|
இணையத்தில் இன்பத்தமிழ் 10 |
|
|
|
மலைநாடான்
|
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத்தமிழ் வானொலியில் பிரதி ஞாயிறு தோறும், ஐரோப்பிய நேரம் மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகும், " இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின் இன்றைய ஒலிபரப்பின் ஒலிப்பதிவு இது.
இன்றைய நிகழ்ச்சியில்,
தமிழ் இணையப் பரப்புத் தொடர்பான தொடர் உரையாடலில், தேடுபொறித் தன்மை மிக்கத் தமிழ்த்தளமாகிய லங்காசிறி. கொம், பற்றிய சிறு குறிப்பு.
இலங்கை விமானப்படை தலைமையகம் மீதான, விடுதலைப்புலிகளிக் வரலாற்றுச் சிறப்புமிக்க வான் தாக்குதல் பின்னான உணர்வலைகளுடனான கவிதை.
சிலப்பதிகாரக் கானல்வரிப்பாடல்.
இவ்வார வலைப்பதிவர் அறிமுகத்தில் சிறப்பு அறிமுகமாக, எட்டுவயதில் புலத்தி (நோர்வே) லிருந்து வலைப்பதிவு செய்து வரும், குட்டிப்பெண் அஞ்சலியின் அறிமுகமும் செவ்வியும் என்பன வருகின்றன.
நிகழ்ச்சியில் அவரது கவிதையை இணைத்துக்கொள்ள அனுமதியளித்த, பதிவர் ரேகுப்தி அவர்களுக்கும். குட்டிப் பதிவர் அஞ்சலியின் செவ்வியைப் பெற ஒத்துழைப்பு நல்கிய அவரது பெற்றோர்களுக்கும், ஏனைய உதவிகள் புரிந்த நண்பர்களுக்கும், மிக்க நன்றிகள்.
நிகழ்ச்சியைக் கேட்டுச் சொல்லுங்கள்.
இணையத்தில் இன்பத்தமிழ். 10.mp... |
இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.