இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
இன்று சீன வருடப் பிறப்பு Print E-mail
மை ஃபிரண்ட்   

இன்று (18/02/07) சீனர்களுக்கு வருடப் பிறப்பு. மலேசியாவில் கொண்டாடப்படும் பெரிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று.


சீனப் பெருநாள் என்றால் என்ன?

கமாரி (Qamari) சீனக் காலெண்டரின் முதல் நாளில்தான் இந்த பெருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த கமாரி காலேண்டர் 12 வருடங்களுக்கு ரிபீட் ஆகும். இந்த 12 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு மிருகங்களை சிம்போலாக (Symbol) பயன் படுத்துகின்றனர். அவை:

1- பறக்கும் நாகம் (Dragon)
2- பாம்பு
3- குதிரை
4- ஆடு
5- குரங்கு
6- சேவல்
7- நாய்
8- பன்றி
9- எலி
10- நரி
11- புலி
12- முயல்
இந்த 12 மிருகங்களும் இவர்களது ஆரம்பக் காலத்தில் அன்றாட வாழ்க்கை முறையில் இன்றியமையாதவைகளாகும். அதுவே நாளைடைவில் அவர்களின் சோதிடங்களிலும் அமல்படுத்தப்பட்டது. இப்போது நீங்கள் எந்த வருடம் பிறந்தவர் என்று சொன்னீர்களானால் உங்களுடைய கேரக்டர்களை அந்த வருடத்தின் அதிபதியாய் கருதப்படும் பிருகத்தின் குணத்தை உங்களோடு ஒப்பிட்டு சோதிடம் சொல்வார்கள்.


சீனப் பெருநாளில் போபுலர் ஐதங்கள்:

1- சிங்க நடனம் (Lion Dance)
இரண்டு பேர் ஒரே சிங்க உடையில் இணைந்து ஆடுவார்கள். இவர்களது நடனம் சிங்கத்தின் அசைவுகளைப்போல் இருக்கும். கோங் மற்றும் ட்ரம் இசையை பிண்ணனியாக வைத்து இனர்ஜெதிக்-ஆக (energetic) ஆடுவர். இது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதைக் குறிக்கின்றது.

2- மண்டரின் ஆரஞ்சு பழம்

சீனப் பெருநாள் என்றால் இந்தப் பழம் இல்லாமல் ஒரு விழா இல்லை என்று சொல்லலாம். எனக்கே பெட்டி பெட்டியாக என் நண்பர்கள் கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்குங்களேன்.

3- அங்-பாவ் (Ang Pow)


இது ஒரு சிவப்பு வர்ண என்வெலோப் (envelope). இதில் பணம் இருக்கும். இதை திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு சீனப் பெருநாளன்று கொடுப்பார்கள். மற்ற இனத்தவர் இவர்களது வீட்டுக்குப் போனாலும் அங் பாவ் கிடைக்கும். அவர்கள் வீட்டில் அலங்காரமாகவும் இவை தொங்கப்பட்டிருக்கும்.

4- பட்டாசு

நீளமான வெடி (பெயர் என்ன என்று தெரியவில்லை).. இதுவும் சிவப்பு வர்ணத்தில்தான் இருக்கும். சத்தமும் பலமாக இருக்கும். சீனப் பெருநாள் முதல் நாளும், சீனப்பெருநாள் அன்றும் இதைக் கொளுத்தித் தள்ளுவார்கள். (ஆனால், மலேசியாவில் இந்த வெடி பேன்(ban) பண்ணிவிட்டார்கள்.)


சீனப் பெருநாள் 15 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது:

சீனப் பெருநாளுக்கு முதல் நாள் (Eve)

இந்த நாள் நாம் கொண்டாடும் போகிப் பெருநாள் போல் கொண்டாடப்படுகிறது. பழையது கழிதல்.. புதியது புகுதல். வீட்டை சுத்தம் படுத்துவதால், கெட்டதை அகற்றி நல்லதைப் பெற்று அதிர்ஷ்டத்தை வர வைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். சில வீடுகளில் இந்த நாளில் துடைப்பங்களையும் வீசிடுவார்கள். வீட்டை சிவப்பு வர்ணங்களில் ஜோடிப்பார்கள்.

அன்றைய இரவில் இவர்களும் இவர்களது சொந்தங்களும் ஒன்று கூடுவார்கள். கோழி, மீன், பன்றி, காய்கறிகள் போன்ற உணவுகள் அன்றைய இரவு உணவாகச் சமைக்கப்பட்டிருக்கும். இதுல என்ன ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம்னா, அவங்க அதைச் சாப்பிட்டு முடிக்க மாட்டாங்க.. மிச்சம் மீதியை ஃப்ரீசரில் எடுத்து வைப்பாங்க. இப்போது போல எப்போதும் உணவுக்கு பஞ்சம் இருக்க்க் கூடாது என்பதே இதற்குக் காரணம்.

சீனப் பெருநாள் (Day 1)

காலையில் இவர்கள் தங்களது முன்னோர்களை வழிபடுவார்கள். பிறகு இவர்களை விட முதியவர்களைச் சந்தித்து ஆசி பெருவார்கள். முதியவர்கள் அங்-பாவ் (Angpau) என்று அழைக்கப்படும் சிவப்பு நிற என்வெலப் தருவர்.
சிலர் Lion dance என்றழைக்கப்படும் டான்ஸ் ஆடுபவர்களை அழைப்பார்கள்.

(Day 2)

இது திருமணம் ஆன பெண்களுக்கு முக்கிய நாள். இன்றுதான் திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அவர்களது பெற்றோர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். முதல் நாள் எப்படிச் சிறப்பாகக் கொண்டாடினார்களோ,  அதேபோல் இன்றும் கொண்டாடுவார்கள்.

(Day 3)

இன்று அவர்கள் குடும்பம் இறந்தவர்களுக்கு மரியாதை செய்ய அவர்களின் சமாதிக்கு சென்று வழிப்படுவார்கள். அந்த குடும்பத்தில் யாராவது இறந்து 3 வருடங்கள் ஆகாமல் இருந்திருந்தல், அன்று உறவினர் வீடுகளுக்கு இவர்கள் செல்லக் கூடாது. இது அந்த இறந்தவருக்கு மரியாதை செய்வதில் ஒன்றாக கருதப் படுகிறது.

(Day 7)

இன்றுதான் ஒவ்வொரு சீனர்களுக்கும் ஒரு வயது official-ஆகக் கூடப்படுகின்றது என்று நம்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு சீனர்களுக்கும் இன்று பிறந்த நாள். இந்த நாளில் இவர்களும் பெரும்பாலும் அசைவ உணவுகளை உண்பதில்லை. ஆனாலும் இவர்கள் வீடுகளில் இன்று தடபுடலாக விருந்துகள் நடைப்பெறும்.

(Day 15)

சீனப் பெருநாளின் கடைசி நாள். "சாப் கோ மே" (Lantern Festival) என்று அழைக்கப்படும். இதை சீனர் காதலர் தினம் என்று என் நண்பர்கள் சொல்வார்கள். இன்றைய நாள் இரவில் சிறுவர்கள்/ இளைஞர்கள் கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட மண்ணெண்ணய் விளக்குகளை (Lantern) ஏந்தி வீதிகளில் வளம் வருவார்கள். இன்னாளில் சீன கியூபிட் (Chinese Cupid) இரண்டு மனங்களை ஒன்று சேர்க்கும் வேலையைத் தீவிரமாக செய்யும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

ஏதோ எனக்குத் தெரிஞ்ச சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்கிட்டேன். இங்கு மலேசியாவில் எந்தப் பெருநாள் கொண்டாடினாலும், எல்லாருமே சேர்ந்து கொண்டாடுவோம்..



Happy Chinese New Year!

Gong Xi Fa Chai!!!
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)