இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர் குழு   

மக்களாட்சியின் நான்காவது தூணாகக் கருதப்படுபவை பத்திரிகைகள் . இந்த நான்காவது தூணிற்குள் இப்போது செய்தியூடகங்களும் அடங்குகின்றன. இருபத்துநான்கு மணிநேரமும் செய்திகளால் நிரம்பி வழியும் இந்த ஊடகங்கள் மக்களிடையே நடக்கும் செய்திகளையெல்லாம் அப்படியே சொல்லிவிடுவதில்லை. மாறாகக்குறிப்பிட்ட செய்திகளை, குறிப்பிட்ட விதத்தில், திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் தாம் அடைய நினைக்கும் உள்ளங்களை அடைந்து அங்கே நிகழ வைக்க வேண்டியமாற்றங்களை நிகழ வைக்கின்றன. ஒரு தேர்ந்தெடுத்த வில்லாளி எப்படித் தன் இலக்கினை வீழ்த்துகிறாரோ அத்தகைய பக்குவம் ஊடகத்தாருக்கு உண்டு . இத்தகையஊடகங்கள் உலகெங்கும் பலவிதமான அரசியல் , பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் ஏற்படுவதை விரைவாக்குகின்றன அல்லது சாத்தியமாக்குகின்றன. அதனாலேயேஅரசியல் கருத்துக்களால் மாறுபட்டிருக்கும் ஒவ்வொரு குழுவும் தனக்கானவொரு பத்திரிகையை (ஊடகத்தை) வளர்த்து வைத்துள்ளது. இருப்பினும் அதிகார பலம் எந்தஊடகத்தையும் வலுவிழக்கச் செய்துவிடும். இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கெதிராகத் தொடர்ந்து நிகழும் வன்கொலைகள் ஒரு இனத்தின் குரலையேஒடுக்கச் செய்யும் நோக்கில் நிகழ்த்தப்படுபவை. பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானதென்று அனைத்துலகத்தின் கடும் கண்டனத்துக்குள்ளாகின்றவை . அண்மையில்நிகழ்ந்த மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகக் கொலைவெறித் தாக்குதல்கள், முதன்மையாகப் பத்திரிகைச் சுதந்திரத்தினைக் குறிவைத்தது என்று நினைப்பதற்கில்லைஎன்ற மாற்றுக்கருத்து தென்படலாகின்றபோதும், தாக்கப்பட்டது பத்திரிகை அலுவலகம் என்ற வகையிலும், கொலையுண்டது பத்திரிகை அலுவலர்கள் என்ற வகையிலும்இச்செயலுக்கு, பூங்கா தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது. வலிவு மிக்கதான ஊடகங்களைப் பற்றிய முக்கியமான இடுகைகளை இவ்வார பூங்கா தாங்கி வருகிறது.ஜெகத், எவ்வாறு ஊடகங்கள் அரசாள்பவர்களை மக்கள் மனதில் வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதையும், அதனைத் தொடரும் வெங்கட், தமிழகஊடகங்களுக்கு அந்த வலிவில்லை என்பதாகவும், மீண்டும் ஜெகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுறுத்துவதாகவும் ஒரு தொடர்விவாதம் நிகழ்ந்திருக்கிறது .

கவிஞர் சல்மா தனது ஆளுமை மிக்க கவிதைகளினாலும், ஆரவாரமற்ற ஆனால் மிகவும் அழுத்தமான சொற்களாலும் பெண்ணியத்தினைப் பேசும் நிகழ்காலத்தின்முக்கியமான படைப்பாளி. இன்றைய பெண்களுக்கேயுரித்தான கட்டுக்குள்ளிருத்தப்பட்ட வாழ்க்கையும் , எந்த மதமானாலும் பெண்களென்றால் இறுகும்சட்டதிட்டங்களும் , அவற்றினைத் தளையறுக்கத் தூண்டிய இயற்கையான விடுதலை வேட்கையும், இணையாக நிகழ்ந்த வாசிப்பனுபவமும் இவையாவும் கலந்த உணர்வுக்கலவையென்று இவரது கவிதைகளைச் சொல்லலாம். 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' மற்றும் 'பச்சை தேவதை' என்ற இரு கவிதைத் தொகுப்புகளும், "இரண்டாம்ஜாமங்களின் கதை" என்ற புதினமும் இவரது குறிப்பிடத் தகுந்த படைப்புகள். ஒரு கிராமத்திலிருந்து தனது இலக்கியப் படைப்பாற்றலின் மூலம், எத்தனையோ இடர்களைத்தாண்டி வெளியுலகுக்கு அறியப்பட்டிருக்கிறார் சல்மா. அமெரிக்காவில் இப்போது சிக்காகோ பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரிலே வந்திருக்கும் சல்மா இயேல் பல்கலைக்கழகத்தின் கலந்துரையாடல் ஒன்றின்போது, வாசித்த அவரது படைப்புகள் 'படைப்பு வாசிப்பு ' ஒலிப்பதிவாக்கப்பட்டுள்ளன. அதற்கு அனுமதி தந்ததற்கு அவருக்கு நன்றி . அதனைத் தாங்கி வருவதில் இவ்வார பூங்கா பெருமை கொள்கிறது. கூடவே பெண்கள் இக்காலத்தில் புலம்பெயர்தலின்பின் எதிர்கொள்ளும் உள்ளத்தாக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும், நிகழாமலேயே விடப்பட்டிருக்கும் எண்ணற்ற பதிவுகளையும் சுட்டிக்காட்டும் படமான Provoked பற்றிய டிசேயின்இடுகையும், அவரது இன்னொரு திரைப்பட அனுபவத்தில் ஒரு பெண் பத்திரிகையாளரின் முதலாளித்துவக் கட்டமைப்பின் சுரண்டலுக்கெதிரான போராட்டத்தையும்பதிந்துள்ளார். புலம்பெயர்ந்த பெண்கள் கருத்தடையினைப் பற்றி அறிய வேண்டிய அல்லது புரிந்துணர்வோடு அதனை ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் வரவேண்டியதைப்பற்றிய தன் கருத்தினைக் கறுப்பி முன் வைக்கிறார். வீடுகளில் வேலைக்கமர்த்தப்படும் பெண் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகளைப் பற்றிய மங்கையின் பதிவும்இந்தக் கோட்டினில் சென்று வாசிக்கத் தக்கது. துயரங்களுக்கும், மனவழுத்தங்களுக்கும் மாற்றாக வெற்றியை நோக்கிய ஒரு பெண்ணின் பயணமும் இவ்வாரம்பதியப்பெற்றுள்ளது; து அட்டையிலமர்ந்திருக்கும் மாயாவதியினது .பி மாநிலத் தேர்தல் வெற்றி. து ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை சங்கரபாண்டியின்கட்டுரை உணர்த்தும்.

வலைப்பதிவின் இடுகைகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருமாதிரி பாதிக்கும் தன்மையைக் கொண்டவை. அவற்றை அந்த நபரின் அனுபவத்தினோடு ஒப்பிட்டு நோக்குவது,நிலையை இன்னும் நெருக்கமாக உணரவைக்கும். அத்தகையதொரு இடுகையினை இவ்வாரத்தின் தமிழ்மணம் வாசிப்பில் பகுதிக்காக எழுதியளித்திருப்பவர் பத்மாஅர்விந்த் . அவருக்கு நம் நன்றி. குழந்தைகளுக்கு நூல்களைப் பரிசாக அளிக்க வேண்டியதைப் பற்றிய மகாவின் குறிப்பு இவரை ஒரு குறிப்பிடத் தகுந்த புதிய பதிவராகஅறிமுகம் செய்கிறது. செல்லமுத்து குப்புசாமி தன்னுடைய பொருளாதாரம் குறித்த புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறார். ஆதவனின் 'ராமசேஷனின் கதை 'யை ஆராயும்ஜெகத், 'அக்ரகாரத்து இலக்கியம் ' என்ற முக்கியமான சொல்லாடலை முன் வைக்கிறார் . சம்சாரி தன்னுடைய உயிர்ப்பிக்கும் பதிவில் சுயம்புலிங்கம் என்ற எழுத்தாளரைப்பற்றியும் அவரது சிறுகதையொன்றையும் இட்டுள்ளார். எளிய வார்த்தைகளைக் கொண்டு ஆழமான சித்திரத்தைக் கீறியிருக்கிறார் சுயம்புலிங்கம்.

சென்ற வாரமே குறிப்பிட்டிருந்ததுபோல் பெரியார் படம் வணிக ரீதியாகவும் , கருத்தாக்கத் தளத்திலும் சிறந்த வெற்றியினைப் பெற்று வருகிறது. படம் குறித்த மூன்றுவிமர்சனங்கள் இவ்வாரம் இடம்பெறுகின்றன. சுகுண திவாகரின் விமர்சனத்தில் ஆரோக்கியமான அணுகுமுறையோடு சுட்டப்பட்டிருக்கும் குறைகளெல்லாம் எதிர்காலத்தில்வெளிவரும் படங்களில் களையப்படும் என நம்புவோம் . வளர்ந்து வரும் தகவல் தொடர்பு மேம்பாடுகளால் எந்த இயக்குனர் எங்கிருந்து எதனை எடுத்தாண்டிருக்கிறார்என்பது இப்போதெல்லாம் அப்பட்டமாகத் தெரிந்துவிடுகிறது . முந்தைய நாட்களில் சிலருக்கு மட்டுமே வாய்த்திருந்த இத்தகவல் தொடர்புச் சாதனங்கள் இப்போதுஎல்லோருக்கும் வாய்த்திருப்பது ஒரு முக்கியக் காரணம். நாயகன் படத்திற்கும், காட்பாதருக்கும் உள்ள தொடர்பையடுத்து, இப்போது அதே காட்பாதர் படத்துக்கும்தேவர்மகன் படத்துக்குமுள்ள தொடர்பைச் சுட்டுகிறார் பிரபு ராஜதுரை. இதுவரை காதும் காதும் வைத்ததுபோல் தழுவியவர்கள் இப்போது தழுவுதலைத் தவிர்க்கவேண்டியகட்டாயத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய திரைத்துறையினரின் படைப்புகளின் பின்னாலிருக்கும் உளவியலும் இப்போது கடும் ஆய்வுகளுக்குட்படுவதைப்பாமரனின் பதிவிலிருந்து உணரலாம்.

இவற்றினைத் தவிர பொருளாதாரம், அறிவியல் , திரைப் படங்கள், புகைப்படங்கள், இல்லாத ராமர் பாலத்தை வைத்து அரசியல் வியாபாரத்துக்குத் தயாராகும்இந்துத்துவ கட்சிகளின் புலம்பல்களுக்குத் துணைபோகும் பத்திரிகா தர்மம், பயணக் குறிப்புகள் என்று பல்துறை இடுகைகளையும் தாங்கி வருகிறது இவ்வார பூங்கா.படைப்பளித்த அனைவருக்கும் நம் நன்றி!
 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)