இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

 

நந்திகிராம் - அரச பயங்கரவாதம் வெறியாட்டம் ஆடிய இன்னுமொரு இடம். இந்த இரத்தக் களரியை சட்டத்தைக் கேடயமாக் கொண்டு, அதிகாரத்தின் கூர்முனைகளில் நிகழ்த்தியவர்கள் வேறு யாருமல்ல, கம்யூனிச புரட்சியின் முடிவில் அரசு உதிர்ந்து மறைந்துவிடும் என்று நவபரிசோதனையில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்டுகள். ஆனால் எப்படிப்பட்ட மார்க்சிஸ்டுகள்? அக்மார்க் இந்திய மார்க்சிஸ்டுகள்.

 

தந்தைப் பெரியார் பார்ப்பனீயம் இந்தியாவில் மூன்று முகங்களைக் கொண்டிருக்கிறது என்றார். ஒன்று வலதுசாரி இந்துத்துவ முகம், நடுநிலையாகத் தோன்றமளிக்கும் காங்கிரஸின் இந்திய தேசிய முகம், இடதுசாரி பொதுவுடமை காட்டும் முகம். அணிகின்ற முகமூடிகள் வெவ்வேறு தன்மையுடையனவாய்த் தோன்றுகிற போதும் உள்ளிருந்து தொழிற்படுகின்ற சக்தியாய் பார்ப்பனீயம் இருக்கிறது. தனது நலன்களை காப்பாற்றிக்கொண்டு, மக்களை அதிகாரத்தின் நுகத்தடிகளில் வைத்திருக்க, காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப அது முகமூடிகளைத் திறம்பட பயன்படுத்துகிறது. நந்திகிராமில் பூணூல் திருவிழா நடத்தி தனது சாதித் திமிரை காட்டும் காம்ரேடுகள் அணிவது நவ- இடதுசாரி முகமூடி எனில், கேரளாவில் நியாயமான நீர்ப்பங்கீட்டை மறுக்க அறிவியல், தேசிய அரசியல் என்று நியாயப்பூர்வமான வழிகள் அனைத்தையும் இடது கையால் தள்ளும் மூர்க்கத்தனமான நயவஞ்சக முகமூடி. இந்த வார பூங்காவில் நந்திகிராம் அரச பயங்கரவாதத்தினை ஒட்டி வெளிவந்த பதிவுகள் சில தொகுக்கப்பட்டிருக்கின்றன.

 

நந்திகிராமில் நடந்தது அரசின் தவறான அணுகுமுறையின் விளைவு என்று யாரும் நினைக்கமுடியாது. ஜனவரியில் அரசின் நிலஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனைகளிலேயே 6 பேர் கொல்லப்பட்டபின்னும் அரசு தனது அணுகுமுறைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை; மக்களைப்பற்றிய அலட்சியமிக்க, அதிகார பார்வைகொண்ட பார்ப்பனீய மனப்பான்மையுடன் போலீஸ் மற்றும் ஒடுக்குமுறை சக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து அழுத்தங்களைச் செலுத்தியே வந்தது அதன் அப்பட்டமான சார்புநிலையையும், மக்கள் விரோத அணுகுமுறையையுமே காட்டுகிறது. 4000-5000 எண்ணிக்கையிலான ஆயுதம் தாங்கிய போலீஸார் ஒரு கிராமத்தின் மேல் நடத்திய திட்டமிட்ட வன்முறை என்று இது வெளியில் தெரிந்தாலும், மூளையின் அணுக்களில் எல்லாம் படிந்து போய்விட்ட மக்களைப்பற்றிய அலட்சியமும், தனது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளும் வெறியுமே இந்த அரசபயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்களாகும்.

 

இடதுசாரி இந்துத்துவம் இப்படியான செயற்பாடுகளில் சற்றும் கூச்சமின்றி ஈடுபடும் போது வலதுசாரி தன்னை மீட்டெடுக்கவும், புதுக்கிக்கொள்ளவும் தனது பழைய வழிமுறைகளில் ஒன்றையே கையில் எடுக்கிறது. சூத்திரனுக்கொரு நீதி என்று சாதிக்கொரு நீதி சொல்லும் சாத்திரச்சதிகளுக்கு எப்போதும் போல் புதுவிளக்கம் கொடுக்கவும், வார்த்தை ஜாலங்களில் மூடிமறைக்கவும் தொடங்குகிறது. மனுநீதி குப்பை என்ற திருவின் கட்டுரை அதைக் கட்டுடைக்கும் தொடர் முயற்சிகளில் ஒன்று.

 

மருத்துவச்சுற்றுலா பற்றிய பதிவொன்று இந்திய மருத்துவத்துறை பலநாட்டு நோயாளிகளுக்கும் சேவையளிக்கும் வகையில் வளர்ந்துவருகிறது என்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மையில் இந்தியாவின் மக்கள் நலனுக்கு ஏற்புடையது என்பது திறந்த விவாதத்துக்கு ஆட்படுத்தப் படவேண்டும். இது இந்திய மருத்துவ அறிவைப் பயன்படுத்துவது தொடர்பானது மட்டுமன்று; இந்திய மருத்துவத் தொழிலாளர்கள், மருத்துவ வளங்கள், மற்ற சக்தி மூலங்கள் (தண்ணீர், மின்சாரம், மக்கள் பணத்தில் பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்கள், வாங்கப்பட்ட மருத்துவக் கருவிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை) மக்களுக்கு மறுக்கப்பட்டு வெளிநாட்டவருக்கு குறைந்த செலவில் சேவையளிக்கப் பயன்படுத்தப்படுகிறதா என்பது விவாதத்துக்குரியது. குறிப்பாக இப்படி வெளிநாட்டவர்க்கு மருத்துவ சேவையளிக்கும் தொழில் முறைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் உள்நாட்டு வளங்களுக்கு தகுந்த விலையளிக்குமாறு செய்து அப்பயன்கள் மக்களுக்குச் சென்று சேர வழிசெய்யப்படவேண்டும். 

 

 

இந்த வார சிறப்பு ஒலிப்பேழையில் இசைத் தமிழ் இரண்டாம் பாகம் ஒலிப்பரப்பாகிறது.இந்தப் பகுதியில் பேராசிரியர் திருமுருகன் அவர்கள் எவ்வாறு தமிழ்ப்பண்கள், இராகங்களாக்கப்பட்டன, தாளங்களின் பெயர்கள் மொழி மாற்றப்பட்டன என்று விவரித்து இப்படியான மொழி மாற்றத்தைச் செய்தற்கான பின்னணி என்ன என்று விவரிக்கிறார். மனதில் பதிந்த எடுத்துக்காட்டு, 4 ஆம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையாரும், 7ஆம் நூற்றாண்டு ஞானசம்பந்தரும் (தோடுடைய செவியன்..) தமிழ் பாடிய நட்டபாடை என்ற பண் இன்றும் கச்சேரிகளில் கம்பீர நாட்டை என்ற இராகத்தில் பாடப்படுகிறது. இப்படியான பெயர் மாற்றம் செய்ததால் விளைந்தது என்ன? 3 ம் நூற்றாண்டில் பாடப்பட்ட தமிழிசை கர்நாடக சங்கீதமாக பெயர்மாற்றப்பட்ட போது அதற்கு 13ம் நூற்றாண்டில் சாரங்க தேவரால் எழுதப்பட்ட சங்கீத இரத்னாஹாரம் என்ற நூல் தான் அடிப்படை என்றும், தியாகராஜரை சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் போலியாக உரிமை கொண்டாட முடிகிறது. இதை தமிழர்களில் பெரும்பாலானோர் கூட நம்புவதும் நிகழ்கிறது. இப்படியாக தமிழிசையின் கூறுகளையும், அதன் மாற்றங்களையும் அழகாகப் பாடல்களின் மூலம் விளக்குகிறார் பேராசிரியர்.

 

தமிழக வரலாறு பற்றி மதனை முன்னிருத்தி வழங்கப்பட்ட பதிலானது பல கேள்விகளை எழுப்புகிறது. மதன் போன்றவர்கள் ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளை ஜனரஞ்சகமாக எழுதும் திறனுடையவர்கள்; அவர்களை தமிழக வரலாற்றை எழுதுமாறு கேட்பது ஒருவகையில் பொருந்தாது என்றபோதும், தமிழக வரலாறு உண்மையான முறையில் எழுதப்பட வரலாற்றாய்வாளர்களும், அறிஞர்களும், அரசும் முனைய வேண்டும் என்பது தமிழக வரலாறு இதுவரை எழுதப்படவில்லை என்ற எதார்த்தத்தைக் காட்டுகிறது.

 


வழமைபோல இராம.கி அய்யாவின் கட்டுரை செய்திகள் பல வழங்கி நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. இது தவிர விக்கிபீடியாயின் நம்பகத்தன்மை தொடர்பான கட்டுரை ஒன்றும் முக்கியமானது. கண்ணகி சிம்மவாஹினியாகும் கதை பற்றிய புகைப்படப்பதிவு சமகாலத்தில் நடக்கும் சம்ஸ்கிருத மயமாக்கம் பற்றிய பதிவு. சில நகைச்சுவை கட்டுரைகளும் முத்துலெட்சுமியின் வித்தியாசமான அணுகுமுறை பற்றிய கட்டுரையும், இன்னும் பிற கட்டுரைகளும் இவ்விதழை அலங்கரிக்கின்றன.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)