இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
மாடு மேய்ப்பது எப்படி? Print E-mail
கப்பி பய   

டிஸ்கி: இது ஒரு காட்டுத்தனமான எதிர்வினைப் பதிவு.

நம்ம தம்பி வறட்டி தட்டுவது எப்படின்னு விலாவாரியா ஆராய்ச்சிக் கட்டுரை போட்டிருக்காரு. வறட்டி தட்ட சாணி வேணும். சாணி போட மாடு வேணும். மாடு சாணி போடனும்னா நாம அதுக்கு தீனி போடனும். அதனால இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு பார்ப்போம்.

மாடு மேய்க்கற விதம் நாம இருக்க இடத்தைப் பொறுத்து மாறும். மெட்ராஸ் மாதிரி பட்டனத்துல இருந்தா மாடு மேய்க்கறதை மறந்துடலாம். அந்த நேரத்துல ஜொள்ளுப்பாண்டி அண்ணன்கிட்ட டிப்ஸ் கேட்டு வாழ்க்கைல உருப்படற வழியைப் பார்க்கலாம். சிறு நகரமாகவோ கிராமமாகவோ இருந்தா மாடு மேய்க்க மேல ப்ரொசீட் பண்ணலாம்.

இப்ப மாட்டை நாம தேர்ந்தெடுக்கனும். பால் வியாபாரம் செய்யறதுன்னாலும் வறட்டி பிசினஸ் செய்யறதுனாலும் எருமை மாடு தான் பெஸ்ட். எருமைப் பால் தான் கொஞ்சம் கெட்டியா இருக்கும். பால்ல நிறைய தண்ணி கலக்கலாம். அதே நேரம் நிறைய சாணியும் போடும். பசு மாடுன்னா நம்மாள நிறைய தண்ணி கலக்க முடியாது. அவ்வளவுதான். வறட்டி பிசினஸ் அதே அளவுல தான் இருக்கும்.

இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு மெயின் டாபிக்குக்கு போகலாம். காலைல எழுந்ததும் மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு உங்க வயித்துக்கும் கொஞ்சம் ஏதாவது காட்டிட்டு மாட்டை ஓட்டிட்டு கிளம்பனும். கிளம்பும்போது அத்தியாவசமான பொருட்கள் எல்லாம் எடுத்து வச்சுக்கனும். ஒரு செக்லிஸ்ட் வேணும்னா கூட தயார் பண்ணிக்குங்க. மாட்டைக் கட்ட கயிறு, அந்த கயித்தைக் கட்ட ஒரு குச்சி, கொறிக்கறதுக்கு எதுனா எடுத்துக்கலாம். அப்படி இல்லைனாலும் பிரச்சனை இல்ல. கடலை விதைச்சிருக்க புஞ்சை பக்கமா மேய்க்க போயிடலாம். நிலத்துக்கு சொந்தக்காரன் பார்க்காத நேரத்துல ஒரு கொத்து செடியைப் புடுங்கி மடியில கட்டிக்கிட்டா அன்னைக்கு கொறிக்க ஆச்சு. சாப்பாட்டுக்கு வீட்டுக்கு திரும்பி வரதுன்னா பிரச்சனை இல்ல. சாயங்காலம் வரைக்கும் மேய்க்கனும்னா சாப்பாடும் கொண்டுபோயிடனும்.

மாட்டை ஒரு தரிசு நிலத்துலயோ அறுவடை ஆகி முடிஞ்ச நிலத்துலயோ குச்சியை அடிச்சு கட்டி மேய விட்டுடனும். போட்டி நிறைய இருந்தா ஏரியா பிரிச்சுக்குங்க. அந்தளவு மட்டும் கயிறை விட்டு மாட்டைக் கட்டுங்க. ஏன்னா எந்த வேலை செஞ்சாலும் நாம கே.டி.குஞ்சுமோனா தான் இருக்கனும். மாட்டைக் கட்டும்போது பக்கத்துல முள்காடு எதுவும் இல்லாம பார்த்துக்கனும். இல்லனா மாடு உள்ள போய் சிக்கி நம்ம உயிரை வாங்கிடும். அதை வெளிய இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம கைகாலெல்லாம் அக்குபஞ்சர் ஆகிடும். அதே மாதிரி பக்கத்துல எவனாவது பயிர் வச்சிருந்தா அந்த பக்கம் நம்ம மாடு போகாம பார்த்துக்கனும். இல்லைனா பஞ்சாயத்து ஆகிடும். நமக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனை. அதுல இது வேற எதுக்கு?

மாடு அதுபாட்டுக்கு மேய்ஞ்சுட்டு கிடக்கும். நாம அந்த கேப்புல நிறைய வேலை பார்க்கலாம். பம்ப் செட்ல படுத்து தூங்கிடலாம். அப்படி தூக்கம் வரலைனா மாட்டுக்கு வைக்க புல் புடுங்கலாம். ரெண்டு மூனு பேரா செட் சேர்ந்துட்டா மரத்தடில உட்கார்ந்துட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடலாம். ஓடிப்போன முருகேசன் சம்சாரத்தைப் பத்தி பேசலாம். கேப்டன் கட்சியைப் பத்தி பேசலாம். பஞ்சாயத்து தலைவர் ரோடு காண்டிராக்ட்ல பணம் அடிக்கறதைப் பத்தி பேசலாம். அமெரிக்க போன கோடிவீட்டு குப்புசாமியோட ரெண்டாவது புள்ளையைப் பத்தி பேசலாம். அடுத்த மாசம் மெட்ராஸ் போறதுக்கு இப்பவே ப்ளான் போடலாம். துரைசாமி கல்யாணத்துக்கு மொய் எவ்வளவு வைக்கலாம்னு கூடிப்பேசி முடிவு பண்ணலாம். இப்படி ஏதாவது பேசியோ தூங்கியோதான் பொழுதைக் கழிக்கனும்.

பொழுது சாய்ஞ்சதும் மாட்டை ஓட்டிக்கிட்டு வீட்டைப் பார்த்து நடக்கனும். வறட்டி பிசினஸ்ல நீங்க ரொம்ப சீரியசா இருந்தா ஒரு கூடைல நம்ம மாடு நிலத்துல போட்ட சாணியெல்லாம் அள்ளிட்டு வரலாம். மாட்டைக் கொட்டாயில கட்டிட்டு ஒரு குளியலைப் போட்டுட்டு மாட்டுக்கு தண்ணி காட்டனும். தவிடு புண்ணாக்கெல்லாம் போட்டா பால் நல்லா கறக்கும். மாட்டுக்கு தண்ணி காட்டினதும் அதுக்கு வைக்கோலோ புல்லோ போட்டுட்டு நம்ம கட்டையை சாய்க்க வேண்டியதுதான்.

இதே நீங்க ஒரு நகரத்துல இருந்தா கொஞ்சம் பிரச்சனை. மாடு மேய்க்க இடம் அவ்வளவு சுலபமா கிடைக்காது. ஊருக்கு வெளியே ஏதாவது ஏரிக்கரை பக்கம் போகனும். அங்கயும் பட்டா இல்லாத நிலத்துல பக்காவா பங்களா கட்டி வச்சிருப்பானுங்க. அவங்க தொல்லை தாங்காது. நம்ம மாட்டுக்கு அரிப்பெடுத்து அவங்க வீட்டு சுவத்துல உரசினா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுங்க. அதனால மாட்டை அந்த மாதிரி ஆளுங்க வீட்டு பக்கம் போகாம பார்த்துக்கனும்.

டவுண்ல இன்னொரு பிரச்சனை, நம்ம மாடு போஸ்டர், பேப்பர் எல்லாத்தையும் விரும்பி சாப்பிடும். ஆனா நாம விடக்கூடாது. பால் அளவு குறைஞ்சுடும். சாணியும் கம்மியா போயிடும். வறட்டி பிசினஸ் டவுன் ஆயிடும். அப்படியே போஸ்டரை சாப்பிட விட்டாலும் அரசியல் கட்சி போஸ்டரை சாப்பிட விடாதீங்க. ஜீரணம் ஆகாது.

டவுண்ல இன்னொரு பிரச்ச்னை டிராபிக். ரோட்டுல மாடு போகவே இடம் இருக்காது. பின்னாடி லாரி பஸ்காரன்லாம் வந்து ஹாரன் அடிச்சுட்டிருப்பாங்க. அதையெல்லாம் கண்டுக்காம நாம மாடு போற வேகத்துல போகட்டும்னு விட்டுடனும். உணர்ச்சிவசப்படக் கூடாது. பட்டாலும் பெரிய எஃபெக்ட் இருக்காது.

மாடு மேய்க்க அடிப்படையா இவ்வளவு தெரிஞ்சா போதும். மத்த விஷயமெல்லாம் போகப்போக அனுபவ அறிவுல கத்துக்கனும். நல்ல முறையில மாடு வளர்த்து பால் கறந்து கோ-ஆப்பரேடிவ் சொசைட்டில அதை வித்து, வறட்டி தட்டி பிசினஸை டெவலப் பண்ணி எல்லோரும் அண்ணாமலை படத்துல தலைவர் ரேஞ்சுக்கு வளர வாழ்த்துக்கள் :)

 

http://vavaasangam.blogspot.com/2007/03/blog-post_18.html

 
< Prev

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)