இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
இப்பவே தண்ணி தவிக்குது Print E-mail
பெருசு   

இந்த ஐக்கிய நாடுகள் சபை அப்படின்னு ஒண்ணு இருக்காமே. அங்கே ஆணி புடுங்கறவுங்க யாராவது இருக்கீங்களா தம்புகளா. என்னோட பொறந்த தேதிய சொல்றேன்.ஏதாவது செய்ய முடிமான்னு பாருங்க.

ஏன்னா சும்மா வெட்டியா ஏதாவது ஒரு தேதிய எடுத்துக்க வேண்டியது. இன்னிக்கு அந்த நாளு , நாளைக்கு அந்த நாளு அப்படின்னு தேதி குறிச்சு
கொண்டாடச் சொல்ல வேண்டியது.இதுதான் அவனுங்க வேலைன்னு சொலறாங்க.

இப்படித்தாங்க கொஞ்ச வருஷத்துக்கு முந்தி மார்ச் 22ம் தேதிய "உலக நீர் நாள்" அப்படின்னு குறிச்சு விட்டாங்க.

உலகத்துல நிறைய தண்ணி இருந்தாலும்,(நல்ல குடிநீர்) எல்லாருக்கும் கிடைக்குறது குதிரைக்கொம்பா போச்சு.

உலகம் சூடாயிட்டு வருதுன்னு எல்லாரும் பேசிக்கறாங்க.அது நம்ம தாய்க்குலங்க
எருவாமுட்டி வெச்சி தண்ணி காச்சறதாலியோ, வெறகு வெட்டி அடுப்பு எரிக்கறதுனாலியோ போகிக்கு பழச எரிக்கறதாலே இல்லியாங்க.

மக்கள் தொகை அதிகமாக அதிகமாக எல்லாத் தேவைகளும் அதகமாகுது இல்லியா,
இப்போ பெட்ரோலுக்காக எப்படி சண்டை போடறாங்களோ அதே மாதிரி நல்ல குடிதண்ணிக்கும் சண்டை போடற காலம் ரொம்ப தூரத்திலே இல்லீங்கோ.

இப்பவே போடுலியான்னு கேக்காதீங்க. இப்ப போடுற சண்டைய நம்ம ஆளுங்க நெனச்சா ஒரே நாள்லே தீத்துக்க முடியும். அவங்க அவங்க அரசியல் லாப நஷ்டம் பாக்காம, உக்காந்து பேசுனா, இந்தப்பிரச்சினைய மக்கள் பிரச்சினையா நெனச்சா தீர்க்க முடியாதா என்ன.

நம்ம குழந்த குட்டிகளுக்கு சொத்து, நகை நட்டு சேத்து பிரயோசனம் இல்லீங்க. குடிக்க ஒரு வாய் தண்ணி இல்லேனா எவ்ளோ சொத்து இருந்தாலும் ஒரு மண்ணாங்கட்டியும் பிரயோசனம் கிடயாதுங்க.

2030ம் வருஷத்துலே மொத்த சனத்துலே முக்கால்வாசி பேருக்கு குடிக்க, கழுவ தண்ணி இருக்காதுன்னு இதே ஐக்கிய சபையிலிர்ந்து சொல்றாங்கோ.


உலக உருண்டையிலே இருக்குற நதிகள்ளெ கிட்டத்தட்ட எல்லா நதிகளுமே வறண்டு போக வாய்ப்பு இருக்குன்னு வேறே சொல்றாங்க.

அதுலே முக்கியமா பத்து நதிகள சொல்றாங்க.

1.
பெரியாறு (முல்லைப்பெரியாறு இல்லீங்க, இது புதரகத்திலே இருக்கிற பிராவோ நதி.).

2.
டான்யூப் ஐரோப்பா கண்டத்துலே இருக்குரது,

3.
வெள்ளியாறு (இது தென் அமேரிக்காவுலே இருக்குதுங்க.)

4.
கங்கையாறு (சொல்லவே வேண்டியதிலே, இனி மோட்சத்தை தேடி காசிக்கு போக
வேண்டியது இல்ல, அதுவா நம்ம தேடி வரும்.).

5.
யாங்சே (இது சப்பை மூக்கு சைனாக்காரனுது).

6.
மேகாங் (இதுவும் இன்னோரு சப்பை மூக்கன், வியட்நாம்காரனது)

7.
சல்வீன் ( சைனாவுலே பொறந்து பர்மா வழியா தாய்லாந்துக்கு ஓடறது

8.
இண்டஸ் (போச்சு, போச்சு, சர்தாருங்க எல்லாம் அமெரிக்காவுக்கு டேக்ஸி ஓட்டப்போக வேண்டியதுதான்.
அது மட்டுமில்லாம திபெத்லே பொறந்து காஷ்மீர் வழியா கராச்சிக்கு ஓடறதாலே பாக்கிஸ்தானுக்கு ரொம்ப முக்கியம் இந்த நதி.இதுகு இன்னோரு சண்டை கூட வரலாம்)

9.
நைல் (நதியா நதியா நைல் நதியான்னு இனி பாட முடியாதுங்க, அடப்பாவிங்களா, எத்தனை நாடுகள் இந்த
தண்ணிய பங்கு போட்டுக்கறாங்க. ரெண்டு ஸ்டேட்டுக்குள்ளே முடியிலியே மக்கா.)

10.
முர்ரெ டார்லிங் (யாரையோ கூப்புடற மாதிரி இருக்குங்களா, ஆஸ்திரேலியாவும் அவுட்).


இதுக்கப்புறமும் தயவு செஞ்சு யாரும் தண்ணிய தண்ணியா செலவு  செய்யாதீங்க. அப்புறம் வெட்டியா அடிச்சுக்க வேண்டியிருக்கும். அப்புறம் ஒழுகுற ரத்தத்துக்கு கூட கழுவ தண்ணி இருக்காது.( என்ன, காபித்தூளும் மஞ்சத்தூளும் வெச்சுக்கலாங்கறீங்களா, போய்யா மொக்க, குடிக்கவே தண்ணி இல்லே, இதுல எங்கய்யா இதெல்லாம் விளையும்.)


என்னவோ சாமி, மனசுலே பட்டத சொல்லிட்டேன். இந்தப்பிரச்சினைக்கு முன்னாடி சொத்து, சாதி, மதம் இதெல்லாம் தூசி.

தயவு செஞ்சா மக்கா, எல்லாரும் யோசிங்க, படுத்துட்டு உக்காந்துட்டு, சாப்புடும்போது , நிக்கும்போது, கார்ல பஸ்ல ட்ரெய்ன்ல விமானத்துல, முக்கியமா ஒவ்வோரு வாய் தண்ணி குடிக்கும்போதும் யோசிப்பீங்களா. (எங்கியாவது ரெண்டு மூணு கெணறு வாங்கி போடலாம்ன்னு யோசிக்காதீங்க,வெறும் காத்துதான் வரும் பாம்பும் தவளையும்தான் அங்கெ வீடு கட்டும்)

இந்த எதிர்காலப் பிரச்சினையில நம்ம பங்கு என்ன, என்ன செஞ்சு எதிர்காலத்தை காப்பாத்த முடியும்,  ஒரெ டம்ளர் தண்ணிய நாலு பேர் ஸ்பூன்லே குடிக்க முடியுமா.

யோசிங்க, தயவு செஞ்சு யோசிங்க.

 

http://thacnathaku.blogspot.com/2007/03/blog-post_22.html

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)