|
தீபா
|
LCD தான் இப்பொ சர்வசாதாரணமாச்சே.. சில பேர் LCD ன்னு தெரியாமலேயே.. LCD உபகரணங்கள் உபயோகப்படுத்திக்கிட்டு இருப்பீங்க.. Digital Camera , Laptop , LCD-TV, Cellphone, Camcoder. இதிலே ஏதாவது ஒண்ணு உங்க கிட்டே கண்டிப்பா இருக்கும்..User's Manual எடுத்து படிச்சு பாருங்க.. எத்தனை சாமான்லே LCD screen இருக்குன்னு தெளிவா தெரிஞ்சுக்கலாம்...இப்போ ஏன் இதை சொல்லறேன்னு தானே கேகறீங்க... விஷயமிருக்கு
|
LCD Technology ஐ நமக்கு குடுத்த Dr.Pierre Gilles de Gennnes நேற்று 22-May-2007 காலமானர். அவருக்கு 74 வயது.Physics of Liquid Crystals ன்னு ஒரு புத்தகம் கூட எழுதியிருக்கார். இவருடைய இந்த LCd-Technology ன் கண்டுபிடிப்புக்காக 1991 ல் Nobel Prize வழங்கப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பத்தைக் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிஞ்சுக்கறது தான் இவருடைய கண்டுபிடிப்புக்கு நாம் காட்டும் மரியாதைன்னு தொணிச்சு.. அதன் விளைவு தான் இந்த பதிவு
|
|
LCD என்றால் என்ன ?
LCD - Liquid Crystal Display திரவப் படிகக் காட்சி என்பது விரிவாக்கம். Liquid - திரவம்:::::Crystal - படிகம் போன்ற ( திடப் போருள் solid state)... .. ஒண்ணுக்கொண்ணு முரணா இருக்கேன்னு பார்க்கரீங்களா.. அது அப்பிடி தான். இவை பிரத்தியேக இயல்புள்ள பரமாணுக்கள். இந்த இயல்பு தான் நமக்கு வரப்பிரசதமா அமைஞ்சிருக்கு
வெப்பம் - காந்தயீர்ப்பு சக்தி - மின் ஆற்றல் -ஒளியின் தீவிரம்...இவைகளை கோண்டு இந்த பரமாணுக்களின் நிலைய்யை திரவப்பொருள் - திடப்பொருள் அல்லது.. இது ரெண்டுக்கும் இடையே உள்ள நிலையிலே இருக்க செய்யலாம். வெப்பம் அதிகமாகும்போ (laptop ஐ மத்தியானம் 12 மணிக்கு மொட்டமாடிக்கி எடுத்து போய் பாருங்க ).... இவை பெரும்பாலும் திரவவடிவில் இருக்கும்...வெப்பம் குறையும்போ (AC பக்கத்திலே) இவை திடவடிவமாக இருக்கும் இந்த phenomenon ஐ நீங்கள் உங்க laptop - screen லேயே பார்க்கலாம். உன்னிப்பா கவினிச்சீங்கன்ன.
LCD எப்படி வேலை செய்யும் Detailed explanation here
(ரொம்ப டெக்கினிக்கலா இல்லாம சொல்லணும்ன்னு ஆசை... பார்க்கலாம்)
ஒளிக்கதிரை இந்த பிரத்தியேக குணமுள்ள பரமாணுக்கள் நிறைந்த திரவத்தின் வாயிலாக ஊடுருவி கடத்த படுக்கிறது (light is passed through two sheets of polarized material with a liquid crystal solution in between them).அப்போது மின்கதிர்களும் செலுத்த படுவதால்... Liquid Crystal பரமாணுக்கள் அங்கே-இங்கே ஓடாமல் கட்டுக்கோப்பா தம்மைத்தாமே வரிசை படுத்திக்கொள்ளும். பரமாணுவின் வரிசைய்யை பொறுத்து ஓளிக்கதிர் ஊடுருவி நம் கண்களை வந்தடைகிறது
LCD உபகரணங்களை பாதுகாக்கும் / சுத்தப்படுத்தும் முறை
LCD screen உள்ள உபகரணங்கள் ரொம்ப மென்மையானவை.. நம் விரல் நுணியில் இருக்கும் அழுத்தம் கூட தீங்கு விளைவிக்க கூடும் அதனால தான் LCD Screen ஐ விரலால் தொடக்கூடாதுன்னு Salesman சொல்லுவார்...Tissue paper / Toilet paper / Muslin Cloth (அதான் கார் துடைக்க மஞ்ச கலர்லே வாங்குவீங்களே... 1 வாரத்துக்கப்புறம் அது காக்காய் கலர்லே இருக்குமே)..இவை எதுவுமே உபயோகப்படுத்த கூடாது
பழைய cotton handkerchief தான் இதுக்கு உகந்தது... பல முறை துவைத்தால்.. fabric ரொம்ப மிருதுவா இருக்கும். System ஐ OFF செய்து தான் சுத்தப்படுத்தணும்..ஏன்னா.. Black background லே தான் எங்கெல்லாம் அழுக்கு இருக்கு ன்னு தெளிவா தெரியும். அதுமட்டுமில்லை.. keys / buttons ஐ துடைக்கும்போது system ON லெயிருந்தா.. செரிப்பட்டுவராது...
குழாய் தண்ணி - மினரல் வாட்டர் இது எல்லாமே தடா... ஓன்லி Distilled Water. கூடவே Vinegar அல்லது IsoPropyl Alcohol ம் வேணும்.
CLEANING SOLUTION:-Vinegar அல்லது IsoPropyl Alcohol ஐ Distilled water டன் 1:1 என்ற விகிததில் கலக்கி வச்சுக்கணும்.
துணியை (Old-cotton- handkerchief ) லேசாக CLEANING SOLUTION நனைத்துக்கொள்ளணும். அதிகமா நனைஞ்சிடுத்துன்னா நல்லா பிழிஞ்சிக்கணும்... மொத்தத்திலே துணியிலிருந்து CLEANING SOLUTION சொட்டக்கூடாது.
CLEANING DIRECTION :- மேலிருந்து- கீழ் ::: இடமிலிருந்து - வலம் ... இப்படி ஏதாவது ஒரு திசையிலே தான் துடைக்கணும். சின்னப்பசங்க மண்ணுலே விளையாடரமாதிரி ரவுண்ட்-ரவுண்டா எல்லாம் துடைக்கப்படாது.
என்ன சூப்பரா துடைச்சாசா.. என்ன Laptop ஐ மூட போறீங்களா... கொஞ்சம் பொறுங்கப்பா.. screen நல்லா காஞ்சப்புரம் மூடலாம்... இந்தா...காஞ்சாச்சான்னு விரல்லாலே தொட்டா பார்க்கரீங்க.... இப்போ தானே சொன்னேன்...நம் விரல் நுணியில் இருக்கும் அழுத்தம் கூட தீங்கு விளைவிக்க கூடும்..மறுபடியும் முதலிருந்து படிங்க...
|