இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
Teen Pregnancy Print E-mail
பத்மா அர்விந்த்   

அமெரிக்காவில் 6 வருடங்கள் முன்புவரை 1000க்கு 112 பெண்கள் கருத்தரித்தபோது, இது ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்தது. தனி மனிதன் வாழ்விலும் அவர்கள் ஏற்றுக்கொள்கிற வாய்ப்புகளிலும், முடிவுகளிலும் அரசாங்கம் தடையிட முடியாதென்றாலும், இவ்வகை பதின்ம வயது கருத்தரித்தல் பிரச்சினையால் ஆண்டொன்றுக்கு கிட்டதட்ட 9.4 பில்லியன் டாலர்களை அரசு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. நானும் நீங்களும் கட்டும் வரிப்பணத்தில் இருந்தே இந்தச் செலவு செய்யப்படுவதால், நமக்கும் இந்த விஷயத்தில் கருத்துச் சொல்ல உரிமை உண்டு.
பெரும்பாலான பெண்கள் கருவுற்றதும், தங்கள் ஆண்நண்பர்கள் உதவியுடன் அதை கலைக்கவே விரும்பினாலும், பல மாநிலங்களில் இது சட்டத்திற்கு புறம்பானது. 17 அல்லது 18 வயதில் பிரசவத்திற்கான செலவை பெற்றோர்களின் காப்பீடு கட்டாது என்பதால், இந்தப் பெண்கள் பிரசவச் செலவை அரசாங்கம் நடத்தும் “charity care” இல் இருந்து எடுத்துக்கொண்டால், உண்மையிலேயே மிக அவசரமான கவலைக்கிடமான நோயுடன் ஒருவர் காப்பீடு இல்லாமல் வந்தால், அவருக்குக் கிடைக்க இருக்கும் சலுகை குறையக் கூடும்.

 

பிறந்த குழந்தைகளுக்குத் தேவையான மெடிக்கெய்டிற்காக அரசு செய்யும் செலவு, பிறந்த குழந்தைகளைத் தத்து எடுத்து கொள்ளும் பெற்றோருக்கான செலவு, இன்னும் சில இடங்களில் அரசே அக்குழந்தைகளை மாற்றுப் பெற்றோரிடம் தந்தால் அதற்கான மாதாந்திர சலுகை 1000$ என இச்செலவுகள் போவதும், போதிய கல்வி இல்லாமல் பாதுகாப்பில்லாமல் வரக்கூடிய STIபோன்றவற்றைத் தடுக்கவும் மிகவும் சிந்தித்து, பள்ளிகளில் 7 முதல் 9 ஆம் வகுப்பிற்குள் பாலியல் கல்வி ஆரம்பித்தார்கள்.

 

இங்கே பொதுவாக இசை, விளையாட்டு அல்லது உடற்பயிற்சி ஆண்டு முழுதும் கட்டாயப்பாடம். ஆனால் கணிணி, கலை, மற்றும் பாட்டரி போன்றவை சுழற்சி முறையில் ஒரு செமஸ்டர் மட்டும் கற்றால் போதும். அந்த வகையில் இந்த செமஸ்டர் என் மகனுக்கு பாலியல் கல்விப்பாடம் இருக்கிறது. செமஸ்டர் ஆரம்பம் முதல் பெற்றோர்களுடன் கவுன்சிலர்கள் தாங்கள் நடத்தும் பாடத்திற்கான புத்தகம், மற்றும் வீடியோ போன்றவை பற்றிப் பேசி அவர்கள் அனுமதி பெற்று சொல்லித்தருகிறார்கள். மிகவும் விளக்கமாக பருவமடையும் போது ஏற்படும் மாறுதல்கள், எப்படிச் சுத்தமாக இருப்பது, அதன் முக்கியத்துவம், மாதவிலக்கின் போது பயன்படுத்தும் நாப்கின் இவற்றில் ஏற்படக்கூடிய சில Toxic shock syndrome, PMS, ஆண்களின் உடலில் ஏற்படும் மாறுதல்களை விளக்கிச் சொல்லித்தருகிறார்கள். அன்றைய பாடத்தை பெற்றோருடன் பேசி கையொப்பம் வாங்கி வரவேண்டும். ஆண், பெண் மாணவர்கள் சேர்ந்தே கற்றுக்கொள்வதால் தயக்கம் இருப்பதில்லை.

 

குழந்தை வளர்ப்பதில் இருக்கும் கஷ்டத்தை உணர வார இறுதியில் ஒரு program செய்யப்பட்ட குழந்தையை ஸ்ட்ரோலரில் கொடுத்தனுப்புகிறார்கள். இந்தக் குழந்தை 6 பவுண்டு எடையுடன், நிஜக் குழந்தை போல, கழுத்து நில்லாமல் மென்மையாக இருக்கிறது. தூக்கிப் போட்டாலோ அல்லது கழுத்து சாய்ந்துவிட்டாலோ வீல் என்று அழ ஆரம்பிக்க அது rough handling ஆகப் பதிவாகிறது. 3 மணிக்கொருமுறை அழ ஆரம்பிக்கிறது, உடனே ஒரு சாவியைச் செலுத்தி அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பால் பாட்டிலுக்கு சில குழந்தைகள் காட்டும் ரெசிஸ்டெண்ட் கூட உண்டு. ஒரு 30 நிமிடம் கழித்து சிரிக்கும் வரை பிடித்து கொள்ள வேண்டும். இரவும் எழுந்து கவனித்துக்கொள்ள வேண்டும். பாட்டரியை எடுக்க முயன்றால் பதிவாகி, குழந்தைகள் மீண்டும் படிக்க வேண்டும். பெற்றோர்கள் சாவியைக் கொடுக்க முடியாதபடி அதை ஒரு வளையத்துடன் சேர்த்து பிள்ளைகளின் கையில் மாட்டி விடுகிறார்கள்.
குழந்தையை வீட்டிலும் வைத்து வார இறுதியைப் போக்க முடியாமல் கடைக்கு, மாலுக்கு எங்கே போனாலும் காரில் வைத்து எடுத்து போய், அங்கே மற்றவர்களின் வினையைப் பதிவு செய்ய வேண்டும்.  இதன் மூலம் இதன் நெகிழ்வு சுளிவுகளைக் கண்டு கொள்ளும் குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவதாகத் தெரிகிறது.

 

2000 ஆம் ஆண்டு முதல் 2005 வரை 36% டீன் பிரெக்னன்சி குறைந்திருக்கிறது. இன்னும் Planned paraenthood, WIIC ஆகிய நிறுவனங்களும் ஒத்துழைத்துச் செயல்படுகிறார்கள். பிரச்சினை ஒன்று என்று தெரிந்து, அதை எப்படித் தடுப்பது என்று சிந்தித்து அதைப் பல கோணங்களிலும் அணுகும் இந்த அணுகுமுறையை பொதுவாக அமெரிக்காவின் பல திட்டங்களில் காணலாம். தவறுகள் இருந்தாலும் மெல்ல மெல்ல அதைக் களைய உழைப்பதும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

 

 

http://reallogic.org/thenthuli/?p=205

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)