இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

தேசவிடுதலைப் போரில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பது குறிப்பிடும்படியான இராணுவ, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கண்கூடு. இந்திய விடுதலைப்போரில் அப்படியான பல சந்தர்ப்பங்களைக் காட்டமுடியுமென்றாலும் எம்டன் நீர்மூழ்கியின் குண்டுவீச்சை சட்டெனக் குறிப்பிடலாம். ஜெர்மனியின் உதவியுடன் செண்பகராமனால் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சென்னை ஜார்ஜ் கோட்டையின் மேலும், பர்மா எண்ணெய்க் கம்பெனிக்கிடங்குகள் மேலும் வீசப்பட்ட குண்டுகள் அக்காலத்தில் இராணுவ ரீதியிலும், சென்னையின் தொழில் மட்டும் பொருளாதார நிலைமைகளையும் கடுமையாகப் பாதிக்கவே செய்தன. கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இவ்வரிசையில் வைத்துப் பார்க்கலாம். வான் புலிகளின் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மேலான விமானப்படைத் தாக்குதல் போர் முனையில் மட்டுமல்லாது அரசியல் தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் விமானப்ப்டைத்தளத்தின் மீது குண்டுவீசி மீளுவது என்பது அவர்களது பயிற்சி, திறமை இவற்றை மட்டும் சொல்லுவதாக அல்லாது, இளைஞர்களின் பங்களிப்பு, புலம்பெயர்ந்த தமிழ் அறிவுஜீவிகளின் பங்களிப்பு, விமானப் பயிற்சி-கட்டுப்பாடு இவற்றுக்குத் தேவையான உட்கட்டமைப்புகள், போராளிகளின் முனைப்பு என்று பல வளங்கள் குறித்துச் சொல்கிறது. இவ்விதயம் குறித்து பல தளங்களில் பேசப்பட்டு வருகையில், தமிழர்களது பறப்பு முயற்சிகள் என்ற சிறுபதிவு அவர்களது ஆரம்ப கால முயற்சிகள் பற்றிய சில தகவல்களைத் தருகிறது. அற்புதனின் பதிவு புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பினாற் சாத்தியப்படக்கூடிய நவீன தொழில்நுட்பம் எத்துணை அவசியம் என்பதைப் பற்றி பேசுகிறது.


செல்வன் தனது கட்டுரையில் உலகமயமாக்கத்தால், தனியார் முதலீட்டால் சிறுதொழில்கள் நசிந்து வருகின்றன என்பதை மறுக்கிறார் . சில்லறை வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களை (ரிலையன்ஸ்) அனுமதிப்பது நல்லதா, அது சிறு வியாபாரிகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்த பத்ரியின் கட்டுரை முக்கியமானது. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தமது சோதனைக்கூடமாக இந்தியாவை பயன்படுத்துவதும், ஏழை எளிய மக்கள் அதனால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதும் கவலைக்குரியது. திரு தனது கட்டுரையில் மிருகங்களின் நலவாழ்வை உறுதி செய்து அதை நடைமுறைப்படுத்துகிற அரசு, எளிய மக்கள் பாதிக்கப்படும் இவ்விதயத்தில் மெத்தனமாய் இருப்பது பற்றிய கேள்வியெழுப்புகிறார்.


மதவழிப்பட்ட மனித மனம் எதையும் இயல்பாகப் பார்ப்பதில்லையென்றுதானோ என்னவோ சிட்டுக்குருவியை முன் வைத்து ஞான உபதேசம் செய்கிறார் பாரதியார்! மத உணர்வு கொண்ட மனம் நிறுவனப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை காயப்படுத்திவிடாமல் எதையும் பார்க்கவும் அனுசரிக்கவும் சொல்கிறது. ஒவ்வொருவரும் அவர்களுக்கான உடைகளைத் தீர்மானிக்க உரிமையுடையவர்கள் என்பது சாதாரணமான புரிதல். ஆனால் மதவழிப்பட்ட மனம் அதைக்கூட உணரமுடியாத சிக்கல் நிறைந்ததாய் இருக்கிறது. செல்வநாயகி எழுதிய 'சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம்' இதை அழகிய நடையில் பேசுகிறது.


பொன்ஸ் இவ்விதழில் இரண்டு புத்தகங்கள் பற்றிய தனது வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். தனது தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் கொண்டு விளங்கும் நமது பாட திட்டத்தில் 'சமையற்கலைக்கு ஏன் இடமில்லை?' என்ற மிகவும் முக்கியமான கேள்வியை முன்வைத்து, 'ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது' என்ற புத்தக வாசிப்பனுவத்தை சுவைபடச் சொல்லியவர், 'அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்' என்ற மற்றொரு புதினத்தைப் பற்றிய தனது அனுபவத்தை அழகுபடச் சொல்கிறார். இவ்வாரத்தில் வெளிவரும் ஒவிப்பேழை மூன்றாம் பகுதியில் முனைவர் இரா. திருமுருகன், தமிழின் மூன்று வகைகளைப் பற்றிய குறிப்புடன் தொடங்கி, நாடகத்தமிழைப் பற்றி விரிவாக உரையாற்றியிருக்கிறார். தமிழிசையிலே தெலுங்கின் ஆதிக்கம் பற்றிக் குறிப்பிடும் இவர், திருப்புகழ், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் காணப்படும் நாட்டியக்கூறுகளை நாம் புரிந்து, போற்றும் வண்ணம் இப்பகுதியில் விளக்கியிருக்கிறார்.


கிரிக்கெட் தொடர்பான பல பதிவுகள் இவ்விதழில் இருக்கின்றன. இராம.கியினுடைய இடுகை கிரிக்கெட் விளையாட்டின் பின்னாலுள்ள அறிவியல் மற்றும் நுட்பத்தை அழகுத்தமிழில் சொல்லிய காரணத்தால் நம்மைக் கவர்ந்தால், தமிழ்சசியின் பதிவு கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகப் பார்க்க வேண்டியதைப் பற்றிய தீர்க்கமான பார்வையைத் தருகிறது. பத்ரியின் கிரிக்கெட் பற்றிய பதிவு சுவையானதும், புதிய தகவல்களைத் தருவதுமாக இருக்கிறது.


வலைப்பதிவுகளிலிருந்து சிறந்தவற்றைத் தொகுத்து பூங்கா வார இதழாகத் தொகுக்க ஆரம்பித்து இதுவரை இருபதொன்பது இதழ்கள் தொய்வில்லாமல் வெளிவந்துள்ளன. தொகுப்புகளுக்கான தெரிவுகளில் தொகுப்பாளர்களின் அரசியல் சாய்வுகள் வெளிப்படுவது இயல்பானதே. அப்படி இல்லாவிட்டால் அது செயற்கையானதாக இருக்கும். அந்த அளவில் பூங்கா இதழ்கள் பெற்றுள்ள பெரும்பான்மைப் பதிவர்களின் வரவேற்பையும் சில பதிவர்களின் வசைகளையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகக் கருதி இதுவரை சரியான பாதையிலேயே சென்றுக் கொண்டிருக்கிறோமென நம்புகிறோம். இந்த அங்கீகாரத்தை வழங்கிய அனைத்துத் தரப்பு படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் எமது நன்றி.
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)