|
M.S கோல்வால்கர் Exposed...!!! |
|
|
|
ராஜாவனஜ்
|
சமீபமாக நான் அலுவலக சுற்றுப்பயணம் சென்ற இடங்களிலெல்லாம் காவி வண்ண போஸ்டர்களாலும் பேனர்களாலும் ஊரையே நாறடித்து வைத்திருந்தனர்.எல்லாம் நம்ம RSS டவுசர் பாண்டிகள் வேலை. அமெரிக்க அக்கிரகாரங்களில் துண்டு போட்டு வசூலித்த காசு கன்னாபின்னா வென்று விளையாடியிருக்கிறது.கோல்வால்கர் என்னும் அவர்களின் இரண்டாவது தலைவருக்கு இது நூற்றாண்டு விழாவாம். அது தான் இந்த ரகளைக்குக் காரணம்! சப்-சகாரா பாலைவனப்பகுதி குழந்தைகளை விட ஊட்டச் சத்து குறைவாக உட்கொள்ளும் குழந்தைகள் ஒரு பக்கம், புதிய பொருளாதாரக் கொள்ளையால் வாழ்விழந்த விவசாயிகள், நெசவாளிகள் ஒரு பக்கம், FDIயினால் பாதிப்படைந்த சிறு, குறு வணிகர்கள் ஒரு பக்கம், SEZஆல் நிலம் இழந்து நிற்கும் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் ஒரு பக்கம்... உணவு தானிய இறக்குமதியால் பாதிப்படைந்த ஏழைமக்கள் ஒரு பக்கம் இப்படி நாட்டின் பெரும்பான்மையான மக்களைத் தாக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கிடையில் போட்டு விட்டு செத்துப் போன இந்தக் கிழவனைத் தூக்கி மனையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் இந்த மிருகங்கள்.
சரி அவ்வளவு முக்கியமாய்க் கொண்டாடப் படவேண்டிய அளவிற்கு இந்த ஆள் முக்கியமானவனா? யார் இந்த கோல்வால்கர்? ஏன் இவனை இன்னும் நினைவு வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்?
ஒரு சுருக்கமான அறிமுகம் -
1906ம் ஆண்டு பிறந்த கோல்வால்கரின் முழு பெயர் மாதவ சதாசிவ கோல்வால்கர். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சில காலம் பேராசிரியராய் பணியாற்றியவன். 1925ம் ஆண்டு RSS இயக்கத்தை ஆரம்பித்த ஹெட்கேவார் ( கேசவ பலிராம் ஹெட்கேவார் ) ஒரு முரட்டு முட்டாள்! இந்துக்களை ஒருங்கிணைத்து ஒரு ராணுவம் போன்ற இயக்கத்தைக் கட்ட வேண்டும் என்கிற சிந்தனைதான் இருந்ததே ஒழிய இவனுக்கு ஆழமான அறிவோ சிந்திக்கும் திறமையோ கிடையாது. எனவே சித்தாந்தத் தளங்களில் குயுக்தியுடன் சிந்திக்கும் நபரைத் தேடியலைந்த ஹெட்கேவாரின் கண்களுக்கு சாமியாராய்ப் போக வேண்டும் என்கிற முடிவோடு ராமகிருஷ்ண மடத்தில் விழுந்து கிடந்த கோல்வால்கர் சரியானதொரு நபராகத் தென்பட்டான்.
ஹெட்கேவாரின் கண்ணில் சிக்கிய பின் மளமளவென்று இயக்கத்தில் வளர்ந்த கோல்வால்கர் அந்தச் சமயத்தில் (1938) தான் இந்துத்துவவாதிகளின் பைபிள் என்று அப்போதே பெருமையுடன் அழைக்கப்பட்ட We or our Nationhood defined என்னும் புத்தகத்தை எழுதினான். இன்றைக்கு அவர்களே "இது கோல்வால்கர் எழுதியதில்லையே" என்று அசடு வழிய பின்மண்டையைச் சொறிந்தாலும் ( இது கோல்வால்கர் எழுதியது தான் என்று அவனே ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்துள்ளான் பின்னர் வந்த தலைவர்களும் இந்தப் புத்தகத்தை மேற்கோள் காட்டி நிறைய எழுதியுள்ளனர்)
அன்றையகால கட்டத்தில் RSS மேல்மட்டத் தலைவர்களில் இருந்து கீழ்மட்டத் தொண்டர் வரை இது மிகப் பெருமையுடன் கொண்டாடப்பட்ட ஒன்று. இந்தப் புத்தகத்தைப்பற்றி பின்னர் பார்ப்போம் இப்போது மீண்டும் கோல்வால்கர் -
சமீபத்தில்!? ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதில் ஹெட்கேவார் மண்டையைப் போட்டான். உடனடியாக மற்ற தலைவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு கோல்வால்கர் தலைவன் ஆனான் ( அதாவது மரணப் படுக்கையில் இருந்த ஹெட்கேவரால் "நியமிக்கப்பட்டான்" என்று புரிந்து கொள்க - அங்கே ஏது ஜனநாயகமெல்லாம்).. இவனுடைய காலத்தில் தான் RSS, பல்வேறு கிளை இயக்கங்களாய் வேர்விட ஆரம்பித்தது.. மாணவர்களை முட்டாள்களாக்க ABVP, தொழிலாளர் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய BMS ( உலகிலேயே தொழிலாளர் நலனுக்கல்லாமல் முதலாளி வர்க்கத்தின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரே தொழிலாளர் இயக்கம்! ), வனவாசிகளை மூளைச்சலவை செய்து பலியாடுகளாய்த் தயார் செய்ய வனவாசி கல்யாண் ஆஷ்ரம் இன்னும் இது போல் புற்றீசல் போல பல கிளை இயக்கங்கள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தது. இப்படி RSS பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தையான ஜன சங்கத்தின் தொடர்ச்சி தான் பா.ஜ.க.
நிற்க!
கோல்வால்கரின் We or our Nationhood defined புத்தகத்தில் இருந்தும் Bunch of Thoughtsல் இருந்தும் சில மேற்கோள்கள் -
"இந்நாளில் ஜெர்மானிய தேசியப் பெருமிதம் என்பது ஒரு மதிப்புக்குரிய தலைப்புச் செய்தியாகியுள்ளது. தங்களது தேசிய இனத்தின் தூய்மையைக் காக்க யூதர்களை ஜெர்மானிய அரசு ஒழித்துக் கட்டியது உலகத்தையே ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. தேசியப் பெருமிதம் என்பது அனைத்திலும் மேன்மையானது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பல்வேறு இனங்களும் அவர்களின் மாறுபட்ட கலாச்சாரங்களும் ஒரே கூறாக ஒன்றிணைய முடியாது என்பது இதன் மூலம் நாம் பெற்றுள்ள பாடங்களாகும்" - We or our Nationhood defined
"ஜெர்மானிய தேசிய எழுச்சியின் மூலமாக நமக்குக் கிடைத்த அனுபவம் சொல்வது என்னவென்றால், இந்நாட்டில் வாழும் இந்துக்களல்லாதவர்கள் கட்டாயமாக இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் ஏற்றுக் கொள்ளவதோடு இந்து மதத்தை மதிக்கவும் வேண்டும். இந்த நாடு இந்து நாடு என்பதை அல்லாது வேறொன்றையும் அவர்கள் ஆதரிக்கக் கூடாது. இந்த பூமியின் பழமையான கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதோடு இதன் மேல் ஆழமான அன்பும் பக்தியும் செலுத்த வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்வதானால்; ஒன்று அவர்கள் அந்நியர்களாக விலகிவிடவேண்டும் அல்லது இந்து தேசியத்திற்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்"
அதாவது இன ஒடுக்குமுறையை/அழிப்பை ஹிட்லரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மிக நாசூக்கான வார்த்தைகளில் சொல்கிறது இந்த மிருகம்! RSS பாம்புகள் கண்ட இடத்தில் கண்டபடி அடிபடும் போதெல்லாம் போய் ஒளிந்து கொள்ளும் புதர் - தேசியம். வெளியில் இந்திய தேசியம் என்று தேனொழுகச் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் உள்ளே நினைத்துக் கொள்வது 'இந்து தேசியத்தையே'. முதலில் தேசியம் என்பது ஒரே விதமான மொழி, கலாச்சாரம், பண்பாடு, மதம், இனம் மற்றும் மிக முக்கியமாக ஒரே விதமான பொருளாதார உறவுகள் போன்றவைகளை உள்ளடக்கிய ஒன்றாகும்; பல்வேறு மொழிகள் கலாச்சாரங்கள், பண்பாடுகள், மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வான பொருளாதார நிலையும் பொருளாதார உறவுகளும் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் இது சாத்தியமே கிடையாது; எனில் இவர்கள் வரையறுக்கும் தேசியம் என்பது ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்துவதாகும். எது அந்த 'ஒற்றைத் தன்மை'? அது அப்பட்டமாக பார்ப்பனிய தர்மம்! உதாரணமாக இவர்களின் தேசியத்தில் புனிதமான ஜந்து பசு! ( இந்த மேட்டரு அதுக்குத் தெரியுமான்னு தெரியலை) இவர்களின் 'சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி'!? என்று துவங்கும் பாடலில் கூட 'ஆவினம் எங்கள் அன்புத் தாய்' என்கிற வரி வருகிறது.அப்படி என்றால் பசு மாமிசம் தின்னும் நான் தேசிய விரோதியா? இந்த நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தேசிய விரோதியா? முஸ்லிம்கள் தேசிய விரோதியா? என்று கேட்டால் - ஆம்!. (சமீபத்திய மங்களூர் கலவரத்தையும், வடக்கே பசுவின் தோலை உரித்ததற்காக கொல்லப்பட்ட ஐந்து தலித் சகோதரர்களை நினைவில் கொள்க! - இதுவே இவர்கள் தங்கள் 'தேசிய விரோதிகளை' டீல் செய்யும் விதம்)
மேலும் மேற்படி புத்தகத்தில் இனத்தூய்மையை நிலைநாட்டுவதைப் பற்றியும், கம்யூனிஸ்டுகளை ஒழித்துக்கட்டுவது பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதி இருக்கிறான். 77 பக்கங்கள் கொண்ட இது 1944ம் ஆண்டு வரை மறுபதிப்புச் செய்யப்பட்டு வந்தது. பின்னர் ஜெர்மனியில் ஹிட்லரின் வீழ்ச்சியோ இல்லை அரசின் தடை காரணமாகவோ இதனை அச்சிடாமல் நிறுத்தி விட்டனர். ஆனாலும் பின்னர் வந்த தலைவர்கள் இதில் உள்ள விஷயங்களை மேற்கோள் காட்டி பல்வேறு இடங்களில் எழுதியுள்ளனர். இப்புத்தகத்தைப் பற்றிய ஆய்வுகளும் இணையத்தில் கிடைக்கிறது. கோல்வால்கர் காந்திகொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சமயத்தில் கோழைகளின் வழக்கத்தைப் பின்பற்றி அரசுக்கு பல்வேறு மாப்புக் கடிதங்கள் போட்டுக்கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றில் "விடுதலையடைந்து வெளியே வந்தபின் தான் கம்யூனிஸ அபாயத்தை எதிர்க்கப் போவதாகக்" குறிப்பிட்டிருந்தான். இவனின் இந்த ஆசையும் ஏகாதிபத்தியங்களின் ஆசையும் ஒன்று போல் இருப்பது தற்செயலானது அல்ல! இவர்கள் இணையும் கண்ணி இது தான்!
இவனுக்கு கம்யூனிஸம் ஏன் அபாயமாகத் தெரிய வேண்டும்? ஏன் இன்று வரை தோழர் ஸ்டாலின் மேல் வெறுப்பை உமிழ்கிறார்கள்? . ஹிஹி - நம்ம ஈரோட்டுக் கிழவன் இவர்களின் தேசிய நாயகனை செருப்பால் அடித்ததற்கே இவர்களுக்கு இன்னிக்கு வரை 'எங்கோ' எரிகிறதே.... இவர்களின் சர்வதேசிய நாயகனான ஹிட்லரை அவன் கோட்டைக்குள்ளேயே சென்று அவன் மென்னியை முறித்த பாட்டாளி வர்க்கத்தின் படைத்தலைவன் தோழர் ஸ்டாலின் மேல் வெறுப்பைக் கொட்டுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. உலகமே பாஸிஸத்தின் வெற்றியைக் கண்டு திகைத்து நின்ற வேளையில் பாட்டாளி வர்க்கத்தின் செம்படை தங்கள் வர்க்க இயல்பான வீரத்தை காட்டி மனிதகுலத்தின் எதிரிகளை முறியடித்தார்களே.. அது தான் இவர்களுக்கு கம்யூனிஸம் என்றாலே 'எங்கோ' மிளகாய் சொருகியது போல் இருக்கிறது.
அந்த நாட்களில் இந்தியாவின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்து இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து ரத்தம் சிந்தி வந்த வேளையில்.. இந்த 'தேசபக்தர்கள்' அதைப் பற்றி என்னகருத்து கொண்டிருந்தார்கள் தெரியுமா இதோ Bunch of Thoughts என்னும் புத்தகத்தில் இருந்து ஒரு மேற்கோள் -
"பொது எதிரியான பிரிட்டிஸ்காரர்களை எதிர்த்தும் எல்லைகளை மையமாகக் கொண்டும் இப்போது உருவாகி வரும் எழுச்சியானது இந்த நாட்டின் உண்மையான அடையாளமான இந்து தேசியத்திற்கு எதிராக உள்ளது. இந்த வகைப்பட்ட போராட்டங்கள் பொதுவாக பிரிட்டிஸ் எதிர்ப்பு மனப்பான்மையையே உண்டாக்கி விட்டுள்ளது. இந்த பிரிட்டிஸ் எதிர்ப்பு மனப்பான்மையே தேசபக்தியாகவும் தேசிய உணர்வாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது இந்நாட்டின் மெய்யான விடுதலைக்குத் தடையாக இருக்கிறது"
"நாம் எடுத்துக் கொண்டுள்ள உறுதிமொழியில் தேச விடுதலை என்பது நமது மதத்தையும் தர்மத்தையும் தற்காத்துக் கொள்வதன் மூலமே அடைய முடியும் என்று சொல்கிறோம். இதனால் பிரிட்டிஷாரை வெளியேற்றும் கோரிக்கையே எழவில்லை"
மேற்படி புத்தகத்தை "Bunch of Pig-shit" என்பது தானே பொருத்தமாக இருக்கும்? அதாவது இவர்களின் 'இந்து தேசியத்திற்கு' எதிராக இருப்பதால் வெள்ளையர்களுக்கு எதிரான உணர்வே நாட்டில் தேவையற்ற ஒன்று என்கிறான். அன்று தொடங்கி இன்று வரை மிகச் சிறப்பான முறையில் ஏகாதிபத்தியங்களை நக்கும் வேலையைத் திறம்படச் செய்து வருகிறது இந்த துரோகிகள் கூட்டம்! இதே காரணத்தினால் தான் நாடே பொது எதிரியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த வேளையில் நமது 'தேசபக்தர்கள்' தங்கள் 'தேசிய'த்திற்கு எதிரானது என்கிற காரணத்தால் எந்தப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் தங்களது சகல ஓட்டைகளையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருந்திருக்கிறார்கள். இன்றும் ஏகாதிபத்தியங்கள் மறுகாலனிய நடவடிக்கைகளின் இறங்கி நாட்டை அடிமைப்படுத்த சூழ்ச்சிகளில் இறங்கி இருக்கும் வேளையில் ஒன்னாம் நம்பர் துரோகி கோல்வால்கனுக்கு நூற்றாண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்
இவர்கள் தற்காத்துக் கொள்ள நினைக்கும் தர்மம்? - வேறென்ன பார்ப்பனிய தர்மம் தான். இதோ இப்போது பார்ப்பனியத்தை எதிர்த்து நாலு வார்த்தை பேசியதற்காக இந்திய தேசியத்தையே எதிர்த்துவிட்டதாக குதிக்கிறானே இதுவே மிகச் சமீபத்திய ஆதாரம்!
பதிவின் நீளம் காரணமாக மேலும் பல்வேறு தகவல்களை இணைக்க முடியவில்லை.. ஆனாலும் இதற்கு வரும் எதிர்வினைகளைப் பொருத்து மற்ற தகவல்களையும் உள்ளடக்கு இன்னும் சில பதிவுகள் எழுத முடியும்.
ராஜாவனஜ்
Source : 1) www.countercurrents.org
2) Bunch of Thoughts - M.S Golwalkar
3) http://www.imc-usa.org/digest/special/2006/golwalkar.fascism.htm
Labels: RSS பயங்கரவாதம்
|