இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு Print E-mail
செல்வன்   

சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பனிகளை அனுமதிப்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.இதைப்பற்றி அறிய சில தகவல்களைப் பார்ப்போம். இந்திய சில்லறை வணிகத்தின் வருடாந்திர வியாபாரம் 250 பில்லியன் டாலர்.(சுமார் 10 லட்சம் கோடி). மொத்தம் 90 லட்சம் சிறுவணிகர்கள் நாடெங்கும் இருக்கிறார்கள். இந்தியாவின் மத்தியதர வர்க்கம் புதிய பொருளாதாரக் கொள்கையால் வலுவடைந்தும் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது. இந்தியாவில் வருடத்துக்கு $18,000 சம்பளம் வாங்குபவர்கள் எண்ணிக்கை 70 லட்சம். இவர்களுக்கு இப்போது தரமான பொருள், குறைவான விலையில் வேண்டும். அது இப்போது கிடைப்பதில்லை.

2006 பிப்ரவரியில் மத்திய அரசு ஒரே பிராண்டை விற்கும் கம்பனிகளுக்கு 51% பங்கு முதலீட்டின் அடிப்படையில் துவக்கும் தொழிலுக்கு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் மெக்டோனல்ட்ஸ், பர்கர் கிங் போன்ற கம்பனிகள் இந்தியாவில் நுழைய விரும்பினால் நுழையலாம் என்ற நிலை இப்போது இருக்கிறது.(மெக்டோனல்ட்ஸ் ஏற்கனவே மும்பையில் இருக்கிறது என நினைக்கிறேன். அட்லாண்டாவில் சரவணபவனும் இருக்கிறது:)))

 

முக்கிய பிரச்சனையே வால்மார்ட், டார்கெட் போன்றவற்றை அனுமதிப்பதில் தான் இருக்கிறது. இம்மாதிரி நிறுவனங்களுக்குத்தான் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது.சில்லறை வணிகர்களுக்கு இவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

 

ஏற்கனவே ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் இறங்கியுள்ளது. சுதேசி கம்பனியான ரிலையன்ஸை அனுமதிப்பதா வேண்டாமா என்கிற விவாதம் வெளிநாட்டுக் கம்பனிகளை அனுமதிப்பதா வேண்டாமா எனும் அளவுக்கு உனர்ச்சி பூர்வமானது அல்ல எனினும் இந்திய கார்ப்பரேட்டுகள் சில்லறைவணிகத்தில் இறங்கினால் சில்லறை வணிகர்களுக்கு பாதிப்பு வருமா, வராதா என்ற கேள்வியும் எழுகிறது.

 

சில்லறைவணிகத்தில் இந்தக் கம்பனிகள் இறங்குவது விவசாயிகளுக்கு பெரும் வரமாக அமையும் என்பது உண்மை. இந்தியாவில் 50% காய்கறிகள் கடைகளை அணுகுமுன்னரே அழுகி வீணாகின்றன. இந்திய வணிகர்களால் குளிர்சாதன வசதி, நியாயமான விலை போன்றவற்றை விவசாயிகளுக்குத் தர இயலவில்லை. ஆனால் இந்தக் கம்பனிகள் சில்லறை வணிகத்தில் இறங்கினால் காண்டிராக்ட் விவசாயம், ஃபார்வெர்ட் டிரேடிங் போன்ற முறையில் விவசாயிகளுக்கு நல்ல விலையும், குளிரூட்டப்பட்ட பாதுகாப்புமுறையால் விளைபொருள் பாதுகாப்பு போன்றவையும் கிடைக்கும். பால் உற்பத்தி,முட்டை உற்பத்தி போன்றவை இதனால் நல்ல லாபம் அடையும்.

 

தற்போதைய நிலையில் காய்கறி சந்தைக்கு வந்ததும் வணிகர்கள் வந்து ஏலம் பேசி பொருட்களை குறைந்த விலையில் வாங்குவது நடக்கிறது. ஆனால் இந்தக் கம்பனிகள் முன்கூட்டியே விலைநிர்னயம் செய்து என்ன தரத்தில் பொருள் வேண்டும் என நிர்ணயம் செய்வதால் விவசாயிக்கு பயிரிடுவதற்கு முன்பே தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பது தெரியும். விளைபொருள் அழுகி வீணாவதும் நடவாது.

 

வாடிக்கையாளருக்கும் தரமான பொருள் குறைந்த விலையில் கிடைக்கும். எடைகுறைவு, அதிக விலை என்ற பேச்சே இல்லை. டீவி,டிவிடி முதல் காய்கறி வரை அனைத்துப்பொருளும் நல்ல தரத்துடனும் குறைவான விலையிலும் கிடைக்கும்.

 

சீனாவில் நுழைந்த வால்மார்ட் அமெரிக்காவுக்கு சீனப் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யத் துவங்கியது. இன்று 10 பில்லியன் டாலர் அளவுக்கு வருடந்தோறும் சீனப்பொருட்களை அமெரிக்காவுக்கு வால்மார்ட் மட்டும் ஏற்றுமதி செய்கிறது. இதனால் வால்மார்ட்டின் வாடிக்கையாளருக்குக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. சீன விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.

 

வால்மார்ர்ட்டால் அமெரிக்கச் சிறுவணிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் பல அமெரிக்க நகரங்களில் வால்மார்ட்தான் மிக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை தரும் கம்பனியாகவும் இருக்கிறது எனும் உண்மையையும் மறைக்க இயலாது. வால்மார்ட்டால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் அனைவரும் வெள்ளையர். வால்மார்ட்டால் வேலை பெறுவோரில் பெரும்பாலானோர் ஏழை கறுப்பினத்தவர் என்ற நிதர்சனமும் இருக்கிறது.

 

இந்தியாவில் வால்மார்ட்டால் இதுபோல் ஒரு மாற்றம் நிகழுமா என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. நமது அரசும் சிறுவணிகர்களை நினைத்துத் தயங்குவதும், விவசாயிகளை நினைத்து மயங்குவதுமாக இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

 

ரிலையன்சின் உள்நுழைவே 400,000 வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்கும் என நம்பப்படுகிறது. காண்டிராக்ட் விவசாயம், விவசாயத்துக்குக் குளிர்பதன சாதன கிடங்குகள், உணவுபதப்படுத்துதல் என ரிலையன்ஸ் மிகப்பெரும் திட்டங்களை தீட்டியுள்ளது.

 

மற்ற வெளிநாட்டுக் கம்பனிகளும் இந்தியாவில் நுழைந்தால் பெருநகரங்களில் உள்ள வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் விவசாயத்துறை மறுமலர்ச்சி அடையும் எனும் உண்மையும் இருக்கிறது. வாடிக்கையாளர் நல்ல பலனை அடைவார்கள் என்ற உண்மையும் இருக்கிறது. சிறு, குறு வணிகர்களுக்கு இதனால் நீண்டகால நன்மையும் கிடைக்கும். இப்போது அவர்கள் பெருவணிகர்களிடம் பொருளை வாங்கி மறுவிற்பனை செய்கின்றனர். இதன்பின் அவர்கள் அதை விட குறைந்த விலையில் பன்னாட்டுக் கம்பனிகளிடம் பொருட்களை வாங்கி மறுவிற்பனை செய்யலாம்.

 

இதனால் நீண்டகால அடிப்படையில் நன்மையே விளையும் என கருதுகிறேன். சில்லறைவணிகத்தைத் திறந்துவிடுவது தவிர்க்க இயலாத ஒன்று, நடைபெற்றே தீரவேண்டிய ஒன்று என்றே பல பிசினஸ் எக்ஸ்பெர்ட்டுகளும் கருதுகின்றனர்.

 

இதுபற்றி நண்பர் தங்கவேலின் கட்டுரையையும் படியுங்கள்.அவரது கட்டுரைதான் இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி

 

Reference: http://news.bbc.co.uk/1/hi/business/4662642.stm

http://www.indiadaily.com/editorial/2297.asp

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)