இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
Zen garden Print E-mail
துளசி கோபால்   





ட்ஸென், ஜென், சென் இப்படிப் பலதும் சொல்லி எழுதிப்பார்த்தாலும் Zenக்குச்சரியான உச்சரிப்பு வரமாட்டேங்குதே(-: சரி போட்டும், இதா நமக்கு முக்கியம்.தோட்டத்துக்குள்ளெ போலாம். ட்ஜென்( அய்யோ பழையபடி தகராறு?) மணல்தோட்டம்.



ஜப்பானியர்கள் சமூகத்துலே ஆரம்பிச்சதாம் முதல்முதலில். அங்கேதானே 'புத்தமதம்'ரொம்பப் பலமா வேர் ஊனியிருக்கு. தியானம் செய்யத் தகுந்த இடம் இந்த(ஹை, பேர் எழுதாமத் தப்பிச்சுட்டேனே)த் தோட்டமாம். மனசுலே இருக்கும் தேவையில்லாத எண்ணங்களைக் களைந்து அமைதிப்படுத்தி, ரொம்பசாந்தமா, சமாதானமா ஆக்கி குறைஞ்சது ஒரு கணமாவது எண்ண ஓட்டமில்லாம ஆடாம அசையாம வச்சுக்கும் சக்தி இருக்காம் இதுக்கு.


இந்தவகைத் தோட்டங்களுக்கு முக்கியமானதுன்னு பார்த்தா கடல், மலைகள், காடு கட்டாயம் வேணும்.வீட்டுக்குள்ளெ உக்காந்த இடத்துலே கடல், மலை, காடுக்கு எங்கே போவேன்?



கவலை வேணாம். அது உன்னைத்தேடி இங்கேயே வருது.



அழகான ஒரு அட்டைப் பெட்டி. வெளியே போட்டுருக்கு, அதுக்குள்ளெ 'எட்டு சாமான்கள் இருக்கு'ன்னு.
திறந்தா, ஒரு மரத்தாலான ட்ரே. 28.5 x 19.5 செ.மீ அளவு.
வெள்ளை மணல்- ஒரு பொதி ( அசப்புலே நம்மூர் கோலப்பொடி)
கூழாங்கல் - 3
மூங்கில் வேலி, மேலே வேயப்பட்ட கூரையுடன்
வாளி
மூங்கில் Rake
நீண்ட கைப்பிடியுள்ள மரக்கரண்டி
kakei fountain (ஜப்பானிய நீரூற்று?) மரக்கட்டையில் செஞ்சு நம்மூர் அடிப்பம்பு குழாய் மாதிரி இருக்கு)




இதையெல்லாம் மரத்தட்டுலே எடுத்து வச்சுத் தோட்டம் போட்டுறவேண்டியதுதான்.சரி. அந்தக் கடல், மலை, காடு எங்கே?
கடல்- மணல்
மலை- கூழாங்கல்
காடு- மூங்கில் Rake




இது ஒருவித தியானம் செய்யற பலனைக்கொடுக்கும். எந்த வேலை செஞ்சாலும், அவதிஅவதியாச் செய்யாம நிதானமா, செய்யறவேலையை அனுபவிச்சுச் செய்யணுமாம். ஒரு ஞானி சொல்லி இருக்கார். ( பதிவு எழுதறதைச் சொல்றாரோ?)
கணினி பக்கத்துலே வச்சுக்கிட்டு அப்பப்ப, 'தோட்டத்தில் டிசைன் போட்டு'த் தியானம் செஞ்சுக்கிட்டே இருக்கேன்.

whatever the task do it slowly with ease, in mindfulness
Don't so any tasks in order to get them overwith
Resolve to do each job in a relaxed way with all your attention
"Thich Nhat Hanh"


இந்த தோட்டத்தை 'எதையெடுத்தாலும் ரெண்டு டாலர்' கடையிலே வாங்குனேன். ரெண்டே டாலருக்கு எப்படி? இது செஞ்சு விக்கலாமுன்னு எப்படித் தோணுச்சு? உக்காந்து யோசிக்கறதுன்றது இதானா?


மகள் பார்த்துட்டு சொன்னா " ஜிகே கிட்டே காமிக்காதே. மணலும் ட்ரேயும் தனக்குன்னு நினைச்சுக்கப்போறான்"

 

http://thulasidhalam.blogspot.com/2007/04/zen-garden.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)