ஆட்டக்கடிச்சி,மாட்டைக் கடிச்சி கடைசியிலே மனுஷனைக் கடிச்ச கதைன்னு சொல்றது போல பெட்ரோலியம்,கெமிக்கல்ஸ்,தொலைத் தொடர்புன்னு தன் வர்த்தகத்தை விரித்து வைத்திருந்த ரிலையன்ஸ் குழுமம் இப்போது காய்கறி மார்க்கெட்டிங்கிலும் கால் பதிக்கத் தொடங்கி விட்டது.
'ரிலையன்ஸ் ஃபிரஷ்' என்ற பெயரில் சென்னையில் 12 இடங்களில் காய்கறி விற்பனை நிலையங்களை பிப்ரவரியிலிருந்து தொடங்கி விட்டது.
இதனால் சுமார் ஒரு லட்சம் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என வியாபாரிகள் அச்சப் படுகின்றனர்.
இது பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவ்ர் கூறுகையில்,''சென்னை முழுக்க மொத்தம் 120 மார்க்கெட்டுகள் உள்ளன.சில்லறை வியாபாரிங்க 1000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி, ஏத்துக்கூலி, வண்டி வாடகை, எறக்குக் கூலின்னு பல செலவுகளை கணக்கிட்டு காய்கறி மேல் இலாபம் வைத்து விற்றால் 300 வரை தினம் லாபம் பார்ப்பர். இவங்க வந்து 'மலிவு விலை'ன்னு வித்தா எங்க கதி என்னாகும்'' என்கிறார்.
முதல் கட்டமாக 12 கடைகளை சென்னையில் திறந்த ரிலையன்ஸ் நிறுவனம் ,தமிழ்நாடு முழுக்க 100 கணக்கில் கிளைகளை விரைவில் திறக்கப் போகிறார்களாம்.
திண்டுக்கல் பகுதியிலிருந்து மொத்தமாக விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதுல் செய்வதாகச் சொன்னாலும், இன்றுவரை கோயம்பேடில்தான் வாங்குவதாகவும் குற்றச் சாட்டு நிலவுகிறது.
இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவ்ர் வெள்ளையன் கூறும்போது,''இப்படித்தான் ஒரு காலத்துல வியாபாரம் செய்ய நவாப்பிடம் அனுமதி கேட்டுவெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழைஞ்சான்.அவனுடைய ஆக்கிரமிப்பப் பார்த்த நவாப் தளபதியிடம் அவர்களை என் காலடியில் கொண்டுவந்து போடுங்கன்னு சொன்னதும் ,தளபதி நவாப்பையே வெள்ளைக்காரன் காலடியில போட்டு அடிமையாக்கினான்.அது போலத்தான் இருக்கு இதுவும்.'ஏகபோக தொழில் வணிகச் சட்டங்கள்' தெரியாத்தால்தான் அரசாங்கம் இதுக்கு அனுமதி கொடுத்திருக்கு.சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பேரில் சலுகை தந்து,சில்லைறை வியாபாரிகள் வயித்துல அடிக்கிறாங்க'' என்கிறார்.
கோடிக் கணக்கில் பணம் புரளும் பல வர்த்தகத் துறைகளில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் எளிமையான முறையில் குறைந்த முதலீட்டில் காய்கறி வாங்கி அன்றாடம் வயித்துப் பாட்டை பாக்க நினைக்கும் நடுத்தர,கீழ்த்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்.
இதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் உதவி துணைத் தலைவர் சொல்கிறார்.''தள்ளு வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மொத்த விலைக்கே எங்களிடமே வாங்கி விற்கலாம். இதில் இடைத்தகர்களுக்கு வேலையில்லை. எடை மோசடி, சுகாதாரமற்ற சூழல் மாறும். விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து விவசாயத்திற்குத் தேவையான முன்பணம் கொடுத்து, பின்னர் கொள்முதல் செய்கிறோம் எனவே மலிவு விலைக்குத் தர முடிகிறது''என்கிறார்.
இப்படித்தான் ரிலையன்ஸ் மொபையில் சந்தையில் இடம் பிடித்தது.
சுத்தம், சரியான எடையளவு வரவேற்கத் தக்கது எனினும் கோடிக்கணக்கில் பணம் படைத்தவர்கள் சில்லறை வியாபாரிகளின் வயிற்றெரிச்சலுடன் இந்தத் துறையில் கால் பதிக்கத்தான் வேண்டுமா?
கோடிஸ்வரன் காய்கறி வியாபாரத்தை ஏ.சி அறை போட்டு ஷோவாகச் செய்ய முடியும்.ஆனால் ஒரு சிறு வியாபாரி தொலைத் தொடர்பு,பெட்ரோலியம் என்பதைக் கனவில்கூட நினைக்க முடியுமா?
சென்னையின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியில், 12 கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டாயிரம்தான் இருக்கும். இது எந்தவிதத்திலும் யாரையும் பாதிக்காது. மார்க்கெட் பெரிசு எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த துறையில் வியாபாரம் செய்யலாம் என உறுதி கூறும் 'ரிலையன்ஸ் ஃபிரஷ்' நடுத்தட்டு,மேல்மட்ட வர்க்கத்திற்கு வேண்டுமானால் வரப் பிரசாதமாக இருக்கலாம். கீழ்த்தட்டு மக்களுக்கு இது சாபக் கேடே.
http://sweet-pages.blogspot.com/2007/03/blog-post.html
|