இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
மன்னிப்புக் கடிதம் Print E-mail
இரஞ்சித்   

மரணம் என்கின்ற வாழ்வியல் யதார்த்தத்தை எந்த நொடியிலும் நான் சந்திக்க நேருமாதலால் இக்கடிதத்தை உனக்க்காக இப்போதே எழுதி வைக்கிறேன். முதலில் என்னை மன்னித்து விடு. சரி, நான் செய்த குற்றங்களும், உனக்கு நான் செய்த துரோகங்களும் மன்னிக்க முடியாதைவை தான்,  ஒப்புக்கொள்கிறேன்.

அதனால் என்னை தயவு செய்து மன்னித்துவிடாதே.

குற்றங்களும் துரோகங்களும் எண்ணிலடங்காதைவை, நீ பிறந்தவுடனேயே உன்னைப் பால்வகைப்படுத்தி அடையாளப்படுத்தினேன், எதற்காகவோ உன்னை அலங்காரப்படுத்தி தயார்ப்படுத்துகின்ற அவலத்தை உனக்குக் காட்டப்போவதற்கும், நீ கொஞ்சி விளையாடுகின்ற உன் மழலை மொழியல்லாத வேற்றுமொழியில் உனக்கு இவ்வுலகத்தை அறிமுகப்படுத்தும் பழக்கங்களைப் போற்றியமைக்காகவும், நான் உனக்காக வைத்திருக்கும் ஒரு கல்விமுறையைத் தினமும் பள்ளி முடிவின் மணியோசையில் பீரிட்டு எழும்பிய சந்தோசக் கூக்குரல்  அதை எள்ளி நகையாடியதைப் புரிந்து கொள்ளாமைக்கும், குறிப்பிட்ட குடிலில் பிறந்தமைக்காக நீ இந்தப் பிரிவைச் சேர்ந்தவன் என்றும், இந்தக் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்கின்ற அடிப்படை மனித உரிமையைத் தட்டிப்பறிக்கின்ற அவலத்தை வளரவிட்டமைக்கும், நீ வளர்ந்தபின் உயிரியலின் அடிப்படைச் சாரமான காதலை வெளிப்படுத்துவதற்குக் கூட நீ கள்வனைப்போல் பயந்து பதுங்கிச் செய்கின்ற ஒரு ஈனத்தை வளரவிட்டமைக்கும், பின்னர் உயர்கல்வி என்கின்ற பெயரில் கண்ணுக்குத் தெரியாத  ஒரு முதலாளியின் தேவைக்கேற்ப உன்னைத் தயார்ப்படுத்தி  அடிமைப்படுத்தும் அவல நிலையை வளரவிட்டமைக்கும், உன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தேடுப்பதைக்கூட கண்மூடிச் சடங்குகளால் வியாபாரமாக்கியதற்கும்  போலியான தேசியவாதத்தையும், ஒடுக்குமுறைகளையும், இப்படி ஏராளமான அவலங்களைக் களையாமல் உனக்காக விட்டுச் செல்வதற்காகவும் அல்லது இந்தச் சூழலில் உன்னைத் தவிக்கவிடுவதற்காகவும் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

மேற்கூறிய குற்றங்களுக்கெல்லாம் நீ ஒருவேளை என்னை மன்னிக்கலாம், ஆனால் மன்னிப்புக் கோருவதற்குக் கூட அருகதையற்ற ஒரு மாபெரும் குற்றம்.. இல்லை, ஒரு நம்பிக்கைத் துரோகம் இழைத்திருக்கிறேன். நீ வாழப் போகும் சூழலை ஒரு குப்பைத் தொட்டியாக்கி, நீ சுவாசிக்கப்போகும் காற்றைக் கரியாக்கி, குடிநீருக்காகக் கூட நீயொரு போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலையை விட்டு வைக்கிறேன். இத்துரோகத்திற்காக ஒரு இரக்கமற்ற தண்டனையைக் கொடுத்துவிடு, நிச்சயம் மன்னித்துவிடாதே.

இந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்ட பல அவலங்களை வளரவிடாமல் செய்வதற்கு என்னால் இயன்றதைச் செய்வேன் என்று உனக்கு நான் உறுதியளிக்க முடியும். இவ்வுறுதி மொழி கருணை மனுவல்ல, அதனால் என்னை மன்னித்துவிடாதே. மேலும் மிகச்சிறிய அளவிலே நீ மகிழ்ச்சி கொள்வதற்கும், பெருமைப்படுவதற்கும் ஒரு சில விட்டுவைத்திருக்கிறேன், அவற்றைக் கூறி என் கருணை மனுவை நீ பரிசீலனை செய்ய நிர்பந்திக்கமாட்டேன்.

ஆனால் இக்கடிதத்தை நீ படிக்கும் போது இக்கடிதத்திற்கான அவசியமில்லாமலிருக்க வேண்டும் என்பது என்னுடைய ப்+ஏஏஏஏஏ.. ராசை. ஆனால் நீயும் இப்படி ஒரு கடிதம் எழுதிவிடக்கூடாது என்பது என்னுடைய கனவு.

ஒரு வேளை இக்கடிதத்துடன் நான் உன்னை நோக்கிப் பயணிக்கும் போது நான் மரணித்திருந்தால், யாராவது இக்கடிதத்தை இன்று புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தையிடம் சேர்த்துவிடுங்களேன். தயவுசெய்து இதை அரசு மருத்துவமனையிலுள்ள தொட்டில் குழந்தையிடம் கொடுத்து விடாதீர்கள், அது படிக்கும்முன் கிழித்துவிடும், "தண்டனை கொடுக்கும் முன் தப்பிவிட்டான் துரோகி" என்று.

இப்படிக்கு,
நிகழ்காலம்.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)