இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

ஆயிரம் ஆண்டுகள் ஒரு மொழி தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வந்தாலே அது செம்மொழித் தகுதிபெறும் மொழியாகுமாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லென்றால் இப்படியிருக்க வேண்டுமெனச் சொல்லதிகாரமும், எழுத்தென்றால் இதுவென்ற எழுத்ததிகாரமும், இவை இரண்டும் தரும் பொருள் இப்படி இருத்தல் வேண்டுமென பொருளதிகாரம் கண்டு தனது அனைத்து கூறுகளுக்கும் இலக்கணம் வகுத்த மொழி தன்னிலிருந்து கிளைத்த பல மொழிகளுக்குத் தாய்மொழியான தமிழ். சங்ககாலம், பின்பு அது மறுவிய காலம் தொடர்ந்து பல காலங்கள் கண்டு அந்நியப் படையெடுப்புகள், அந்நிய மொழி ஆக்கிரமிப்புகள் தாண்டி இன்று கணினி காலம், இணையக் காலத்திலும் தனித்துலா வருகிறது. மந்திரங்களாக மாற்றி யாரும் இதைப் பாதுகாக்கவில்லை. மந்திரங்கள் ஒலித்த இடங்களில்லாம் மறுக்கப்பட்டதால் ஒதுங்கி நின்று அமைதிகாத்ததால்தான், வழக்கிலில்லா மொழிகள் எல்லாம் செம்மொழியாகிவிட, பல காலம் வலியுறுத்திப் பெற வேண்டி இருந்தது தமிழிற்குச் செம்மொழிப் பட்டம். தாய்மொழிக் கல்வியே வேற்றுமொழி கல்வியைவிட தெள்ளறிவை வளர்க்கக்கூடியது என உணர்ந்து பல நாடுகள், தனது தாய் மொழியைச் சிறப்பித்து  வளர்த்து வருகின்றன. உலகெங்கும் உள்ள தமிழர்களால் தமிழ் பரவி இருந்தாலும், வரும் தலைமுறையினருக்கு நாம் தமிழை முறையாக கற்பிக்காவிட்டால், சிந்தனையும், படைப்பாற்றலும் தேங்கிப் போவதுடன், பேச்சு வழக்கில் தமிழ் அறுகிக் குறுகும் ஆபத்தும் உள்ளதை மறுக்க இயலாது. நற்கல்வியை இளம் தலைமுறை தாய்மொழியில் பெறவும், உரையாட வேற்றுமொழிகளை நாடாதிருக்கவும் உருவாக்கப்பட்டவையே தாய்தமிழ்ப் பள்ளிகள். 1991 ல் முதன் முதலில் இறை.பொற்கொடி என்பவரால் வித்திடப்பட்ட தாய்த்தமிழ் பள்ளிகள் பற்றியும், அவற்றின் இன்றைய நிலை பற்றியும் விரிவான ஆவணம் ஒன்றை பதிவர் சொ.சங்கரபாண்டி பூங்காவிற்காகத் தொகுத்தளித்துள்ளார். இப்பள்ளிகளில் வெறும் பாடங்கள் மட்டுமல்லாது, தமிழ் பண்பாடு மற்றும் கலை வடிவங்களும் நேர்த்தியாக குழந்தைகளிடையே கொண்டு செல்லப்படுகிறதென்பதற்குச் சான்றாக திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளியில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் திரு.அ.மாரியப்பன்.

 

இணையத் தமிழ் சிறக்க உழைத்த நண்பர் சாகரனின் நினைவுகளைப் பதிவு செய்கிறது மலைநாடன் மற்றும் பரஞ்சோதியின் பதிவுகள்.

 

தொடர்ந்து கொண்டிருக்கிறது காவிரித் தீர்ப்பால் பிரச்சனை.... இம்மாதம் 5 ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு, 7 ஆம் தேதி இத் தீர்ப்பு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அளித்ததும் மேல்முறையீடு செய்வோம் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது கர்நாடகம். முதல் கட்டமாக, கார்நாடகத்திற்கு செல்லும் மற்றும் கர்நாடகத்தின் வழியே வேறு மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள், சரக்கு லாரிகள் என புகைவண்டி தவிர அனைத்துப் போக்குவரத்தும் தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மாணவர் பேரவை இரத்தக் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு தங்களது கோரிக்கைகளை அனுப்பும் போராட்டத்தையும் மைசூரில் நடத்தின.  12 ஆம் தேதி அம் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 13 ஆம் தேதி கன்னடத் திரையுலகமே திரண்டு வந்து கண்டனப் பேரணி நடத்தியது. படப்பிடிப்புகளும், திரையரங்குகளில் அனைத்து மொழி திரைப்படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இப்பேரணியில் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட கண்டனங்களைத் தொடர்ந்து  நடிகர் அம்பரீஷ் தனது எம்.பி மற்றும் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்துள்ளார். அங்குள்ள விவசாய சங்கங்கள் தொடர்ந்து சாலை மறியல், இரயில் மறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. 15 ஆம் தேதி நிலைமை கட்டுக்குள் வருவதுபோல் வந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, மீண்டும் நேற்று மாலை தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை பற்றி விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட உள்ளது. இதற்கிடையே முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பேசித்தீர்க்க தயாராக இருப்பதாக கேரளமும் அறிவித்துள்ளது. காவிரிப் பிரச்சனையைப் பற்றி பதிவர் பத்ரி மற்றும் உணர்வுகள் பதிவும் இவ்வாரப் பூங்காவில் தொகுக்கப்பட்டுள்ளது.

 

கொடைக்கானல்- பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயலலிதாவிற்கு ஒரு வருடம் சிறைதண்டனை கிடைத்ததையொட்டி எழுந்த கலவரத்தில், தர்மபுரி அருகே கடந்த 2000 ஆம் ஆண்டு 3 மாணவிகள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் நீதி மன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கூறியுள்ளனர். வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது அரசு வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனவே தற்போது நீதிபதியின் இல்லத்திற்கும், அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வைப்பற்றிய எண்ணங்களை வைக்கிறது பதிவர் மு.கார்த்திகேயனின் பதிவு.

 

மக்களின் பாதுக்காப்பிற்கென அரசுகளால் அனுப்பப்படும் இராணுவங்களோ, காவல் படைகளோ மக்களின் அமைதிக்கு வழிவகுத்ததாய், அவர்களின் பாதுகாப்பிற்கு உழைத்ததாய் எந்தச் சரித்திரமும் இல்லை. மாறாக திடீரென பலர் காணாமல் மறைவதும் பின்பு பெட்டிகளில் அவர்களின் உடல்கள் வருவதும் தொடர்ந்து நடக்கும். அன்று இலங்கையில், இன்று ஈராக்கில் என அண்டையில் தேட அவசியமில்லாது., சில ஆண்டுகள் முன்பு தமிழக-கர்நாடக காட்டுப்பகுதியிலும் நடைபெற்றது. ஆனால் காஸ்மீரிலோ இந்நிகழ்வு பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் அப்பாவிகள் பலரை என்கவுன்டர் மூலம் கொன்று பதவி உயர்வு பெற்று வந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 400 பேர் காஸ்மீரத்தில் காணாமல் போயிள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் (சங்கம் ஏற்படுத்தியுள்ளனர்) காணாமல் போனோர் பற்றிய விவரங்களை ஒரு மாதத்திற்குள் வெளியிடாவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர். பல அமைப்புகள் அங்கு இது குறித்துப் போராட்டம் நடத்திவரும் நிலையில் பதிவர் தமிழ்சசியின் பதிவு இதைப்பற்றிப்பேசுகிறது.

 

இவற்றுடன் இலக்கியப்பதிவுகள், அறிவியல், பொருளாதாரம் மற்றும் விளையாட்டு என பல களங்களில், பன்முனைப் பதிவுகள் தாங்கி இவ்வாரப் பூங்கா.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)