இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
அதி-நுன்மூலப்பொருள். (nano-materiels or super-small materiels) Print E-mail
மாசிலா   

1.அறிமுகம் :
.
அதி-நுன்மூலப்பொருள் : (nanomateriel) என்பது சில பத்தாயிரம் அணுக்களால் (atoms)ஆன துகள்கள் இவை. இதன் அளவு ஒரு சில நூறு 'நனோமீட்டரைக்' (1/1000000000 ml.m) கூடத் தாண்டாது. இதன் சில அரிய சிறப்புத் தன்மைகளால் இது பல துறைகளிலும் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.
.
2.வரலாறு :

மூலப்பொருள் என்பது பல நுறு கோடி அணுக்களால் ஆன ஒரு சேர்மம். பொதுவாக, இது போன்ற துகள்களின் குறுக்களவு ஒரு மிக்ரோ.மீ (1/1000 மி.மீ)லிருந்து ஒரு மி.மீக்கு இடைப்பட்டவையாக இருக்கும். சாதாரணமாக நாம் காணும் புகைகளில் இருப்பவை இதுபோன்ற துகள்களே. இருபதாம் நூ.ஆண்டில், பௌதீகத்தின் முன்னேற்றத்தினால் இம்மூலப்பொருள்களை அணு அளவுக்கு ஆராய்ச்சி செய்ய முடிந்தது. இம்முன்னேற்றங்கள், 1959இல் 'ரிச்சார்டு ஃபெய்மேன்' எனும் பௌதீகவியலாறை ஒரு மிக்ரோ.மீ க்கும் குறைவான அளவுள்ள கூட்டு சேர்மங்களை ஆராந்து பார்க்க ஊக்குவித்தன. இது போன்ற துகள்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கிய மூலப்பொருள்களுக்கு வியக்கத்தக்க குணாதிசயங்கள் இருக்கும் என 'பெய்மேன்' உறுதியாக இருந்தார். இப்படியாக அதி-நுன்மூலப்பொருள் பற்றி ஆராய்ச்சிகள் மும்முரமாக நடக்க ஆரம்பித்தன. முதலில் இவ்வாராய்ச்சிகள் ரஷ்யாவிலும், ஜப்பானிலும் இரகசிமாக நடத்திவரப்பட்டன. இவை நனோமுகப்பு (nanophase)எனும் ஆராய்ச்சி நிலையில் இருந்தது. பிறகு, 1980இல், நனோமுகப்பு மூலப்பொருள்கள் உருவாக்கி தொழிற்சாலைகளில் உபயோகிக்கப்பட்டு வந்தன. ஆதியில் ஒரே மாதிரியான இரசாயன மூலமாக இருந்தாலும், சாதாரண மூலப்பொருளுக்கும் இவ்வகை நனோ மூலப் பொருளுக்கும் உள்ள வித்தியாசம் ஆனது, இவைகளை அடிப்படையில் உருகொடுக்க உதவிய சேர்மங்களின் அளவும் அணுக்களின் எண்ணும்தான் காரணமாக அமைகிறது. இதன்படி, துகள்களின் அளவைப் பொருத்தே மூலப்பொருளின் தன்மையும் சிறப்படைகிறது.


 
3.உற்பத்தி :

.
நனோ-மூலப்பொருளின் உற்பத்தியை இரண்டு பெரிய பாகங்களாக பிரிக்கலாம். முதலில் நனோ.மீ அளவு சேர்மங்களின் ஆக்கம். பிறகு, இவைகளின் பிணைப்பு.
.
3.1. சேர்மங்களின் ஆக்கம் : தற்போதைக்கு பலவித பௌதீக இரசாயன முறைகளில் சேர்மங்களை உற்பத்தி செய்யலாம். இதில் முக்கியம் வாய்ந்தது : முதலில் ஒரு மூலப்பொருளைச் சூடேற்ற வேண்டும். அதாவது, பெரிய துகள்கள் உருப்பெறச் செய்யவேண்டும். ஒரு குறிப்பிட்ட சூட்டளவிற்குப் பிறகு, கருப்பொருளின் தன்மையைப் பொறுத்து, அணுக்கள் ஆவியாகும். அந்தச் சமயத்தில், அவைகளை ஒரு செயலற்ற வாய்வுகொண்டு குளிர்ச்சி செய்யப்பட்டதும் அணுக்கள் சேர்மங்களாகிவிடும். அணுக்களின் ஆவியாகும் வேகத்தை உபயோகித்து மேலும் செயலற்ற வாய்வின் தன்மை மற்றும் அழுத்தம் ஆகியவைகளின் மூலம் நனோ.மீ துகள்களின் அளவுகளைத் தேர்வு செய்யலாம்.
.
3.2. சேர்மங்களின் கூட்டு : இப்படி உருவாக்கப்பட்ட துகள்களைக் கூட்டாகக் கோர்வை செய்வதற்கு, பாவிக்கப்படும் ஒரு தொழில்-நுட்பமானது : ஒரு திரவத்தில் இந்தச் சேர்மங்களை உசுப்பிவிடச்செய்து தொடர் மாற்றத்தை உருவாக்குவது. இதனால் ஒருவகை மாவு (powder) கிடைக்கப்பெறுகிறது. இதை இறுக்கி கட்டியான நுண்பொருள் எதையும் உருவாக்க முடியாது. ஆனால் இதற்கு மாறாக, இம்மாவை இறுக்கி சூடேற்றினால் நனோ.மீ சேர்மங்களில் இருந்து கட்டிகள் (block) கிடைக்கின்றன. சேர்மங்களை இறுக்கி சூடாக்கியதால் அணுக்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்கின்றன. அடிப்படை மூல கருப்பொருளின் தன்மையைப் பொருத்து இந்த வகைக் கோர்வைகள் திருப்திகரமான விடையை அளிக்கிறது. நுண்ணிய கடின பொருள்கள் உருவாக்க பயன்படும் இவைகளின் தன்மையை ஆராய்ந்து பெரும் பயனடையலாம்.

.
4.தன்மைகள் :
.
ஆதியில் ஒரே வகை இரசாயத் தன்மைகளைப் பெற்றிருப்பினும், சாதாரண மூலப்பொருள்களின் தரங்களைப் பின்னுக்குத் தள்ளி நனோ-மூலப்பொருள்கள் அதிக தரங்களுடன் மிளிர்கின்றன. பலவித ஆக்க தொழில்நுட்ப உத்திகள் ஊடே அதிக வலுவான, எளிதில் மாற்றுத்தன்மைக்கு உட்படக்கூடிய மேலும் நீர்போல் நிறமற்ற மூலப்பொருள்களைப் பெறமுடியும்.
.
4.1 கடினத்தன்மை : ஒரு பொருளின் கடினத்தன்மையானது, அது அழுத்தங்களுக்கு எந்த அளவு தாக்குப் பிடிக்க வல்லது என்பதைப் பொருத்தது. ஒரு உலோகத்தின் துகள்கள் எவ்வளவுக்கு  எவ்வளவு நுண்ணியதாக இருக்கிறதோ, அவ்வளவுக்கும் அது கடினத் தன்மை உடையது. இதன்படி, நனோமுகப்பு நிலை துகள்களினால் ஆன செப்பு சாதாரணச் செப்பைவிட இரு மடங்கு கடினமானது. ஒரே வகையான சாதாரண உலோகத்தினுள், சேர்மங்களின் கோர்வைகளில் உள்ள குறைபாடுகளால், சில ஊனங்கள் இருக்க வாய்ப்புள்ளது. உலோகத்தின் மீது நாம் கட்டாயத் தாக்கத்தை ஏற்படுத்தும்போது, இந்த ஊனம் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, உலோகம் வலைகிறது. மாறாக, நனோ-பேஸ் உலோகத்தில், சேர்மங்கள் மிக சிறியவையாக இருக்கிறது ஆகையால் குறைபாடுகள், ஊனங்கள் இருக்கும் வாய்ப்பு இல்லை. இதனால், அதிக வலுப்பெற்று நசுங்காமல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கிறது. ஆகையால், சாதாரண உலோகத்தைவிட நனொ-மூலப்பொருள் மிகவும் கடினத் தன்மை கொண்டது.
.
4.2 வளைந்து கொடுக்கும் தன்மை : ஒரு மூலப்பொருளின் சுலபமான உருவம் மாறும் தன்மையானது, தான் உடையாமல் வளையக்கூடிய சிறப்படையப் பெறுகிறது. இதன்படி, நனோமுகப்பு நிலை பீங்கான் சாமான்கள் சாதாரண பீங்கான்களைவிட வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாக இருக்கிறதாம். இது ஏனென்றால், ஒரு பீங்கான் கடினப் பொருளில் வீரல் விழும்போது, அருகில் உள்ள அணுக்கள் நகர்ந்து காலியான இடத்தை நிரப்புகின்றன. எவ்வளவுக்கு எவ்வள்வு இங்கு சேர்மங்கள் நுன்னியதாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கும் செப்பனிடும் செயல்கள் சுலபமாகவும் சீக்கிரமாகவும் நடைபெறும். துகள்கள் ஒன்றோடு ஒன்று இழைகின்றன, அணுக்கள் மிக குறைவான தூரத்திற்கே நகர்கின்றன. இதனால், சேர்மங்களின் அடிப்படை அளவை பொறுத்து நனோ-பீங்கானுக்கு வளையும் தன்மை கூடுகிறது.
.
4.3 ஊடேதெரியும் (transparence) தன்மை : சாதாரண மூலப்பொருள் ஒன்று மந்தமாக (opaque) இருக்கும்போது, அதே ஈடான நனோ-மூலப்பொருள் தாண்டித்தெரியும் தன்மை கொண்டதாக இருக்கும். அதாவது, நனோமுகப்பு நிலை மூலப்பொருளின் துகள்கள் மிகச்சிறியதாக இருப்பதால் ஒளியை அலைகழிப்பதில்லை. மூலப் பொருளின் கட்டுமானத்தில் எந்த விதக் கோளாறும் இல்லையெனில்,  நனோ-மூலப்பொருள் ஒளியைத் தடுத்து நிறுத்தாது.
.
4.4 ஏனைய தன்மைகள் :
இம்மூன்று தன்மைகளைத் தவிர ( கடினம், வளைவு, தாண்டித்தெரிதல்), நனோ-மூலப்பொருள்கள் வேறு சில சிறப்புகளையும் கொண்டிருக்கின்றன. அவை : இரசாயண மாற்றங்களை கட்டுப்படுத்துதல் (catalytic), பல வண்ண நிறங்களை பெறுதல், அதிர்வேக-ஊதா கதிர்களை உட்கொள்ளுதல், மின்காந்த சக்திகள், இதர பல...
.
5. பயன் துறைகள் :
.
நனோ-மூலப்பொருள்களின் எண்ணிலடங்கா பயன் துறைகள் வெகு வேகமாக முன்னேற்றல் அடைந்துவிட்டன. இப்படியாக, இருபது வருடங்களுக்கு முன் விஞ்ஞான ஆராய்வுகளின் 'பொருளாக' இருந்தது, இன்று அனைவரது அன்றாட வாழ்க்கையில், மின் சாதனங்கள், வண்டி (auto-mobile) தொழில் அல்லது இன்னும் அழகு சாதனங்கள் என பல வடிவங்களில் நம்மை சூழ்ந்து வருகிறது.
*
*
ஆதாரம் : ஆங்க்கார்த்தா
பிரஞ்ச் அறிவுக்களஞ்சியம்
படங்கள் : இணைய சேகரிப்பு.
.
மொழி பெயர்ப்பு : மாசிலா.
.
பட விளக்கம் :
.
படம் எண்.1 : ஒவ்வொரு சிகப்பு துகளும் பல ஆயிரம் அணுக்களை கொண்டிருக்கின்றன. நம் ஒரு முடி இழையை சுற்றி வலைக்க இதுபோல் ஏறக்குறைய 20,000 துகள்கள் தேவை.
படம் எண்.2 : அணு கட்டமைப்பு.
படம் எண்.3 : STM எனப்படும் சுரங்கவழி ஆய்வுக்கருவி. இதன் உதவியுடன் தான் IBM முதன் முதலில் நனோ வகை தொழில்நுட்பத்திற்கு வழி கோளியது.
படம் எண்.4 : என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா முழுதும் இந்த வட்ட வில்லையில் அடங்கி இருக்கிறது. 100கோடி நனோ துளைகளால் (holes)ஆனது இது.
.
எச்சரிக்கை: நனோ-தொழிநுட்பத்தால் மனித குலத்திற்கே பயங்கர ஆபத்தும் உருவாகk கூடிய சாத்தியமும் இருக்கிறது. இதைப்பற்றி இன்னொறு பதிவில் .
.
1 நனோ.மீ = 10~9m
1 நனோ மீட்டர் = 1/1000000000 மில்லி. மீட்டர்.
சேர்மம் = aggregates
கூட்டு, கோர்வை, பிணைப்பு = agglomerates.

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)