நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்பா என்னை "இண்டிபென்டென்ஸ் டே" (Independence Day) அப்படின்னு ஒரு படத்துக்கு கூட்டிக்கிட்டு போனாரு. படத்தோட கதை என்னனா வேற்று கிரகத்துல இருந்து மக்கள்ஸ் எல்லாம் வந்து நம்ம ஊரு மக்கள்ஸ் எல்லோரையும் அழிக்கறது தான் க
தை. வழக்கம் போல கடைசியிலே நம்ம கதாநாயகன் இல்லாத தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணி கடைசியிலே நம்ம பூமியை காப்பாத்திருவாரு. படத்தோட திரைவிமர்சனம் வேணும்னா வேற ஒரு பதிவுல போடறேன் ஆனா நான் முக்கியமா இந்த விஷயத்தை எதுக்காக சொன்னேன்னு கேட்டீங்கன்னா,படத்துல ஒரு அம்சமான சீன் ஒன்னு வரும் (மனசுல ஏதாவது தப்பா நினைச்சுக்கிட்டீங்கன்னா அது உங்க தவறு)
சீன் தொடங்கும் போது நிலாவுல இருந்து நம்ம பூமியை காட்டுவாங்க. சத்தமே இல்லாம அமைதியா நிலவோடு பரப்பு இருக்கும் அதுல இருந்து பூமி நீல கலருல ரொம்ப சமத்தா சாந்தமா தெரியும் (நம்ம தமிழ்மணத்துல நடக்கற சண்டை எல்லாம் அங்கிட்டு இருந்து தெரியறது இல்லை) . அப்படியே கேமெராவை திருப்பி நிலாவோட மேல்பரப்பை காட்டுவாங்க. சூரியனோட லேசான வெளிச்சத்துல அதுல மணல்பரப்பு விரிஞ்சு இருக்கறது தெரியும். கொஞ்சமா க்ளோஸ் அப் போக போக நிலா மேல பூமி மனிதன் விட்டு போன காலடி தடங்கள் தெரியும் (சில பேரு அமெரிக்கர்கள் நிலாவுக்கு போகவே இல்லை,எல்லாம் சும்மா ஊரை ஏமாத்திட்டு இருக்காங்கன்னு சொல்றானுங்க!! ஆனா நாம அதை பத்தி அப்புறமா பார்க்கலாம்) நிலாவுல நம்ம பூமியில இருக்கறா மாதிரி காற்று வெளி மண்டலம் கிடையாது. காற்றே அவ்வளவா கிடையாதுங்கறதுனால என்னிக்கோ விட்டு போன காலடி தடம் கூட அழியாம பத்திரமா இருக்கும்.அச்சு அசலான அந்த காலடி தடத்தை நாம பார்த்துட்டு இருக்கும் போதே அங்க மணல்பரப்பு லேசா நில நடுக்கம் மாதிரி நடுங்க ஆரம்பிக்கும் . என்னடா இது?? இங்க எப்படி நடுக்கம் வந்துச்சுன்னு நாம யோசிக்கும் போதே நடுக்கம் அதிகமாகிடும். கொஞ்ச நேரத்துல அந்த நடுக்கத்துல மனிதனின் காலடித்தளமே மறைஞ்சு போயிடும்,கூடவே பெருசா சத்தம் வேற கேட்க ஆரம்பிச்சுடும். இப்
போ அப்படியே கேமராவை மேல தூக்கி காட்டுனா திரை முழுவதும் மறைத்து முதல் எது,முடிவு என்பதே தெரியாத அளவுக்கு பெரியதான ஒரு பறக்கும் தட்டு பூமியை நோக்கி போய்க்கொண்டிருக்கும்.. கூடவே பெரிதான ட்ரம்பெட் சத்தத்தோட கலக்கலா அந்த சீனை முடிச்சிருப்பாங்க!!
இந்த சீனை பார்த்த கொஞ்ச நேரத்துக்கு நான் திறந்த வாயை மூடல. பாட புஸ்தகத்துல சூரியன்,பூமி,நிலா, பூமி சூரியனை சுத்தி வருது, நிலா பூமியை சுத்தி வருது அப்படின்னு எல்லாம் படிச்சாலும் மொத முறையா இது மாதிரி அப்போ தான் பாக்குறேன். அன்னிக்கு ஆரம்பிச்சது தாங்க நமக்கு அண்ட வெளி மேல் உள்ள காதல். இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு. நான் வாழ்க்கையிலே பெரிய ஆளா ஆனா என்னவா ஆகனும்னு இரண்டு விஷயத்துல தான் தீவிரமா இருந்தேன். ஒன்னு கிரிக்கெட் ஆட்டக்காரனாகனும்னு, இன்னொன்னு விண்வெளி வீரன் ஆகனும்,நாஸாவுல போய் வேலை பார்க்கனும்னு எனக்கு சின்ன வயசுல ரொம்ப ஆசை. அப்போ எல்லாம் இப்போ இருக்கறா மாதிரி இந்திய விண்வெளி கழகம் அவ்வளவா பிரசித்தி கிடையாது. அப்துல் கலாம்னு சொன்னா யாருன்னு கேப்பாங்க. அப்போ எனக்கு எல்லாம் நாஸாதான் தெரியும். பேப்பர்ல அவிங்க செவ்வாய் கிரகத்துக்கு வி
ட்ட விண்கலமும்,சனி கிரகத்துக்கு விட்ட விண்கலமும் என்ன ஆச்சுன்னு ஆவலா செய்திகளை பின்பற்றுவேன். சரி சரி அதை பத்தி எல்லாம் இப்போஎதுக்கு. நம்ம விண்வெளி ஆர்வத்தின் உந்துதளால இப்போ விண்வெளி பற்றிய சுவையான விஷயங்களை என் பதிவுல தொடரா எழுதலாம்னு பாக்கறேன். நம்மளுக்கு பெருசா ஒன்னும் விஷயம் தெரியாட்டாலும் இருக்கவே இருக்கு விக்கிபீடியா. திக்கற்றவருக்கு விக்கிபீடியாவே துணைனு பழங்காலத்து வழக்குச்சொல் இருக்குல.அதான் ஆரம்பிச்சாசு!! :-)
என்னிக்காவது கரண்ட் போயிடிச்சுனா வீட்டுக்கு வெளிய வந்து உட்கார்ந்திருக்கீங்களா?? நான் வீட்டுல கரண்ட் இருந்தா கூட அப்பப்போ எங்க வீட்டு வெளியில வந்து உட்கார்ந்துருவேன். அதுவும் மொட்டை மாடி தண்ணீர் தொட்டியில மல்லாக்க படுத்துக்கொண்டு வானத்தில் நட்சத்திரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. அதுவும் மிக சிறியதாக இருந்து கொண்டு எப்பொழுதும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களை கண்டால் சில சமயம் எனக்கு பாவமாக கூட இருக்கும். ஆனால் இவ்வளவு சாதுவாக இருக்கும்
நட்சத்திரங்கள்தான் அண்ட வெளியிலேயே ஜாம்பவான்கள்.
இந்த நட்சத்திரங்கள் எல்லாம் என்ன?? இதெல்லாம் எப்படி உருவாகிறது?? எப்போ வெளியே வந்தாலும் நம்மை பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கின்றனவே ,இதற்கெல்லாம் அழிவே கிடையாதா??
முதலில் இந்த நட்சத்திரம்னா என்னதுங்க?? எப்படி அதுல இருந்து மட்டும் இவ்வளவு ஒளியும் , சூடும் வெளி வருகிறது?? அதற்கு இவ்வளவு சக்தியை யார் அளித்தார்கள்??
நட்சத்திரம் என்பது வானவெளியில் காணப்படும் மிக பெரிய ஒளிப்பிழம்பு. நட்சத்திரங்களுக்கு இவ்வளவு ஒளியும் சூடும் இருப்பது அதன் உள்ளே சதா சர்வ காலமும் நடந்து கொண்டிருக்கும் அணுக்கரு சேர்க்கையினால் (nuclear fusion) உண்டாவது. வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கற நாலு பசங்க ஒன்னா சேர்ந்தா சும்மா இருக்க முடியுமா?? எதாவது வெவகாரமா பண்ண ஆரம்பிப்பாய்ங்கல?? அதே மாதிரி வெண்வெளியில் சும்மாவேனும் சுற்றிக்கொண்டிருக்கும் மேகக்கூட்டங்கள் புவியீர்ப்பு விசையால் ஒன்றாக சேர்ந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது அந்த அந்த மேகங்களில் உள்ள ஹைட்ரொஜென் வாயு ஹீலியம் வாயுவாக மாற ஆரம்பிக்கிறது. அது ஏன் தனியா இருந்தா மாற முடியாதா-னா முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு மேகக்கூட்டம் சேர்ந்த பின் தான் இந்த ரசாயன மாற்றங்கள் ஆரம்பிக்கின்றன. இந்த ரசாயன மாற்றத்தால் ஏற்படும் சூடு ,வெளிச்சம் மற்றும் கதிர்வீச்சுகள் நாலா புறமும் பெரும் வேகத்துடன் வீசப்படுகின்றன. நம்மூருல இப்போ வெயில் கொளுத்துதுல?? எல்லாத்துக்கும் அணுக்கரு சேர்க்கைதான் காரணம். 
சரி நட்சத்திரம்ங்கறது ஒன்னா சேர்ந்த ஹைட்ரோஜென் மேகக்கூட்டங்கள் சும்மா இருக்கமுடியாம ஆட்டம் போடறதுனால உருவாகுதுன்னு சொல்றீங்க,அப்போ கிரகங்கள் எல்லாம் எப்படி உருவாகுது??
சும்மா சுத்திட்டு இருக்கற இந்த வாயுக்கூட்டம் ஒன்னா சேர்ந்தா நட்சத்திரம் ஆகும் ஆனா அதுவே ஒரு நட்சத்திரத்தால ஈர்க்கப்பட்டு அதை சுத்தி வர ஆரம்பிச்சுதுன்னு நினைச்சுக்கோங்க,அதுக்கு பேருதான் கிரகங்கள். அதுல பார்த்தீங்கன்னா பூமியை போல சில கிரகங்கள் தான் திண்ம பொருளா (solid state)இருக்கும். வாயுக்கள் எல்லாம் குளிர்ந்து போய்,பல ரசாயன மாற்றங்கள் எல்லாம் ஆகி சில கிரகங்கள்தான் இப்படி திண்மப்பொருளாகிடுது (solid state),மத்தபடி பார்த்தீங்கன்னா பெரும்பாலான கிரகங்கள் எல்லாம் வாயு நிலையில் தான் இருக்கும் (உதாரணத்துக்கு வியாழன் (Jupiter)).
சரி கிரகங்கள் எப்படி உருவாகுதுன்னு பார்த்தாச்சு,அப்போ துணைக்கோள்கள் (satellites)எல்லாம் ??
இப்போ நட்சத்திரங்கள் ஆகாத மேகங்கள் எல்லாம் பக்கத்துல இருக்கற நட்சத்திரங்களால ஈர்க்கப்பட்டு கிரகங்கலா சுத்துதுல?? அது மாதிரி சில குட்டி மேகங்கள் எல்லாம் கிரகங்களின் ஈர்ப்பு விசையினால் கவரப்பட்டு அதை சுத்தி துணைகோள்களா சுத்திட்டு இருக்கு. இங்கேயும் ரசாயன மாற்றங்களால் சில துணைகோள்கள் திண்ம நிலையில் இருக்கலாம்,சிலது வாயு நிலையில் இருக்கலாம். இதுல கவனிக்கவேண்டிய விஷயம் என்னனா நம்ம பூமிக்கு மட்டுமே ஒரே ஒரு துணைக்கோள் (நிலா) இருக்கே தவிர எல்லா கிரகங்களுக்கும் அப்படி இருக்கனும்னு அவசியம் இல்லை.
உதாரணமா செவ்வாய் கிரகத்துக்கு 2 கோள்கள் உண்டு, வியாழன் கிரகத்துக்கு சின்னதும் பெரிசுமா 63 கோள்கள் இருக்கு!!! :O
என்னடா எல்லாத்துக்கும் வாயு,மேகக்கூட்டம்னு சொல்ற!! எங்கே இருந்து இந்த வாயு மேகம் எல்லாம் வந்திச்சுன்னு கேக்கறிங்களா???
அதை அடுத்த பதிவுல பார்க்கலாம்!!
வரட்டா?? ;-)
References :
1.)Star. (2007, May 1). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:29, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Star&oldid=127445493
2.)Planet. (2007, May 3). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:39, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Planet&oldid=127999397
3.)Satellite. (2007, May 3). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 00:41, May 4, 2007, from http://en.wikipedia.org/w/index.php?title=Satellite&oldid=127837210
பி.கு : எனக்கு தெரிந்த புரிதலுக்கு ஏற்றார்போல் இந்த பதிவை எழுதியிருக்கிறேன். பதிவில் ஏதாவது தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.
நன்றி