இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
Pursuit of Happyness Print E-mail
மூக்கு சுந்தர்   


Tear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42" ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு உடைத்திருப்பேன். சூர்யா டென்ஷனாகிப்போய், "This is just a Mov...vie. Why you are crying Dad..? என்றான்.

மூன்றாம் உலக நாடுகளில்/ ஏழை நாடுகளில் ஏழையாக இருப்பது பெரிதல்ல. அமெரிக்க போன்ற நாடுகளில் ஏழையாக இருப்பது, தங்க வீடில்லாமல், காரில்லாமல், பூப்போல ஒரு பிள்ளையை சுமந்து கொண்டு சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் இரவுகளில் அலைவது மிகக் கடினம்.

க்ரிஸ் கார்ட்னர் Bone density scanner என்று சொல்லப்படுகின்ற ஒரு வினோத வஸ்துவை தூக்கிக் கொண்டு அலையும் விற்பனை பிரதிநிதி. அந்த மெஷின் எங்கும் விற்பதில்லை. தங்கி இருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கி. அரசுக்கு வரி பாக்கி. அவன் இயலாமையை சொல்லிச் சொல்லி இம்சிக்கும் மனைவி கடைசியில் பிள்ளையை அவனிடம் விட்டு விட்டு நியூயார்க் போய் விடுகிறாள். போனபின் நிலைமை இன்னமும் மோசம். வீட்டை விட்டு மோட்டலுக்கு வருகிறான். காரை விற்கிறான். மோட்டலுக்கும் காசு தர முடியாமல் ரோட்டுக்கு வருகிறான். ஐந்து வயசு பிள்ளையுடன் இரவு தங்க இடமில்லாமல் BART ஸ்டேஷன் கழிப்பறையை உள்ளிருந்து பூட்டிக்கொண்டு தங்குகிறான்.

அவனுக்கும் ஒரு நாள் விடிகிறது. விடியல் சேதி கேட்டவுடன் கண்கள் குளமாகின்றன. ஓடிவந்து தன் ரத்தத்தை கட்டிக்கொண்டு விசும்புகிறான்.மனசு கனத்துப் போகிறது. அதற்குப் பிறகு அவன் எத்தனை மில்லியன் சம்பாதித்தான் என்பது முக்கியமல்ல. கஷ்டம் வந்த நேரத்தில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதுதான் படத்தில் எனக்குப் பாடம். மிகச் சுலபமாக ஒரு சமூக விரோதியாயிருக்கக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் வந்தபோதும், தாங்கிக் கொண்டு கடமையே கண்ணாக இருந்த க்ரிஸ் நிஜ நாயகராம். இது அவருடைய உண்மைக் கதையாம். நமக்கெல்லாம் வில் ஸ்மித் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார்

தவறவிடக்கூடாத அறிமுகம்...
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)