இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
"மஞ்சள் மகத்துவம்' Print E-mail
வி. ஜெ. சந்திரன்   

மஞ்சள் (Turmeric - Curcuma longa) பாரம்பரியமாக உணவு வாசனை/சுவையூட்டி, நிறமூட்டி, மூலிகை என பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆயுள் வேத/ சித்த மருத்துவ மூலிகையாக பல காலமாக பயன்படுத்தப்பட்டுவந்தாலும் அதன் பயன்கள் அறிவியல் ரீதியாக ஆய்வுகள் மூலம் அண்மைக்காலமாக நிரூபிக்கப்பட்டுவந்துள்ளன. இதன் ஒருகட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மஞ்சளுக்கு காப்புரிமை பெற்ற சம்பவமும் அறிந்ததே.





உணவு சுவையூட்டி, அழகு சாதன பயன்பாடு என்பவற்றுக்கு அப்பால் அதன் உடல் நலன் சார் பங்களிப்பை பற்றி பார்த்தோமானால்.

1. புற்று நொய் எதிர்ப்பு (Anti-cancer)
2. நுண்ணுயிர் கொல்லி (Anti-microbial)
3. அழற்சியை எதிர்த்தல் (Anti-inflamatory)
4. ஒட்சியேற்ற எதிரி (Anti-oxidant)



மஞ்சளில் இருக்கும் முக்கிய இரசயான சேர்வைகள்

1. Turmerin
2. Essential oils
3. Curcumanoids
a. Phenolic compounds
c. Curcumin- (diferuloylmethane)



இந்த இரசாயன சேர்வைகளில், Curcumin- (diferuloylmethane) புற்று நோய் எதிர்ப்பில் முக்கிய பங்களிப்பை செய்கிறது.


Curcumin- (diferuloylmethane) இன் புற்று நோய் எதிர்ப்பு செயன்முறை

1. புற்று நோய் கலங்கள் பெருக்கமடைவதை தடுத்தல்
2. புற்று நோய் விருத்தியின் படி I, II, ஆகியவற்றின் நொதிய (Enzyme) செயற்பாட்டை கட்டுபடுத்தல்
3. புற்று நோய்கலங்கள் ஏனைய இடங்களில் சென்று இணைவதை தடுத்தல்
4. ஒட்சியேற்ற எதிரியாக செயற்படல்

சமிபாட்டு தொகுதியில் புற்று நோய் ஏற்படுவதில் COX-2 எனும் நொதியம் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. Curcumin- (diferuloylmethane) இதன் செயற்பாட்டை தடுப்பதாக அறியப்பட்டுள்ளது.

எலிகளில் செய்யப்பட்ட ஆய்வில்
மரபணுக்களுக்கு நச்சுதன்மையான காரணிகளை நிரோதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மனிதரில் புற்று நோய்க்கு எதிராக 1.6 கிராம் Curcumin- (diferuloylmethane) ஒரு நாளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டாலும் மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஏன் எனில் அண்மையில் செய்யப்பட்ட சில ஆய்வுகளில் Curcumin-(diferuloylmethane) புற்று நோய்க்கு வழங்கப்படும் ஏனைய மருந்துகளின் செயற்பாட்டை பாதிப்பது அறியப்பட்டுள்ளது.

புற்று நோய் எதிர்ப்புக்கு மேலதிகமாக இதய நோய்களில் இருந்து காப்பதிலும், கொலஸ்திரோலின் பாதகமான விளைவுகளை குறைப்பதிலும் பங்காற்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது.முக்கியமாக ஓட்சியேற்ற எதிரியாக செயற்படும் இதன் இயல்பு LDL கொலஸ்திரோல் ஒட்சியேற்றத்தை தடுப்பதன் மூலமே கொலஸ்திரோலின் பதிப்பை தடுப்பதாக சொல்லப்படுகிறது.

http://viriyumsirakukal.blogspot.com/2007/05/blog-post_8400.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)