இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
ஒரு மாணவன் - ஒரு பள்ளி: சிறப்புச் செவ்வி Print E-mail
ஆசிரியர் குழு   

அமெரிக்காவில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழர் வசந்தன். இவரது தந்தையின் ஊரான மகனூர்ப்பட்டிக்குக் கோடை விடுமுறைகளின்போது செல்வது வழக்கம். தன் 12ஆம் வயதில் சென்றவொரு கோடை விடுமுறையின்போது அப்பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். தனது கோடைக்கால அனுபவங்களைக் குறித்து அமெரிக்கப் பள்ளியில் கட்டுரை எழுதியபோது ஆசிரியர்களும், மாணவர்களும் அவரது கற்றுக்கொடுக்க முனைந்த தன்மையைப் பாராட்டினர். அவர் காட்டிய படங்களில், நமது கிராமப்புறப் பள்ளிகளின் ஏழ்மை நிலை தெரியவே செய்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க மாணவர்களும், வசந்தனின் ஆசிரியரும் உங்கள் பள்ளிக்கு உதவ இந்தப் பள்ளியிலிருந்து ஏதேனும் செய்வோம் என்று ஆரம்பித்தனர். மாணவர்களின் சில்லறைகளிலும், ஆசிரியர்களின் அன்பளிப்புகளிலும் ஆரம்பித்த இந்த நன்கொடைகள், பிற்பாடு வட்டாரத்திலுள்ள பல பள்ளிகளுக்கும் வசந்தன் சென்று உரையாற்றி, நன்கொடைகள் பெறுவதாக விரிவடைந்தது. பல சமூகக் கூட்டங்களும், அமைப்புக்களும் வசந்தனின் பணிக்கு நன்கொடையளித்தன. அவற்றைக் கொண்டு கடந்த நான்கு வருடங்களாகச் சிறு சிறு பணிகளை மகனூர்ப்பட்டி பள்ளிக்கு வசந்தன் செய்து வருகிறார். இதற்கு அவரது பெற்றோரிடமிருந்தும், பள்ளியாசிரியர் பில் ஸ்மைத், மற்றும் மகனூர்ப்பட்டி பள்ளி நிர்வாகிகள், ஊர்க்காரர்கள் என்று பலரது ஆதரவு கிடைத்து வருகிறது. பள்ளியின் படங்களை இங்கே காண்கின்றீர்கள். இப்பணியைப் பாராட்டி இவருக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த விருது Jefferson விருது, அமெரிக்காவின் சிறந்த சமூகப்பணிக்காக வழங்கப்படும் விருது. பூங்காவின் சார்பில் இவருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்! பூங்காவுக்காக இவரைச் செவ்வி கண்டிருக்கிறார் கண்ணகி. 

 

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)