|
தம்பி
|
டிஸ்கி: இந்தப் பதிவு ஒரு கடுமையான உவ்வ்வே பதிவு. கிராமத்தில பிறந்து
வளர்ந்தவங்களுக்கு இது சாதாரணமா தெரிந்தாலும். நகரத்தில் பிறந்து வளர்ந்து
வந்தவங்களுக்கு பயங்கர அதிர்ச்சியா இருக்கும். அதனால டிஸ்கி படிச்சிட்டு
டிமிக்கி கொடுத்துட்டு ஓடி விடவும். மீறி எதையும் தாங்கும் இதயம்னு படிக்க
ஆரம்பிச்சிங்கன்னா நீங்க மகா தெகிரியசாலி.
இப்ப நாம வறட்டி தட்டுவது எப்படின்னு பார்க்கலாம்.
கேஸ், மின்சார அடுப்பு இதெல்லாம் வந்துட்ட காலத்துலயும் எதுக்குடா வறட்டிய
தூக்கிட்டு திரியறிங்கன்னு நீங்க கேக்கலாம். எல்லா வசதியும் இருக்கற இந்த்
காலத்துலயும் வறட்டியின் தேவை இருந்துகிட்டுதான் இருக்கு. அதனால அதை
எப்படி செய்யிறது என்று இந்த "எப்படி" பதிவில் பார்ப்போம்.
அதிகாலையில் எழுந்து மாட்டு கொட்டாயிக்கு போய் அங்க இருக்குற சாணி
எல்லாம் பொறுக்கி வீட்டு காம்பவுண்ட் சுவரு கிட்ட கொட்டணும். இது உங்கள்
உடலுக்கு நல்ல உடற்பயிற்சியும் கூட.
கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு ஓரு 8 மணி வாக்குல வைக்கோல் கொஞ்சம்
எடுத்துகிட்டு போய் அந்த சாணியுடன் கலக்கணும். கலக்கும்போது ஈசியா
இருக்கணும்னா சாணியுடன் கொஞ்சம் தண்ணி மிக்ஸ் பண்ணிக்கணும். இந்த
வேலை ஒரு பதினஞ்சி நிமிடம் எடுக்கும்.
கலந்ததுக்கு அப்புரம், அந்த கலவைய நல்லா ரெண்டு கைல பத்தற மாதிரி
உருண்டை உருண்டையா செஞ்சி அந்த காம்பவுண்ட் சுவருல தட்டணும்.
ஒவ்வொரு வறட்டியும் ஆறு இஞ்ச்க்கும் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இல்லன்னா ஒடச்சி யூஸ் பண்ண வேண்டியதா இருக்கும். செவுத்தலயே ரெண்டு
நாளைக்கு காயட்டும்னு விட்டிங்கன்னா அருமையான வறட்டி ரெடி. இதை
நீங்க அடுப்பெரிக்க யூஸ் பண்ணிக்கலாம்.
வேலையெல்லாம் முடிச்சிட்ட பிறகு உங்களுக்கு டயர்டா இருக்கும். போய்
டீ, டிபன் சாப்பிட்டு விட்டு அடுத்த மேட்சுக்கு தயாராகணும்.
மேலதிக தகவல்களுக்கு தலைவரின் "அதிசய பிறவி" மற்றும் "முத்து"
திரைப்படத்தைப் பார்க்கவும்
மேலும் சில உபயோகமான குறிப்புகள்.
1.அந்த கலவையுடன் சிறிது நெல்லின் உமியோ, பதரோ கலந்து கொண்டால்
வறட்டி க்ரிஸ்பியாக இருக்கும்
2.வறட்டி தட்டும்போது, பக்கத்துல ஒரு ஹீரோயின் அல்லது செகண்ட் ஹீரோயின்
இருந்தா ஈசியா தட்ட முடியும் ( ஐ மீன் வறட்டிய) அது பொண்டாட்டியாதான்
இருக்கனும்னு அவசியம் இல்லை.. அவங்க இல்லாம (வேற யாராவது) இருந்தா
இன்னும் பெட்டரா தட்ட வரும்..
3.எருமைச் சாணிய விட பசுவின் சாணத்துல தட்டினா, வறட்டி நல்லா வரும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கங்க
4.கொஞ்சம் செலவு பண்ணா கோபர் ப்ளாண்ட் இன்ஸ்டால் பண்ணிட்டா கேஸ்
பிரச்சினை தீர்ந்துடும், அரசு மானியம் கூட கிடைக்குதாம்!.
5.உங்க வீட்ல மாட்டு கொட்டாய் இல்லை என்றால் காலைல ரோட் ரோடா
போய் சாணி தேட வெண்டாம். ஏன் என்றால், ஒன்று சாணி கொஞ்சம
காய்ந்து போய் இருக்கும், இரண்டு தேடும் ஏரியா மிக பெருசாக இருக்கும்
சாணி கண்டிப்பாக கிடைக்கும் என்று தீர்மானமாக சொல்ல இயலாது!
6.இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஒரு வாளி எடுத்துட்டு (குறிப்பு: அந்த வாளியில்
பாதி தண்ணி நிரப்பி வையுங்கள் ), எதாவது ஒரு மாட்டை டார்கெட் செய்து,
அது பின்னாலயே ஓடணும். அது சாணி போடும் போது வாளியில் பிடிச்சுக்கணும்
பிடிச்ச பிறகு, கொஞ்சம் சாணி எடுத்து அது இடுப்பில் ஒரு பெரிய X போட்டு.
விட்டு(அடையாளம் தெரியணுமில்ல) அடுத்த மாட்டைத் தேடணும். அடுத்த மாடு
அன்றைக்கு சாணி போட்டு விட்டதா என்பது, சிலர் வாசம் வைத்துச் சொல்லி
விடுவார்கள்.
6. மாட்டை செலக்ட் பண்ணும்போது குண்டா இருக்கற மாட்டை செலக்ட்
பண்ணனும் அதுதான் நிறைய புல் தின்னும். அதுக்கேத்தமாதிரி அவுட்புட்
கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும் தகவல்கள் வேண்டுமெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
http://umakathir.blogspot.com/2007/03/blog-post_17.html
|