இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
மேடையேறும் நிதாரி Print E-mail
மங்கை   

 

நிதாரி கொலைகள் நடந்த வீட்டைக் கடப்பதற்கு கூட பயந்து தயங்கிய நிதாரி குழந்தைகள், இவர்களுடன் சிரித்து, சண்டைபோட்டு விளையாடிய தோழியர், ஒரு காமுகனுக்கு பலியான கொடுமையை மேடையேற்றத் தயாராக உள்ளனர். 'பான்டேஸ்' என்ற ஒரு வீதி நாடகக் குழுவினர் இவர்களை அணுகி, '' இங்கு நடந்த கொடுமையை மக்களுக்கு எடுத்துக் கூற உங்களை விடப் பொருத்தமானவர்கள் இருக்க முடியாது'' என்று ஊக்கமும் தைரியமும் கொடுத்து, இங்கு நடந்தவற்றை ஒரு நாடகமாக மேடை ஏற்ற குழந்தைகளைத் தயாராக்கி வருகிறார்கள்.

நிதாரியில் இருக்கும் 50 குழந்தைகள், இதில் சிலர் சாவின் வாயில் வரை சென்று தப்பித்தவர்கள். இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டில் புதறுக்குள் மறைந்து உட்காரச் சென்ற சிலர், பின் வெளியெ வராமலே போன ஜீரணிக்க முடியாத உண்மையை நடித்து காட்ட இருக்கின்றனர். தங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போதே காணாமல் போன இவர்களின் நட்பு வட்டத்தின் சாவின் பின்னாலும் சாகாத வடுக்கள் இவர்களிடம் மட்டுமே அல்லவா?.

இதில் ஒரு பெண் அவளின் அண்ணன் வீட்டிற்குச் சென்று விட்டு இந்த வீட்டின் வழியே வந்து கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு கை இவளை உள்ளே இழுத்துப் போடப் பார்க்க, கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி கொண்டு இழுத்தவனை அடித்ததினால், பிடி தளரவே ஓடி வந்து விட்டாள். இதற்குப் பின் பல குழந்தைகள் காணாமல் போன போது,  இந்தச் சம்பவத்தை காவல் துறையிடம் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நம் சமுதாயத்தில் புறையேறிப்போன அரசு அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கையும் மேடையேற்ற உள்ளனர்.

இவர்களே இதில் நடித்து, சில காட்சிகளை எழுதி, இயக்கவும் செய்கிறார்கள். பாந்தருக்கும் அவன் நண்பர்களுக்கும், கோலி பெண்களை சப்ளை செய்த முறை, நடந்த கொலைகளில் வீட்டில் வேலை செய்த பெண்ணின் பங்கு (ரத்தக் கறை படிந்த தரையை கழுவி விடுவது உட்பட), கொலை செய்த உடலை கோலி சாக்கடையில் வெட்டிப் போட்டது ஆகிய அனைத்துச் செயல்களையும் நடித்துக் காட்ட இருக்கிறார்கள்.

இந்த நாடகத்தை அரங்கேற்ற இக்குழந்தைகள் காட்டும் ஆர்வம், வெளிப்படுத்தும் உணர்வு நம்மை மனம் நெகிழச்செய்கிறது. இந்த நாடகத்தில் கடைசிக் கட்டம் மட்டும் வசனம் ஏதும் இல்லாமல், மொளனமாக நடித்துக் காட்ட இருக்கிறார்கள். கண்ணீரை வர வைக்கும் ஒரு நடிப்பு. எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தால், இது நாள் வரையில் கிரிக்கெட்டும், பட்டமும், விட்டு விளையாடிக் கொண்டிருந்த இந்தச் செல்வங்கள், இன்று உணர்ச்சிப் பெருக்குடன் நடிக்க முன் வருவார்கள்?.

ஏனோ இந்தச் சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. அதனாலேயே மீண்டும் குழந்தைகளையும், பாதிக்கப்பட்ட பெற்றோர்களையும் பார்த்துப் பேசலாம் என்று சென்றேன். அப்போது தான் இந்தத் தகவல்கள் கிடைத்தன. நாளிதழ்களிலும் இந்தச் செய்தி வந்தது. ஒத்திகை நடந்து கொண்டு இருக்கிறது.

படத்தில் குழந்தைகளின் முகத்தைப் பாருங்கள். எவ்வளவு கலக்கம், அதிர்ச்சி..

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)