இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
ருசியான பிரியாணி செய்வது எப்படி? Print E-mail
துளசி கோபால்   

காஷ்மீரி பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, காகாக்கடை பிரியாணி, ஆம்பூர் பிரியாணி வரிசையில் இப்பப் புதுசா 'நியூஸி பிரியாணி 'வந்துருக்கு.

வெஜிடேரியன்களும், நான்வெஜிடேரியன்களும் எல்லாரும் இப்படி வந்து கூட்டமா நில்லுங்க.

முதலில் எது?

மொதல்லே நான்வெஜ் சமைச்சுறலாம். ரொம்ப சத்தம் அந்தப் பக்கத்துலே இருந்து வருது. சிக்கனா மட்டனா? எதுவேண்டும் சொல் மனமே..........


ரெண்டு விதத்துக்கும் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்தான் இருக்கு. அதைச் சமைக்கும்போது பார்க்கலாம்.

இப்பெல்லாம் யாரும் பிரியாணிக்குன்னு மசாலா எல்லாம் வூட்டுலெ தயாரிக்கறதை விட்டுட்டாங்க. ரெடிமேட் பொடிகளா நாட்டுலே குவிஞ்சு கிடக்கு. எனக்குத் தெரிஞ்சவரையில் 'மங்கள் மசாலா' நல்லாவே இருக்கு( வேற வழி? அது மட்டும்தான் இங்கே எனக்குக் கிடைக்குது) அதையும் வாங்கி வச்சுக்குங்க.

இந்த ரெஸிபி கொஞ்சம் 'ரிச்'சாத்தான் இருக்கும். ஆனா ருசி வேணுமுன்னா போடறதைப் போட்டுத்தானே ஆகணும். தினம்தினமா பிரியாணி சாப்புடப் போறோம்? அதனாலே காம்பரமைஸ் பேச்சு இல்லவே இல்லை.


தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் அல்லது மட்டன் - அரைக் கிலோ கொஞ்சம் பெரிய துண்டங்களா நறுக்கிக் கழுவி வச்சுக்குங்க)
  2. பாசுமதி அரிசி - அரைக்கிலோ
  3. பிரியாணி மசாலா - மூணு/நாலு தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
  5. உப்பு - ஒண்ணரைத்தேக்கரண்டி
  6. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாம்
  7. சம அளவில் சேர்த்து அரைச்ச பச்சை மசாலா- மூணு தேக்கரண்டி.( மசாலா பாக்கி ஆச்சுன்னா ஃப்ரீஸ் பண்ணி வச்சுக்கலாம்)
  8. வெங்காயம் பொடியாக அரிஞ்சது - 3 ( பெரிய சைஸ் வெங்காயமா இருந்தா 2 போதும்)
  9. 'துள்ஸீஸ்' கரம் மசாலா - 1 தேக்கரண்டி ( செய்முறை கடைசியில் இருக்கு)
  10. தக்காளிப் பழம் - 4 ( நறுக்கி வச்சுக்கணும்)
  11. கொத்துமல்லித்தழை - அரைக்கட்டு ( 'கால்கட்டு'க்கூடப் போதும்)
  12. புதினாத்தழை - கொஞ்சம்
  13. முந்திரிப்பருப்பு - கால் கப்
  14. உலர்ந்த திராட்சை( கிஸ்மிஸ்) கால் கப்
  15. நெய் - 200 கிராம்.

செய்முறையில் ரெண்டு வழி இருக்கு. சுலபமாச் செய்யறது, கஷ்டப்பட்டுச் செய்யறதுன்னு. எதுவேணும்? ரெண்டையும் சொல்லிடவா?


சுலபமுறை:


அடுப்பைப் பத்தவச்சுக்குங்க:-)

ஒரு பெரிய வாணலியில் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும், அதுலே முந்திரி, திராட்சையை பொரிச்சு எடுத்து வச்சுக்கணும்.

இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துச் சூடானதும் அரைச்சு வச்ச க்ரீன் மசாலாப் போட்டு ஒரு நிமிஷம் வதக்கணும்.அதுலேயே நறுக்கிவச்ச வெங்காயம் சேர்த்து இன்னும் வதக்கணும்.

அப்புறம் இன்னும் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும் மஞ்சப்பொடியைப் போட்டு ஒரு கிளறு கிளறிட்டு அதுலே சிக்கன்/ மட்டனைப் போட்டு நல்லா பிரட்டுங்க. அதோட நிறம் லேசா மாறணும். இப்ப அடுத்துச் சேர்க்கவேண்டியது பிரியாணி மசாலா. அடிப்புடிக்காமக் கிளறணும். உப்பையும் இப்ப சேர்த்துறலாம். ஆச்சா......... என்ன பாத்திரத்துலெ பிடிக்குதா? தக்காளியைச் சேருங்க.

சிக்கனா இருந்தா ஒரு டம்ப்ளர் தண்ணீரைச் சேர்த்து அப்படியே அரைத்தீயில் வேகவிடுங்க. மட்டனா இருந்தா தக்காளி சேர்த்ததும் கிளறிட்டு அதையெல்லாம் ஒரு பாத்திரத்துக்கு மாத்திட்டு ப்ரெஷர் குக்கரில் வைக்கலாம்.( குக்கர்ன்னா கால் தம்ப்ளர் தண்ணீர் போதும். ஸ்டீம் வந்த பிறகு அடுப்பை 'ஸிம்' செஞ்சுட்டுச் சரியா 15 நிமிஷம்.


அரிசியை கழுவி( மூணு தடவை. அதான் இந்தியக் குடும்ப வழக்கமாம்) மைக்ரோவேவ் ரைஸ் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊத்தணும். அரிசி அரைக்கிலோன்னா அநேகமா ரெண்டரை கப் வரும். மூணரைக்கப் தண்ணி சேர்த்தாப் போதும். 100% பவர்லே 7 நிமிஷம், 50% பவர்லே 8 நிமிஷம் வைக்கணும். 1000 W மைக்ரோவேவ்க்கு இந்தக் கணக்கு. பவர் இன்னும் அதிகமுள்ள அல்லது குறைவுள்ள மைக்ரோவேவ்ன்னா அதுக்குத் தகுந்தமாதிரி குறைச்சோ, கூட்டியோ வச்சுக்கணும்.


அடுத்த கட்டம் மிக்ஸிங். சிக்கனா இருந்தா இந்நேரம் வெந்திருக்கணும். தண்ணியெல்லாம் சுண்டி நல்ல க்ரேவிப் பதத்தில் இருக்கும் அதே வாணலியில் இப்பச் சேர்க்க வேண்டியது நம்ம 'துள்ஸீஸ்' கரம் மசாலா.

ஒரு கிளறுக்குப்பின் அடுத்து மைக்ரோவேவில் வெந்து தயாரா இருக்கும் சோறு. நல்லாக் கிளறுங்க. ஆனா சாதத்தை நசுக்கிக் கூழாக்காம லேசாப் புரட்டிப்புரட்டி விடணும். வெள்ளைச்சோறு கண்ணுலெ படக்கூடாது. இப்பத் தூவவேண்டியது ஏற்கெனவே வறுத்துவச்ச முந்திரி & திராட்சை. பாக்கி இருக்கும் நெய்யை அப்படியே பரவலா பிரியாணிமேலே ஊத்திவிடுங்க. கொத்தமல்லி & புதினாவைக் கழுவிப் பொடிப்பொடியா அரிஞ்சு தூவலோ தூவல். ஒரு அஞ்சு நிமிஷம் அடுப்புமேலேயே இருக்கட்டும். தீச்சுவாலை இப்ப 'ஸிம்'லெ இருக்கணும்.

தக்காளி வெங்காயம் எல்லாம் அரிஞ்சு தயிர்லெ போட்டுக் கலக்கி கொஞ்சமா உப்புப்போட்டு ஒரு பச்சடி செஞ்சுக்கலாம். இல்லையா வெள்ளரிக்காய் துருவி, தண்ணீரை ஒட்டப் பிழிஞ்சுட்டு கெட்டித்தயிரில் கலக்குன ரைத்தா.
எல்லாம் இது போதும் சைட் டிஷ். ( வெள்ளரிக்காய் தண்ணீரை ஃப்ரிஜ்லே வச்சுக்கிட்டு ரெண்டு நாளைக்கு முகத்தில் தடவிக்கலாம்.எல்லாம் ஒரு அழகுக் குறிப்புதான். வேணாமா? சரி. அதைக் குடிச்சுருங்க)


வெஜ் பிரியாணி:

இதுலேயும் ரெண்டு வகை. ஈஸி & கஷ்டம்.

ஈஸியைப் பார்க்கலாமா?

மேலே சொன்னதுலே அந்தச் சிக்கன்/மட்டனுக்குப் பதிலா மிக்ஸட் வெஜிடபுள் ( காரட், பீன்ஸ், பட்டாணி & கார்ன்) பாக்கெட் அரைக்கிலோ போட்டுக்கலாம். பிரியாணி மசாலா ரெண்டு தேக்கரண்டியே போதும். உப்பும் கொஞ்சம்
குறைச்சுக்குங்க. காய்கறிகள் சீக்கிரம் வெந்துரும். அதனாலே பக்கத்துலே இருந்து கவனிச்சுச் செய்யுங்க. அடுப்புலே வச்சுட்டுத் 'தமிழ்மணம் ' படிக்கப்போக வேணாம்:-)

இப்போ கஷ்டங்கள்:

நான் வெஜ்ஜுன்னா அதுவும் மட்டன்னா கொழுப்பு ஏதும் இல்லாம நல்ல ட்ரிம் பண்ண இறைச்சியா எடுத்துக்குங்க. அப்படியும் சந்தேகமா இருந்தா வெறும் இறைச்சியைக் குக்கரில் வச்சு வெந்தபிறகு, அதில் உள்ள சூப்பை மட்டும் தனியா ஒரு கிண்ணத்தில் ஊத்தி ஆறவச்சு ஒரு பத்து நிமிஷம் ஃப்ரீஸரில் வச்சுட்டு எடுத்தா, கொழுப்பெல்லாம் இறுகி பாறையா மேலே நிக்கும். அதை மட்டும் எடுத்து குப்பையில் போட்டுரலாம். அதே தண்ணீரை மீண்டும் இறைச்சியில் சேர்த்துக்கலாம்.

அப்புறம் அரிசியை மைக்ரோவேவ் அவனில் வைக்காம கொஞ்சம் நெய் ஒரு வாணலியில் ஊத்தி, கழுவித் தண்ணீர் வடிச்ச அரிசியைப் போட்டு கொஞ்ச நேரம் தீஞ்சுறாமல் வறுத்துட்டு அதுலேயே ஒரு பங்கு அரிசிக்கு ஒண்ணரைப்பங்குத்தண்ணீர் சேர்த்து அடுப்புலேயே வச்சு தண்ணீர் வற்றும்வரை வேகவச்சு எடுக்கலாம். தண்ணீருக்குப் பதிலா இறைச்சி வெந்த பிறகு கிடைச்ச தண்ணீரையும் பயன் படுத்தலாம்.


வெஜ்ஜுன்னா என்ன கஷ்டமாம்?

இருக்கே......... எல்லாக் காய்களையும் ,அதாங்க அதே காரட், பீன்ஸ், காலி ஃப்ளவர்ன்னு தனித்தனியா வாங்கிச் சின்னதா ஒரே அளவுலே வெட்டி வச்சுக்கணும். பச்சைப் பட்டாணியை வெட்ட வேணாம்:-) உரிச்சு எடுத்துக்கிட்டாப் போதும். எல்லாமே இங்கிலீஷ் காய்களாத்தான் இருக்கணும். தமிழை மட்டும் சேர்த்துறாதீங்க. அது சரிப்படாது.

குடமிளகாய் சீஸனா இருந்தா சின்னத் துண்டுகளா வெட்டி, ஒரு ஸ்பூன் நெய்யிலே வதக்கிட்டு, கடைசியில் மல்லி இலை தூவும்போது இதையும் தூவி அலங்கரிக்கலாம். இப்பதான் எல்லாக் கலர்லேயும் குடமிளகாய் கிடைக்குதே. சிகப்பு, மஞ்சள், பச்சைன்னு கலந்து போட்டா அட்லீஸ்ட் பார்க்கறதுக்காவது அழகா இருக்கும்:-)

இதோ நீங்கள் ஆவலுடன் காத்திருந்த உலகப்புகழ்(??!!) 'துளசீஸ் மசாலா'வின் செய்முறை:



மசாலா தயாரிக்க :

  1. கிராம்பு 30 கிராம்
  2. பட்டை 30 கிராம்
  3. ஏலக்காய் 30 கிராம்
  4. மிளகு 10 கிராம்
  5. சோம்பு 100 கிராம்

இது எல்லாத்தையும் ஒரு வாணலிலே லேசா வறுக்கணும். அடுப்பை மெலிசா எரிய விடுங்க. எண்ணெய் வேணாம். சும்மா 'ட்ரை'யா, இளஞ்சூடா வறுத்து, ஆறியவுடனே, 'மிக்ஸி ட்ரை ஜார்'லே போட்டு அரைச்சு வச்சிரணும்.


காத்துப் போவாத டப்பாலே வச்சிருங்க. அவ்வளவுதாங்க! ஜமாய்ங்க!

 

http://wikipasanga.blogspot.com/2007/02/blog-post_19.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)