இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
வானுக்குள் விரியும் அதிசயங்கள் - பாகம் 2 Print E-mail
CVR   

வணக்கம் மக்களே!
இரண்டாவது பாகம் போடுறதுக்கு இவ்வளவு நேரம் ஆக்கியதற்கு முதலில் மன்னிக்கனும்.இசை இன்பத்துல கொஞ்சம் வேலை இருந்ததால இந்த பக்கம் வர முடியலை. (ஹி ஹி ,சும்மா ஒரு விளம்பரம்தான்!! :-D)

போன பாகத்துல சூரியன் எப்படி உருவாச்சு அப்படின்னு பார்க்க போய்,பொதுவா நட்சத்திரங்கள் எப்படி உருவாகுது,கிரகங்கள்,துணை கோள்கள் எல்லாம் எப்படி உருவாச்சு அப்படின்னு பார்த்தோம். எதை கேட்டாலும் எல்லாத்துக்கும் தூசு மேகக்கூட்டங்கள் தான் காரணம் அப்படின்னு நானும் சொல்லிட்டு தப்பிச்சிட்டு இருந்தேன் . நீங்களும் டென்ஷனாகி "எலே!! எல்லாத்துக்கும் மேகக்கூட்டம் மேகக்கூட்டம்னு கதை சொல்லுதியேலே!!!இந்த மேகக்கூட்டம் எங்கிட்டு இருந்து வந்துச்சு????"அப்படின்னு அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டீங்க. அப்போதான் நானும் எஸ்கேப் ஆகிட்டேன்.

 

vaan1

இந்த அண்ட வெளியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் எங்கே இருந்து வந்தது என்பது வெகு காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. உலகெங்கிலும் உள்ள பல மதங்கள்  எல்லாம் தங்கள் கோட்பாட்டுக்கு ஏற்றார்போல் படைப்பின் கதைகளை சொன்னாலும்,விஞ்ஞானப்பூர்வமாக விண்வெளி எப்படி உருவாகியது என்ற தெளிவான அறிவு மனிதனிடம் இருபதாவது நூற்றாண்டு வரை இல்லை. மக்கள் சொல்லி வந்த ஒன்றிரண்டு கோட்பாடுகள் கூட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இருபதாவது நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க வான்வெளி அறிவியல் புனைவான (invention) "ஹப்பில் தொலைநோக்கி" (Hubble's telescope) முலமாக இந்த விஷயத்தில் ஓரளவு ஒற்று கருத்து ஏற்பட்டது.

அப்படி என்ன தில்லாலங்கடி வேலையை இந்த தொலைநோக்கி செய்து விட்டது என்று கேட்கிறீர்களா?? இப்போ உங்க வீட்டு வாசலுக்கு வந்து வெளியிலே பார்க்கறிங்கன்னு வெச்சுக்கோங்க அப்போ என்ன தெரியும்?? அது வீடு இருக்கற இடத்தை பொருத்தது. பக்கத்து வீடு தெரியும்,நம்ம வீதி தெரியும்,கொஞ்சம் தள்ளி இருக்கற வீதி தெரியலாம். நம்ம வீடு மாடியிலே ஏறி பார்த்தா இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கற வீடு எல்லாம் தெரியும். அப்படியே ஊரு பக்கத்துல இருக்கற மலையில ஏறி பார்த்தா ஊரே தெரியும்!!! இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் ஹப்பில் தொலைநோக்கியையே உருவாக்கினாங்க.

vaan2

எவ்வளவு நாள் தான் கீழே இருந்து வான்வெளியை பார்த்துட்டு இருக்கறது அப்படின்னு மலை முட்டுல போய்ட்டு பெரிய பெரிய தொலைநோக்கிகள் எல்லாம் மக்கள் முதலில் கட்டினார்கள். அங்கேயும் கூட சரியா பார்க்க முடியலைன்ன உடனே,நாம ஏன் வான்வெளிக்கே ஒரு தொலைநோக்கியை அனுப்பி அங்கே இருந்து பார்க்க கூடாதுன்னு முடிவெடுத்தாங்க. அப்படி அனுப்பப்பட்டது தான் ஹப்பில் தொலைநோக்கி. ஹப்பில் தொலைநோக்கியை பத்தியே ஒரு பதிவை போடலாம்,அதனால அதை அப்புறம் பார்க்கலாம். இப்போ நம்ம கதைக்கு வருவோம். இந்த ஹப்பில் தொலைநோக்கி மூலமாக என்ன கண்டுபிடிச்சாங்கன்னா, நம்ம அண்ட வெளியில் உள்ள பொருட்கள் எல்லாம் விரிவடைஞ்சிட்டே இருக்குன்னு.

அதாவ்து பூமிக்கும் நிலாவுக்கும் நடுவுல இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் இருக்குன்னு வெச்சிக்கோங்க,இதையே நாளைக்கு போய் பார்த்தோம்னா தூரம் அதிகமாகி இருக்கும்,அடுத்த வருஷம் போய் பார்த்தோம்னா இன்னும் அதிகமாகி இருக்கும். இப்படி விரிவடைஞ்சிகிட்டு இருக்கற வேகம் சொற்பமாக இருந்தாலும் காலப்போக்கில் இதன் தீவிரம் அதிமாக தெரியும். இது நிலாவுக்கும் பூமிக்கும் மட்டும்மல்லாது எல்லா வான்வெளி பொருளுக்கும் பொருந்தும். இப்படி எல்லாம் விரிவடைஞ்சிக்கிட்டே போய்ட்ருக்கே அப்போ இன்னைய விட நேத்து பூமியும் நிலாவும் கிட்டக்க இருந்திருக்கும் இல்லையா???
உண்மைதான் இருந்திருக்கும்!!
அப்போ கொஞ்சம் கொஞ்சமா பின்னாடி போய்ட்டே இருந்தா இன்னும் இன்னும் கிட்டக்க போய்ட்டே இருக்கும்ல.
ரைட்டுதான்!!
அப்போ இப்படியே போய்ட்டு இருந்தா என்னிக்காவது ஒரு நாள் இந்த அண்ட வெளியில் உள்ள அனைத்து கோள்கள்,கிரகங்கள்,மேகங்கள் எல்லாமே ஒரு பொருளா பிணைந்து இருக்கும் இல்லையா??
ஆமாம்!!!

அப்போ நாம இப்போ நம்மை சுத்தி பார்த்திருக்கற பொருள் எல்லாமே ஒன்றாக பிணைந்து இருந்து என்னிக்காவது ஒரு நாள் வெடித்து சிதறி இருக்கும். அப்படி வெடித்து சிதறின பொருட்கள்தான் இப்பவும் பல கிரகங்களாகவும்,நட்சத்திரங்களாகவும்,கோள்களாகவும்,தூசு மேகங்களாகவும் பல விதமாக இருந்துகொண்டு, தங்களூடே இடித்துக்கொண்டு,பிணைந்துக்கொண்டு பலவேறு பொருட்களாகவும், நட்சத்திர மண்டலங்கலாகவும் உருமாறிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. இப்படி நம்பப்படும் கோட்பாடு தான் "பேரிடி கோட்பாடு"(இதற்கு வேறு தமிழ்ச்சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை) எனப்படும் "Big bang theory".

இன்றைய நிலையில் அண்டத்தின் உருவாக்கம் பற்றி முக்கால்வாசி அறிஞர்களாலும், விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிந்தாந்தம் இதுதான். இதை விட ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு சிந்தாந்தம் இல்லையே என்பதானால் தான் இதை எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே தவிர,இது எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் கோட்பாடு அல்ல. இதை பற்றி கேள்வி கேடக வேண்டும் என்றால் பல நூறு கேள்விகள் கேடகலாம்,ஆனால் எல்லாவற்றிற்கும் விடை இருக்குமா?? என்றால் இல்லை!! :-(

உதாரணத்திற்கு எல்லாமே இந்த அண்ட முட்டையான "cosmic egg" இல் இருந்து வெடித்து சிதறியது என்றால் இந்த அண்ட முட்டை எங்கிருந்து வந்தது??? இதற்கு முன்னால் ஏன் சிதற வில்லை?? சிதற வைத்தது எது?? ஏன் இந்த வெளி இவ்வளவு வேகமா விரிவடைந்து கொண்டு இருக்கிறது????
என்று எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இப்படியே விரிவடைந்து கொண்டே இருந்தால் கடைசியில் என்னதான் ஆகும்???
வல்லுனர்களின் கணிப்பு படி அண்டம் இப்படி விரிவடைந்து போய்க்கொண்டே இருக்குமாம். அண்டத்தின் நிறை (mass) மற்றும் அடர்த்தி(density) இப்படி குறைந்து கொண்டே போக போக ஒரு சமயம் அண்டத்தின் விரிவடைதல் நின்று போகுமாம். பின் விரிவடைந்துக்கொண்டிருந்த அண்டம் சுருங்க ஆரம்பித்து விடும் இப்படியே சுருங்கி சுருங்கி திரும்பவும் அண்ட முட்டையாகி விடும் என்று சில பேர் கூறுகிறார்கள்.
இதற்கு எல்லாம் என்ன சான்று?? நீங்கள் சொல்வது சரி என்று நான் எப்படி நம்ப முடியும்?? என்றால்,எல்லாம் ஒரு நம்பிக்கை தான்!!
ஏன் என்றால் இந்த கோட்பாட்டை தெளிவாக நிரூபிக்க சான்று ஒன்றும் கிடையாது ,முழுமையாக நிரூபிக்கவும் முடியாது.(ஏன் என்பது மிக பெரிய கதை,அதனால் அது இப்பொழுது வேண்டாம்)
விஞ்ஞானத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் தேடும் மனிதனுக்கு சில சமயங்களில் சில விஷயங்களுக்கு ஆதாரமே தராமல் இயற்கை தண்ணி காட்டி விடுகிறது. மனிதனும் முயன்று கொண்டு தான் இருக்கிறான்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் படைப்பின் ரகசியம் பற்றி மனிதனுக்கு சுத்தமாக தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். "பேரிடி கோட்பாடு" போன்ற விஷயங்கள் அதை புரிந்துக்கொள்ள விழையும் முயற்சியே தவிர இது படைப்பை பற்றிய முழுமையான அறிவாக கருத முடியாது. வருங்காலத்தில் வரும் விஞ்ஞானிகளாவது இதற்கான புரிதலை உலகுக்கு அளிப்பார்களா என பொருத்திருந்து பார்ப்போம்.



vaan3இரவில் நட்சத்திரங்களோடு மௌன மொழி பழகும் நாட்களில் நான் யோசித்த இன்னொரு விஷயம் என்னவென்றால்,நமக்கு தெரிந்து கோடான கோடி ஒளி வருடங்கள்* வரை எங்கேயும் உயிர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. அப்படி இருக்கும் போது எதற்காக இவ்வளவு பெரிய அண்டத்தை கடவுள் படைக்க வேண்டும்?? என்பது.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்,இவ்வள்வு பெரிய அண்ட வெளியில் தம்மாத்தூண்டு பூமியில் மட்டும் எப்படி உயிர் உருவானது?? மற்ற இடங்களில் ஏன் உருவாக வில்லை??? உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளனவா??? இருந்தும் நாம் அறியாமல் இருக்கிறோமா?? இல்லை தெரிந்தும் மறைக்கப்பட்டுள்ளதா???

இப்படி பல கேள்விளுக்கான அலசல்களை எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்!! :-)
வரட்டா??

vaan4

*ஒளி வருடம் : நட்சத்திரங்கள் நடுவில் இருக்கும் மிக அதிமான தொலைவுகளை அளக்க உதவும் ஒரு அளவுகோல்.

http://cvrintamil.blogspot.com/2007/05/2.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)