இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
வருடாந்திர Appraisal - மேலாளர்களுக்குக் குறிப்புகள் Print E-mail
என்றென்றும் அன்புடன் பாலா   

நேற்று அப்ரைசல் பற்றிய ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். பொதுவாக, இது போன்றவை, கொஞ்ச நேரத்திலேயே எனக்கு போரடிக்கத் தொடங்கி விடும். பயிற்சியாளர் திறமை மிக்கவராக / நல்ல பேச்சாளராக இருந்த காரணத்தால், மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. வகுப்பு நல்ல interactive ஆக இருந்தது. தான் முன் வைத்த பாயிண்ட்டுகளை விளக்க அவர் கூறிய குட்டிக் கதைகளும், மேற்கோள் காட்டிய உதாரணங்களும் சுவையாக இருந்தன. அதிலிருந்து சில குறிப்புகளை இப்பதிவில் தருகிறேன்.

1. நமக்குக் கீழே பணி புரியும் ஒரு மென்பொருளாளரை மதிப்பிடுவது அல்ல அப்ரைசல், அவரது கடந்த வருட பணி குறித்த மதிப்பீடே அப்ரைசல் என்பதற்கு பல மேலாளர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. அவரது அந்த ஆண்டு performance-ஐ, அந்த நபர், அவருக்கு அளிக்கப்பட்ட பணியை, நேர்மையாக, அவரது திறமைக்கு ஏற்ற வகையில் செய்தாரா (to the best of his/her abilities) என்ற அளவில் மதிப்பிடுவது அவசியமாகிறது. மேலாலர், தன்னை, தான் மதிப்பீடு செய்யும் நபரின் இடத்தில் பொருத்திப் பார்த்து முடிவெடுப்பதும் அவசியமாகிறது. இதற்கு ஒரு மேற்கோள்:

தங்க நகைகள் செய்யும் ஆச்சாரி, தங்கத்தைச் சுத்தப்படுத்த, அதை நெருப்பிலிட்டு உருக்கி, அதிலிருந்து மாசுகளை நீக்குவதை நாம் பார்த்திருப்போம். தங்கத்தை நெருப்பிலிடும்போது, எந்த நிலையில், அத்தங்கம் மாசற்ற தன்மையை (purified state) அடைகிறது என்பதைக் கண்டுபிடிக்க அந்தக் காலத்து ஆச்சாரி ஒரு டெக்னிக் வைத்திருந்தார். அதாவது, உருக்கப்பட்ட தங்கத் துளியில், ஆச்சாரியின் முகம் துல்லியமாகத் தெரியும்போது, அத்தங்கமானது (நகைகள் செய்வதற்கு ஏற்ற வகையில்) மாசற்ற நிலையை அடைகிறது என்பது ஆச்சாரி அனுபவத்தில் கண்ட உண்மை. இது நம்ம அப்ரைசலுக்கும் பொருந்தும்.

2. அப்ரைசலின்போது, மதிப்பீடு செய்யப்படும் நபரின் பழைய அனுபவத் திறமையை வைத்து அல்லது புறத்தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடுதல் புத்திசாலித்தனமான விஷயம் அல்ல என்பதற்கு ஒரு அழகான மேற்கோள் காட்டி, அந்த பயிற்சியாளர் விளக்கினார்.

ஒருவர் சந்தைக்கு மாடு வாங்கச் சென்றார். அங்கு விற்பனைக்காக, இருந்ததிலேயே வலிமையான, ஒரு எருதைக் கண்டவுடன், அதை விற்க முற்பட்டவரிடம் சென்று (எருதின் பற்களையெல்லாம் சோதித்து விட்டு) விலை கேட்டார். குறைந்த விலை என்று பட்டவுடன், உடனே அதை வாங்கி, ஓட்டிச் சென்றார்.

பார்க்க திடகாத்திரமாக இருந்த அந்த எருதானது, ஒரு 30 அடி நடந்தவுடன் நின்று விட்டது. சற்று ரெஸ்ட் எடுத்து விட்டு, மீண்டும் 30 அடி நடை, ஓய்வு, மீண்டும் 30 அடி நடை, ஓய்வு, என்று அதை விலை கொடுத்து வாங்கியவரை பேஜார் பண்ண ஆரம்பித்தது. கடுப்பான அம்மனிதர், மீண்டும் சந்தைக்குச் சென்று, அதை விற்றவரிடம், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்ட, விற்றவரோ, "ஐயா, அந்த எருது, மாநகராட்சி குப்பை வண்டியை இழுக்க பயன்படுத்தப்பட்டது, அதனால் தான் அந்த நினைப்பிலேயே இப்படிச் செய்கிறது. போகப் போகச் சரியாகி விடும்!" என்று கூறினாராம் :)

3. பணி புரியும் இடம் (office) என்பது மனதுக்கு சந்தோஷத்தையும், உத்வேகத்தையும் தரும் வகையில் அமைதல் அவசியம், ஆனால், பெரும்பான்மை அவ்வாறு அமைவதில்லை என்பதை ஒரு statistics கொண்டு வேடிக்கையாக விவரித்தார்.

ஆசியாவிலேயே சிறந்ததாகக் கருதப்படும் நாராயண ஹிருதயாலயா என்ற மருத்துவமனை ஓர் ஆய்வு நடத்தியதில், அந்த மருத்துவமனைக்கு எடுத்து வரப்படும் இதய நோய் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மையினர், திங்கள் கிழமை தான் ஹார்ட் அட்டாக்குக்கு உள்ளாகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது! அதாவது, வார விடுமுறைக்குப் பின், பலரும் பணிக்குத் திரும்பும் நாள் திங்கள் தானே :) அன்று, வொர்க் பிரஷர் பொதுவாக சற்று அதிகமாக இருத்தல் இயல்பானது தானே!

Children generally walk to school, but run back home என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது, குழந்தைகளுக்கு வீட்டின் மேல், பெற்றோர் மேல் உள்ள வாஞ்சையும், நாட்டமும் பள்ளியின் பால் இருப்பதில்லை என்பதை உணர்த்துகிறது!

4. Empowerment என்பது மிகத் தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தை என்று அந்த பயிற்சியாளர் கூறினார். அதாவது, பொதுவாக எண்ணப்படுவது போல, ஒருவருக்கு பொறுப்புகளும், அதிகாரமும் (responsibility and authority) வழங்கி அவரை empower செய்ய முடியாது! அந்த நபரது அறிவு, ஆற்றல், அனுபவம் சார்ந்த சுயபலத்தை அவர் உணரும்படி செய்வதும், அவரது சுய ஊக்கத்தை வெளிவரச் செய்வதுமே Empowerment எனப்படும் என்று நச்சென்று கூறினார்.

5. Hewlett Packard (HP) நிறுவனத்தின் motto வாசகங்களில் ஒன்று, சற்று விசித்திரமாக இருந்தாலும், empowerment-ஐப் பற்றிப் பேசும்போது, அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
Every Employee has the RIGHT to committ a mistake!
அதாவது, ஒரு பணியாளர் தனது comfort வட்டத்திலிருந்து, courage வட்டத்திற்குச் செல்ல, இந்த 'தவறு செய்வதற்கான அனுமதி' அவசியமாகிறது :) அவரது பணிசார் (career) வளர்ச்சிக்கும் அது பெரிதளவில் உதவுகிறது!

ஒரு பணியாளரை அப்ரைசல் செய்யும்போது, பொதுவாக, அவரது வெற்றிகள், comfort வட்டத்திலும், அவரது தோல்விகள் (என்று மேலாளர் கருதுவது) courage வட்டத்திலும் பெரும்பாலும் அமைகின்றன. ஒரு மேலாளர், அப்ரைசலின் போது இதை மனதில் கொண்டு செயல்படுவது அவசியம்!

 

6. Setting Goals (to the appraisee) என்பது, (அந்த இலக்குகளை முன்னிறுத்தும் மேலாளர்) எத்தகைய தொலை நோக்கோடு இருத்தல் அவசியம் என்பதற்கு ஒரு சூப்பர் உதாரணத்தை அந்த பயிற்சியாளர் தந்தார்.

அமெரிக்காவில் ஒரு பழமையான பல்கலைக்கழகக் கட்டடம் (எந்த மாகாணம் என்று ஞாபகமில்லை!) கட்டப்பட்ட சமயத்தில், கட்டடப் பொறியாளர் தூண்(column), குறுக்குச் சட்டம்(beam) போன்றவற்றை வலிமையான மரத்தால் (ஒரு வகை டிம்பர்) அமைத்திருந்தார். ஒரு இருநூறு ஆண்டுகள் ஆன பின், கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை சோதிக்க நிபுணர் குழு ஒன்று கூட்டப்பட்டது. பழமையான ப்ளூ பிரிண்ட் அறையில் இருந்த கட்டடத்தின் வரைபடங்களை ஆராய்ந்த நிபுணர்கள், ஒரு பெரிய வரைபடத்தின் ஓரத்தில், சின்ன மேப் ஒன்று இணைக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தின் அருகில் இருந்த வனத்திலுள்ள ஓர் இடம் அந்த மேப்பில் குறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, 'என்ன இது' என்று வியப்படைந்தனர்.

பல்கலைக்கழகத்தின் மெயின் ஹாலில் அமைக்கப்பட்டிருந்த, பெரிய அளவிலான, மரத்தாலான, ஒரு குறுக்குச் சட்டம் சற்றே தளர்ச்சியடைந்து விட்டதால், அதைக் கட்டாயம் மாற்றியாக வேண்டும் என்பது நிபுணர் குழுவின் முக்கியப் பரிந்துரை. மேலும், சிலபல மாற்றங்களையும் பரிந்துரைத்தது. மேப்பில் குறிப்பிடப்பட்டிருந்த வனப்பகுதிக்கு சென்ற நிபுணர் குழுவினர், அங்கு சீரான வரிசையில், பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த மரங்களைக் கண்டனர். பல்கலைக்கழகத்தில் மரவேலைக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட அதே வகை (வலிமை வாய்ந்த) மரங்கள் அவை என்று அறிந்து நிபுணர்கள் ஆச்சரியமடைந்தனர்.

அதாவது, 200 ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகம் கட்டப்பட்ட சமயத்திலேயே, தொலைநோக்குப் பார்வையோடு, அந்த கட்டடப் பொறியாளர், அப்போது மரவேலைக்குப் பயன்படுத்தப்பட்ட மரத்தின் விதைகளை அருகிலுள்ள வனத்தில் வரிசையாக விதைத்திருந்தார். அவை நிபுணர் குழு முன்னால், விருட்சங்களாகக் காட்சியளித்தன.

பல ஆண்டுகளுக்குப் பின், கட்டடத்தின் ஸ்திரத்தன்மைக்கு அத்தியாவசியமான columns, beams ஆகியவற்றை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் என்பதை அவர் உணர்ந்து செயல்பட்டதால், பல்கலைக்கழகக் கட்டடத்தை, அதன் புராதனத்தன்மை குன்றா வண்ணம், அதே வகை மரம் கொண்டு அழகாகச் சீரமைக்க முடிந்தது.

7. ஒரு மேலாளர், தனக்கு மேலேயும் ஒரு மேலாளர் உள்ளார் (அதாவது தனக்கு மேலே hierarchy, authority உள்ளன!)என்பதை தான் மதிப்பீடு செய்யும் நபருக்கு subtle-ஆக உணர்த்துவதில் தான் மேலாளரின் திறமை அடங்கியிருக்கிறது.

8. அடுத்து, Objectiveness என்றால் என்ன என்பது குறித்த தெளிவுக்கு, நடந்த சம்பவம் ஒன்றைப் பயிற்சியாளர் நினைவு கூர்ந்தார். அவர் வேலை செய்த நிறுவனம் ஒன்றில், மார்க்கெட்டிங் அணியில் அவருடன் பணி புரிந்த ஒருவரை, முதலில் கம்பெனி மேலாளர் அப்ரைசல் செய்து, சிலாக்கியமாக எதுவும் கூறாமல், கடுமையான உழைப்பாளியான, நேர்மையான, அந்த நபரை மூட்அவுட் செய்து அனுப்பி விட்டார். ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த நம் பயிற்சியாளர், "நான் வேண்டுமானால் அவரிடம் பேசிப் பார்க்கட்டுமா?" என்று மேலாளரிடம் கேட்டு விட்டு, அந்த நபருடன் மனம் விட்டுப் பேசியதில், அந்த நபர் கிராமத்துச் சூழலிலிருந்து வந்ததும், தன்னம்பிக்கை மற்றும் நுனி நாக்கு ஆங்கிலப்புலமை சற்றே குறைந்தவராக இருந்தும், தனது கடின உழைப்பால், அந்த நபருக்கு வழங்கப்பட்ட வருடாந்திர டார்கெட்டில் (TARGET) 80% இலக்கை அடைந்து விட்டதும், பயிற்சியாளருக்குப் புரிந்தது. பயிற்சியாளரோ, கொடுத்த டார்கெட்டுக்கு மேலே achieve செய்தவர். இருந்தாலும், அந்த நபரின் அருமை பயிற்சியாளருக்கு விளங்கியது!!!

இதற்கு பயிற்சியாளர் ஒரு மேற்கோள் காட்டினார். அதாவது, ஒரு பரம ஏழை தன்னிடம் இருந்த ஒரே நூறு ரூபாய் நோட்டை, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் உதவி நிதிக்காக வழங்குவதையும், ஒரு பெரும் பணக்காரர் அதே நிதிக்கு 10 லட்ச ரூபாய் தருவதையும் சுட்டிக் காட்டி, "யார் கொடை பெரியது ? இவர்கள் இருவரில் யார் சிறந்தவர் என்று கூறுவீர்கள்?" என்று வினாவெழுப்பிய பயிற்சியாளர், objectiveness என்பதை நாங்களாகவே உணருமாறு செய்தார்!

9. அப்ரைசலின் திருவாசகம் ஒன்றை பயிற்சியாளர் கூறினார்:An appraiser has a responsibility in the performance of the appraisee! இதற்கு மேலாளர் செய்ய வேண்டியதெல்லாம், தனக்குக் கீழே பணி புரியும் நபருக்கு "நீட்டப்பட்ட இலக்கு"களை (Stretch Goals) அளிப்பது தான் சிறந்த வழி. அதன் மூலம், அப்ரைசரான மேலாளர், தனது பொறுப்பான ஆதரவை (responsible support) அந்த நபருக்கு அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார், இல்லையா ? அந்த நபரின் performance-இல் மேலாளருக்கு ஒரு பொறுப்பு உண்டாகிறது! சம்பந்தப்பட்ட நபரும் தனது comfort வட்டத்திலிருந்து வெளிவந்து, courage வட்டத்தில் செயல்படத் தொடங்குவதால், இம்முறை எல்லார்க்கும் பயன் தருவதாக அமைந்து விடுகிறது!

10. மேற்கூறியதை விளக்க, ஒரு கழுகுக் குஞ்சானது பிறந்து, வளர்ந்து, பறக்கத் தொடங்கும் வரை, அதன் பெற்றோர் கடைபிடிக்கும் வழிமுறையை (process of bringing-up) பயிற்சியாளர் மேற்கோள் காட்டினார்.

அதாவது, அந்த கழுகுக் குஞ்சின் பெற்றோர், ஆரம்பத்தில் சின்னக் கழுகிற்கு மலை உச்சியில் சொகுசான கூடு கட்டி, இரை எடுத்து வந்து தந்து, அதை ஆபத்திலிருந்து காத்து, அதன் பயத்தை போக்கி ஆதரவாக இருந்து, அக்குஞ்சை comfort வட்டத்தில் வைத்திருக்கும்.

சிறிது காலத்திற்குப் பின், கூட்டைக் சிறிது சிறிதாகக் கலைத்து, குளிரிலும், வெயிலிலும் (சின்னக்கழுகை) கஷ்டப்பட வைத்து, அதை உணவுக்கு அலைபாய வைத்து, அதை பறக்க வைக்க மலை உச்சியிலிருந்து அடிக்கடி தள்ளி இம்சை பண்ணி, அது படபடவென இறக்கைகளை அடித்து அல்லாடி தரையில் மோத இருக்கும் சமயத்தில் அதைக் காப்பாற்றி, பெற்றோர் துணை இல்லா உலகில் தனித்து வாழ சின்னக் கழுகைத் தயார்படுத்த வேண்டி, அதை courage வட்டத்திற்கு அதன் பெற்றோர் தள்ளி விடுகின்றன.

இம்மாதிரி அந்த கழுகின் பெற்றோர் போல் ஒரு மேலாளர் நடத்தல் அவசியமாகிறது.


11. தனக்குக் கீழே பணி புரியும் அனைவரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் என்ற மிகச் சாதாரண விஷயத்தை ஒரு மேலாளர் தன் மனதில் திடமாகக் கொள்வதும் அவசியமாகிறது. இதைக் கூட சில மேலாளர்கள் புரிந்து கொள்வதில்லை!!! ஒருவரை, அணியில் இருக்கும் இன்னொருவருடன் கம்பேர் (compare) செய்யவே கூடாது.

சீனாவில் உள்ள ஒரு வகை மூங்கில், முதல் 5-6 வருடங்கள் அதிக வளர்ச்சியின்றி இருந்து, அடுத்த 5-6 வாரங்களில் அசுர வளர்ச்சி (90 அடி உயரம்!) அடைகிறது. அது போலவே, பணியாளர்களில் சிலர், பணியைக் கற்றுக் கொள்ள சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் (Learn it slow but good!), பின்னாளில் பணி புரியும் நிறுவனத்துக்கு மிக்க பயனுள்ளவர்களாகத் திகழக் கூடிய சாத்தியம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஒரு மேலாளருக்கு தொலை நோக்கு அறிவு வேண்டும்!

12. ஒரு நிறுவனத்தின் எதிர்பார்ப்புகள் (organizational expectations) போலவே, தனி நபரின் இலக்குகளும் (individual aspirations) முக்கியமானவை என்று ஒரு அப்ரைசர் (மேலாளர்) உணர்வதும், அதற்கேற்ற வண்ணம் செயல்படுவதும், அவரின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.

13. பணி புரியும் இடம் என்பது, ஒரு கல்லூரி வளாகத்திற்கு ஈடாகவும், பிசினஸ் என்பது பாடத்திட்டத்திற்கு (curriculum) ஒப்பாகவும், மேலாளர்கள்/பிராஜெக்ட் லீட் என்பவர்கள் ஆசிரியர்களுக்கு நிகராகவும் அமையும் நிறுவனம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனம். மேற்கூறிய மூன்றும், கஸ்டமர்களும் நிறுவனம் என்ற கட்டடத்தின் 4 தூண்களாக விளங்குகிறார்கள். இக்கட்டடத்தின் அடித்தளம் (foundation)பணியாளர்களால் (employees) அமைக்கப்படுகிறது! அதன் மேற்கூரை, தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகிறது, அதாவது, Technology is the Enabler! இம்மாதிரியான ஒரு நற்சூழல் வாய்க்கப்பெற்ற ஒரு நிறுவனத்தில், மேலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையேயான நல்லுறவும் பலம் பெறுகிறது.

14. அடுத்து அப்ரைசலின் இரண்டு முக்கியக் கோட்பாடுகள்!
(i) During the appraisal, you COMMUNICATE, not SPEAK!
(ii) NEVER postpone the appraisal discussion and NEVER allow
interruptions during the appraisal session!

http://balaji_ammu.blogspot.com/2007/04/323-appraisal-1.html

http://balaji_ammu.blogspot.com/2007/04/324-appraisal-2.html

 
Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)