நண்பர்களை பக்கத்தில் சொடுக்கு தூரத்தில் வைத்திருப்பதும் Orkut தான்.

www.orkut.com போய் பாருங்களேன். இப்ப அழைப்பு இல்லாமல் கூட இணையலாம் என்கிறார்கள்.

மேலும் அறிய - தமிழ் விக்கிபீடியா கட்டுரை, ஆங்கில விக்கிபீடியா கட்டுரை.

http://kanimai.blogspot.com/2007/02/orkut.html
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)