இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
'தமிழ் மக்கள் இசை விழா' வின் கேள்வி "நீங்கள் பொறுப்பானவர்களா?" Print E-mail
ஸ்டாலின்   

என்னுடைய முதல் பதிவை "இடையன்: அறிமுகம்" என்ற தலைப்பில் போடலாம் என்றிருந்தேன் ஆனால் அதற்கு 'இடை'யிலேயே ஒரு அற்புதமான நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்ததால் அதனைப் பற்றி எழுதவேண்டுமென்ற ஆர்வம் அரித்துக் கொண்டேஇருந்தது அதன் வெளிப்பாடே இப்பதிவு. அந்த நிகழ்ச்சி ம. க. இ. க நடத்திய "தமிழ் மக்கள் இசை விழா" பதிவு நீண்டது என்பதால் நேராக நிகழ்ச்சிக்கு சென்று விடுவோம்.

காலை 9.30க்கு தஞ்சை கீழவாசல் காமராசர் சிலையிலிருந்து புறப்பட்டது பேரணி. எங்கு நோக்கினும் செங்கொடிகள், விண்ணை பிளக்கும் முழக்கங்களோடு தொடங்கியது பேரணி. முழக்கங்கள் முழுவதும் காலனியாதிக்க எதிர்ப்பு போரின் சூடு தனியாத சொற்கள்..

"வேலூர் சிப்பாய் தியாகிகளே,
விடுதலை மரபின் விடியல்களே,
காளையார் கோவில்
காடுகளே,
காலணி எதிர்ப்பு ஓடைகளே
ஊமைத்துரையின் ஜாடைகளே
வெள்ளையாதிக்கம்
எதிர்த்து நின்ற
வீரர்களே! தியாகிகளே! வீரவணக்கம்!

என்று காலனியாதிக்க எதிர்ப்பு போரிலே தங்கள் இன்னுயிரை ஈந்து சென்ற வீரர்களுக்கு வணக்கம் செலுத்தியது முழக்கம். அது மட்டுமல்ல அந்த மரபை தொடர்ந்து உயர்த்திப்பிடித்த பொதுவுடைமை தோழர்களுக்கும் வணக்கம் செலுத்தியது. முதல் இந்திய சுதந்திர போரின் முனை மழுங்காத மாவீரர்களை வெள்ளையாதிக்கத்தின் ஆன்மாவை அசைத்துச் சென்ற வீரர்களை நினைவு கூர்ந்த முழக்கங்கள் பிறகு நிகழ்கால துரோகிகளையும் அம்பலப்படுத்தியது. அதறகான "பிள்ளையார் சுழி" 'மன்மோகன் சிங்'கிடமிருந்து தொடங்கியது.

"அவமானம்! அவமானம்!
பகத்சிங் மண்ணிலே
மன்மோகன் சிங் அவமாணம்"

என்ற போது மக்கள் சிரித்தார்கள் மன்மோகன் சிங்கோ சிரிப்பாய் சிரித்தார்..

"திப்பு மருது கட்டபொம்மன்
வாழ்ந்த வாழ்வை பாரடா
துப்பு கெட்ட நடிகனுக்கு
ரசிகனா நீ கூறடா?"

என்று இளைஞரகள் வெடித்துமுழங்கிய போது சாலையோரத்திலே வேடிக்கைப் பார்த்த இளைஞரகளும் உணர்வுவயப்பட்டது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. இந்த முழக்கங்கள் யாவையும் சாலையோரத்தில் வேடிக்கை பார்த்த மக்கள் ஆர்வமாக கேட்டதோடு அவை குறித்து தங்களுக்குள் விவாதித்துக் கொண்டதையும் நேரிலேயே காண முடிந்தது. இடிமுழக்கங்கள் மூலம் சென்ற தெருக்களின் திசைகளை அதிரச் செய்த பேரணி இறுதியாக திருவள்ளுவர் திடலை வந்தடைந்தது. அங்கு விழாவுக்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக் செய்யப்பட்டிருந்தன. பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டிருந்தது. அந்த பந்தல் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு அரசு விழாவிற்காக போடப்பட்டது என்றும் அதனை பிரிக்க நாளாகும் என்பதை காரணம் காட்டி விழாவினை வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்கும் படி நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டபோது அதனை மறுக்க அந்த பந்தலை பயன்படுத்திக் கொள்ள நேரிட்டது என்றும் தங்கள் எளிமை குறித்து ஐயப்படத் தேவையில்லை என்றும் ம.க.இ.க இணை செயலர் காளியப்பன சன்நாயக பூர்வமாக தனது வரவேற்புரையிலே கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. அரங்கத்தின் இரு பக்கத்திலும் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்திய சுதந்திர போரின் ஓவியங்களும் அதனை நடத்தி வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை காக்க முனைந்த வீரரகளின் ஓவியங்களும் வரையப்பட்டிருந்தது. முகப்பிலோ மாவீரன் பகத்சிங்கின் மிடுக்கான ஓவியம், அடிமைகளின் கோழைத்தனத்தை கேள்விக்குள்ளாக்கும் கம்பீரமான பார்வையோடு வரையப்பட்டிருந்த நேர்த்தியான ஓவியம். அதனை கடந்து உள்ளே சென்றால் காலனியாதிக்க எதிர்ப்பு போரினை தனது வெஞ்சினம் மிகுந்த சொற்களால் வெளிப்படுத்தி மக்களை அதற்கு அறைகூவி அழைத்து, அடிமைகளின் முகத்தில் தனது சொற்களால் அறைந்து அடிமைகளின் மீசையை தனது அடிமயிராய் எள்ளி நகையாடிய மருதுவின் திருச்சி பிரகடனம் வைக்கப்பட்டிருந்தது.

அரங்கம் முழுக்க மக்கள் கூட்டம். உணர்ச்சி மிகுந்து உணர்வுகளால் உந்தப்பட்டு தமிழகத்தின் மூலைகளிலிருந்து திரண்டு வந்திருந்த மக்கள் கூட்டம். பல பேர் குடும்பத்தோடு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகள் தொடங்கியது. காலை நிகழ்ச்சிகளாக கருத்தரங்கம், கே. இராசய்யன், சிங்கே ரங்க கவுடா, ஆகியோர் தங்கள் பயன் மிகுந்த ஆய்வுரைகளை நிகழ்த்தினார்கள். தோழர். துரை சன்முகம் அவர்களுடைய பேச்சு வெகுவாகவே மக்களை கவர்ந்து விட்டது. அடிமைமோகத்தை தனது எள்ளலான கேள்விகளால் அவர் அம்பலப்படுத்தியபோது அரங்கமே கரவொலியாலும் சிரிப்பொலியாலும் அதிர்ந்தது. காலை அமர்வு இதோடு முடிந்தது. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பாக செய்யப்பட்டிருந்த மாட்டுக்கறி பிரியாணி மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. சைவ உணவாளர்களுக்கு தனியான உணவு ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.. மதிய அமர்வு பேரா. சமன்லால் அவர்களின் உரையோடு தொடங்கியது. மாவீரன் பகத்சிங் பற்றிய உரை அது. மக்களை பற்றிக் கொண்ட உரையாகவும் இருந்தது. அந்த உரையினை நேர்த்தியாக மொழிபெயர்த்து உணர்ச்சி மிகுந்த உரையாக வெளிப்படுத்தினார் தோழர். அரசு. அவர்தான் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கினார். அவரது பங்களிப்பை யாருமே பாரட்டாமல் இருக்க முடியாது. அடுத்ததாக தோழர். மருதையனின் உரை. அந்த உரை மக்களுக்குள்ளேயே பரவிக்கிடக்கும் துரோகிகளையும் அடிமைகளையும் திரைகிழித்துக் காட்டியது. எல்லோரையுமே ஒரு தற்சோதனையை மேற்க்கொள்ளச் செய்த்தது. அரங்கமே அமைதியாகும்படி அவருடைய கேள்விகள் அரங்கத்தில் மோதித் தெறித்தன. மறுகாலனியாதிக்க எதிர்ப்பு போரின் அவசியத்தை ஒவ்வொரு சொற்களும் மறுப்பிற்கிடமில்லாமல் வெளிப்படுத்தின. காலணியாதிக்க எதிர்ப்பு போரின் மரபினை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஒவ்வொருவரிடமும் ஊட்டியது அவர் உரை.

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு பறையோசையோடு தொடங்கியது கலைநிகழ்ச்சி. அந்த பறையடித்த கலைஞர்களிடமிருந்த வேகமும் உற்சாகமும் அவர்களுடைய உடலசைவும் நம்மை வியக்க வைக்கக்கூடியது. அந்த 'தப்பாட்டம்' நிகழ்ச்சியைப் பற்றி தனியொரு பதிவே போடலாம் அப்படியொரு நேர்த்தி. பிறகு பல சிறப்பான கலைநிகழ்ச்சிகள். பதிவு நீண்டு கொண்டே போவதால் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். 'காவாலி இசை' என்றதொரு வித்தியாசமான இசை நிகழ்ச்சியை வேலூர் பக்கிரிகள் நடத்தினார்கள். வேலூர் சிப்பாய் கலகத்திற்கு செய்திகளை தங்கள் நாடோடி பாடல்களின் மூலமாக பரப்பியவர்கள் இந்த பக்கிரிகள் மரபினை சேர்ந்தவர்கள் என்பது இங்கே நினைக்கத்தக்கது. 'வீரத்திற்கு ஏது சாதி' என்று சாதியத்தை கேள்வியெழுப்பியது ஒயிலாட்டம் இதற்கு ஒரு தனிப்பதிவு போடலாம். ம.க.இ.க வின் 'தூக்கு மரம்' எனும் இசைச் சித்திரம் தமிழ் மக்கள் இசை விழா எனும் மகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல். ம.க.இ.க வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி இசையை இப்படியும் ஆயுதமாய் பயன்படுத்தலாம் என்பதற்கோர் எடுத்துக்காட்டு. சிறுவர் கலைநிகழ்ச்சி, மருதிருவர் கும்மி, ஜிம்ப்ளா மேளம், தமுறு மேளம், வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாடல், தெருக்கூத்து என்று அந்த இரவே இருட்டை விரட்டிய இசை இரவாக மாறிப்போனது.

நிகழ்ச்சி முடிவடைந்த போது நேரம் இரவு 2.30. திரும்பி வந்த போது முழக்கங்களும் கருத்துக்களும் எனது எண்ணங்களை களமாக்கி கொண்டிருந்தன. இந்த நாட்டின் விடுதலையை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாக பகத்சிங் உணர்ந்திருந்தார் என்ற தோழர். மருதையனின் சொற்கள் என் மனதில் "நீ பொறுப்பானவன் தானா?" எனற கேள்வியாய் எதிரொலித்துக் கொண்டே இருந்த்து. அந்த கேள்வியை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்..

"நீங்கள் பொறுப்பானவர்தானா?"

 

 http://idaiyan.blogspot.com/2007/02/blog-post_26.html

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)