இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
கணினி மொழி Print E-mail
வடுவூர் குமார்   

பலருக்கு கணினி மொழி பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றிருக்கும் ஆனால் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் நிலையில் அல்லது கால அவகாசம் இல்லாமல் இருக்ககூடும்.

அவர்களுக்கு ஒரு சின்ன உதவிக்குறிப்பு.

கீழ் கண்ட புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள்.கணினி மொழி பற்றி சுத்தமாகத் தெரியாவிட்டாலும், இதன் மூலம் ஒரளவு தெரிந்துகொள்ளலாம். உங்களுக்குத் தேவைபடுவதெல்லாம் "ஆர்வம் மற்றும் சுயமுயற்சி" மட்டுமே.

 

இந்தப் புத்தகம் வெறும் வார்த்தைகளால் நிரப்பப்படாமல் ஒரு சின்ன பிராஜக்ட் எங்கிருந்து ஆரம்பித்து அதைத் தன்னிடம் படிக்க வரும் மாணவர்கள் மூலம் பாடம் நடத்திக்கொண்டே முடித்துக்கொடுப்பது போல் எழுதியுள்ளார்.
நமக்கும் வகுப்பறையில் படிப்பது போல் இருக்கும் அதே சமயத்தில் ஒரு பிராஜக்ட் பண்ணியது போல் இருக்கும்.



கட்டுமானத்துறையில் இருக்கும் எனக்கே 300 பக்கங்களுக்கு மேல் போகமுடிகிறது என்றால், உங்களாலும் முடியும்.




சரி, இந்த புத்தகம் மட்டும் கிடைத்தால் மட்டும் போதுமா, இதில் சொல்லியவற்றை முயற்சிக்க என்னென்ன வேண்டும்? என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று பார்ப்போமா?


1.வின்டோஸ்/லினக்ஸ் கணினி

2.நோட் புக்கில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

3.முக்கியமாக "கம்பைலர்" வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கிறது.இங்கு.இது வின்95யிலேயே அழகாக வேலை செய்கிறது.

4.ஓரளவு கணினி அறிவு.

கீழே உள்ளது தேவ் சி++ யில் நான் முயற்சிக்கும் ஒரு பகுதி.


 


கம்பைல் பண்ணிய பிறகு அதை எப்படி டாஸ் மூலம் எக்ஸிகியூட் என்பதை கீழே பாருங்கள்.

நானே ஆரம்ப நிலையில் உள்ளதால், மிகவும் விரிவாக எழுதமுடியவில்லை.



என்னுடைய அனுபவத்தில் இந்த மாதிரியான கணினி புத்தகங்களை முழுமூச்சாக உட்கார்ந்து 1 மாதம் அல்லது 2 மாதங்களில் முடிக்க முயற்சி செய்யாதீர்கள். நிதானமாக படியுங்கள். மிக முக்கியமாக கம்பைலரில் அவர்கள் சொல்லிய பாடங்களைப் போட்டு பார்க்கவேண்டும்.  அப்போது தான் தவறுகள் புரிபடும்.


இந்த மொழி மற்றும் மென்பொருட்களை பற்றி திரு பாலாஜி மற்றும் பலரும் அவ்வப்போது எழுதியுள்ளார்கள்.
திரு பாலாஜி மற்றும் பலரும் அவ்வப்போது எழுதியுள்ளார்கள்.

படித்துப் பயன்பெறுங்கள்.

http://madavillagam.blogspot.com/2007/03/blog-post_22.html

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)