இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
இண்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள் - 1 & 2 Print E-mail
செந்தழல் ரவி   

வேலை தேடும் இளைஞர்களுக்கான பகுதி இது. இன்டர்விவில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகள், அதற்கான புத்திசாலித்தனமான பதில்கள் போன்றவற்றை தொடர்ந்து இப்பகுதியில் காணலாம்.

 

 

1. உங்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளதா?

 

 

`இவங்ககிட்ட வேலை கேட்டு வந்தா நம்ம பத்து பேருக்கு வேலை கொடுப்பமான்னு கேட்கிறாங்களேன்னு' குழம்பி விடக்கூடாது. இதற்குள் இரண்டு விதமான பொருள் பொதிந்திருக்கலாம். ஒன்று - உங்களது கனவு எவ்வளவு பெரியது என்பதை தெரிந்து கொள்வது. அதாவது தனியாக நிறுவனம் தொடங்கும் கனவில் இருப்பவருக்கு கண்டிப்பாக தலைமை பண்பு இருக்கும். எனவே அதனை கண்டறிவதற்காக கேட்கலாம்.

 

 

இரண்டு - இவன் கொஞ்சநாள் கழித்து நமது நிறுவனத்தை விட்டு சென்று விடுவானோ என்ற பயம்தான் காரணம்.

 

 

அதனால் உங்களை கேள்வி கேட்பவர் எதனை அடிப்படையாக மனதில் கொண்டு கேட்கிறார் என்பதை பொறுத்து பதில் அளியுங்கள். முதலில் சொல்லப்பட் டதுதான் காரணம் எனில் தைரியமாக உங்களின் சுயதொழில் கனவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். தப்பில்லை. அது உங்களின் மதிப்பை உயர்த்தும்.

 

 

இரண்டாவதாக சொல்லப்பட்டதுதான் காரணம் எனில், அப்படியே `அந்தர்பல்டி' அடியுங்கள். சுய தொழில் தொடங்கும் அளவிற்கு `ரிஸ்க்' எடுக்கும் எண்ணம் இல்லை என்பதை விளக்குங்கள். இப்படி சொல்லிவிட்டு கேள்வி கேட்பவரின் முகத்தைப் பாருங்கள் நம்பிக்கை ஒளி தென்படும்.

 

 

2. திருமணம் செய்து கொள்வீர்களா? அப்படி செய்துகொண்டால் எத்தனை குழந்தைகளைப் பெற்றுக் கொள்வீர்கள்?

 

 

இது போன்ற கேள்விகளுக்கு `தேவையற்ற கேள்விகள்' என்று பெயர். உங்களது மனைவி என்ன செய்கிறார்? உங்களுக்கு தீராத நோய் எதாவது உள்ளதா? நீங்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்? போன்ற கேள்விகளும் இதே வகையைச் சேர்ந்ததுதான். வேலையின் செயல்பாட்டிற்கு சம்பந்தமேயில்லாத இதுபோன்ற கேள்விகளை சில சமயம் எதிர்கொள்ள வேண்டிவரும். இதற்கு பதிலளிப்பது கத்தி மேல் நடப்பது போன்றது.

 

 

சில சமயங்களில் பதிலளிக்கவும் முடியாது, பதிலளிக்காமல் இருக்கவும் முடியாது. உங்களின் தனிப்பட்ட கருத்துக்கள், திட்டங்கள் ஒருவருக்கு பிடிக்கலாம், மற்றொருவருக்கு பிடிக்காமலும் போகலாம். சாதகமும், பாதகமும் கலந்திருப்பதால் இரண்டு பக்கமும் சேதாரம் ஆகாமல் பதிலளிக்கலாம். உதாரணமாக, எந்தக்கட்சியை சேர்ந்தவர் நீங்கள்? என்ற கேள்விக்கு, "நடுநிலையானவன் அல்லது கட்சியில் எல்லாம் ஆர்வம் இல்லை'', எனப் பதிலளிக்கலாம். `குழந்தைகள் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை', என்று பதிலளிக்கலாம். (திட்டங்கள் என்றாலே மாறக்கூடியதுதானே! வேலை கிடைத்து நன்றாக செயல்பட்டால், நீங்கள் பத்து குழந்தைகளைப் பெற்றாலும் யாரும் கேட்கப் போவதில்லை. எனவே சும்மா களத்தில் இறங்கி அடிச்சாடுங்கள்).

 

 

3. ஒரு பேனாவை என்னிடம் விற்றுக் காட்டுங்கள்?

 

 

விற்பனைப் பிரிவின் வேலைக்கான இன்டர்விïவில் இந்தக் கேள்வியை தாராளமாக எதிர்பார்க்கலாம்.

 

 

விற்பனையாளரின் அடிப்படையே தேவைப்படுபவருக்கு தேவையானதை விற்பதுதான். முதலில் அவரிடம் இருக்கும் பேனாவின் சிறப்பம்சங்கள், பிரச்சினைகள் பற்றி கேளுங்கள். இரண்டாவதாக விற்கப்போகும் பேனா அவர் வைத்திருக்கும் பேனாவைவிட எவ்வகையில் சிறந்தது என்பதையும் விளக்கி சொல்லுங்கள். இறுதியாக விற்கப்போகும் பேனாவின் விலை அதிகமாக இருந்தால்-விலை அதிகமாக இருந்தாலும் சிறப்பம்சங்கள் நிறைந்தது என்பதை உணர்த்துங்கள். விலை குறைவாக இருந்தால் இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் விலை மிகக்குறைவுதான் என்று சொல்லுங்கள். எந்த பொருளாக இருந்தாலும் இதுதான் விற்பனையின் அடிப்படை சூத்திரமே. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?.

 

 

ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கான `இன்டர்விï' செல்வதாக இருந்தால், அப்போது அவர்கள் எதிர் நோக்க வேண்டிய கேள்விகள் எப்படி இருக்கும், அதற்கு பதில் எப்படி இருந்தால் நல்லது என்பது குறித்து பார்ப்போம். இனி இன்டர்விïவை சந்திக்க தயாராகுங்கள்.

புதிய வேலை தேடுபவரா?

4. கடந்த முறை நீங்கள் வேலை செய்த நிறுவனத்தின் பாஸ் அல்லது மேலாளரின் `பாசிடிவ்' மற்றும் `நெகடிவ்' குணங்களைப் பற்றி கூறுங்கள்?

வலை விரிக்கும் கேள்வி இது. நிதானிக்காமல் காலை எடுத்து வைத்தால் வசமாக சிக்கி விடுவீர்கள். எனவே நிதானமாக பதிலளிக்க வேண்டும். கேள்வி கேட்பவருக்கு உங்களின் பழைய பாஸைப் பற்றி தெரிந்து எதுவும் ஆகப் போவதில்லை. நாம் இல்லாத போது நம்மைப்பற்றி இவன் மற்றவர்களிடம் தவறாக பேசும் குணம் கொண்டவனா? என்பதை கண்டறியவே இந்தக் கேள்வி.

முடிந்தளவு பாசிட்டிவாகவே பதில் சொல்லுங்கள். இன்டர்விïவில் மட்டுமன்றி எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விதி என்னுடைய `பாஸ்' எப்போதுமே சரியானவர் (விஹ் ஙிஷீææ வீæ ணீறீஷ்ணீஹ்æ க்ஷீவீரீலீå) என்பதுதான். எனவே பாசிட்டிவாகவே பேசினால் உங்களை கேள்வி கேட்பவர்களுக்கு பிடித்து போகும். 

5. வேலை கிடைத்தால் எங்கள் நிறுவனத்தில் வந்து என்னென்ன மாற்றங்களை செய்வீர்கள்?

வேலையே இன்னும் கிடைக்கல அதுக்குள்ளேயேவா...! என்று குழப்பம் அடைய வேண்டாம். வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு கையில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கும் வரை நீங்கள் அந்நிறுவனத்திற்கு வெளியாள்தான். எனவே நீங்கள் எதையாவது குத்துமதிப்பாக சொல்ல, பிள்ளையார் பிடிக்க, குரங்கு வந்த கதையாய், முடிந்துவிட வாய்ப்புள்ளது.

பிரச்சினை என்னவென்று தெரியாமல் அதற்கு தீர்வுகாண முடியாது. என்னை நீங்கள் தேர்வு செய்தவுடன் நிறுவனத்தில் நடக்கும் விஷயங்களை கூர்ந்து கவனிப்பேன். பின் அதற்கு தேவையான படி மாற்றங்களையும், செயல்பாடுகளையும் விரைவுபடுத்துவேன் என்று கூறிவிடுங்கள். பக்குவமான பதிலால் உங்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

6. உங்களது `பாஸ்' ஒருதிட்டத்தை பற்றி சொல்கிறார். அந்த திட்டம் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனத் தெரிகிறது. ஆனால் `பாஸ்' அத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறார், எனில் இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

விசுவாசத்திற்கும், நேர்மைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் சூழல் இது. திட்டம் சரியில்லை என்றால் அவர் கோபித்து கொள்வார். ஆமாம் சாமி! போட்டால் நேர்மைக்கு பங்கம் வரும். எப்போதுமே இதைப்போன்ற சூழலில் இரண்டையும் ஒன்று சேர்த்து புத்திசாலித்தனமாக பதிலளிக்கவேண்டும்.

என்னைவிட `பாஸ்' பலவிதங்களில் யோசிக்க கூடியவர். எனவே, பொறுமையாக அத்திட்டத்தில் உள்ள சாதக - பாதகங்களை அவரிடம் எடுத்துச் சொல்வேன். அவரின் திட்டம் முழு வெற்றியை பெற என்னுடைய கருத்துக்களை எடுத்துக் கூறி புரிய வைப்பேன். அதன் பிறகும் `பாஸ்' தனது முடிவில் உறுதியாக இருந்தால் நானும் பாஸின் திட்டத்தை முழுமையாக நம்பி களத்தில் இறங்கி விடுவேன்.

இந்த பதிலுக்கு கை தட்டல் கூட கிடைக்கும்.

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

 

http://tedujobs.blogspot.com/2007/03/1.html

http://tedujobs.blogspot.com/2007/03/2.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)