இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
வாங்க-ஆங்ஞான் Print E-mail
வெயிலான்   

river_tamirabarani.jpg

திருநெல்வேலி வட்டார மக்கள், அவர்களுக்கு மட்டும் புரியக்கூடிய நிறைய சொற்களை பேச்சு வழக்கில் உபயோகப்படுத்துவார்கள்.

நிறைய சொற்களை அந்த வட்டார எழுத்தாளர்கள் (வண்ணநிலவன், வண்ணதாசன் மற்றும் கி.ரா கூட) தங்களின் கதைகளில் கூட இயல்பாக பயன்படுத்தியிருப்பார்கள்.

என் அம்மா, திருநெல்வேலி மாவட்டம் என்பதால் என் வீட்டிலும் நிறைய புழக்கத்தில் இருக்கும். 

சில சொற்கள் மறந்தும், மறைந்தும் போய்விட்டன. 

என் நினைவில் இருக்கும் சில மட்டும் இங்கே.

மச்சு வீடு - இருட்டடைந்த சிறு அறை, பணம், நகை, போன்ற விலை உயர்ந்த பொருள்கள் இருக்கும்.

தார்சா - வீட்டின் முன் அறை.

அங்கனக்குழி - குளிக்க பயன்படுத்தும் அல்லது தண்ணீர் புழங்கும் இடம்.

சொதி - தேங்காய் பாலில் செய்யப்படும் ஒரு வகை குழம்பு. (திரு.சயந்தனும் சோமியும் இதைப்பற்றி தனி ஒலிப்பதிவே பதித்திருக்கிறார்கள்).  ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் பெருவாரியான சொற்கள் திலி  வட்டார வழக்காகவே இருக்கும்.

திலி திருமணங்களின் ரெண்டாவது அ மூன்றாவது நாள் உணவில் “சொதி” கண்டிப்பாக உண்டு.

மீந்து விட்ட கல்யாண தேங்காய்களை காலி செய்ய வேண்டும் என்பதால் கூட இருக்குமோ!

சின்னம்மை - தாயாரின் இளைய சகோதரி, சின்னம்மா. 

வரிசையார் - பெண்கள் தங்கள் அண்ணனின் மனைவியை இப்படி அழைப்பார்கள். 

அத்தபிள்ள - தம்பிகள் தங்கள் அக்கா மாப்பிள்ளையை விளிக்கும் சொல். 

ஆங்ஞான் - தங்கள் செல்லப்பையன்களையும், வயதான ஆண்களையும் கூட இப்படித்தான் கூப்பிடுவார்கள் (இந்த சொல்லுக்கு எழுத்து வடிவம் கொண்டுவருவதற்குள் திணறிவிட்டேன்).

திருநெல்வேலி மக்கா யாரும் எதுனா தப்பு இருந்தா சொல்லுங்க! திருத்திக்கிடுதேன்!

அப்புறம் வேற ஏதாவது விட்டுப் போனது இருந்தாலும் சொல்லுங்க!

தாமிரபரணி ஆறு படத்துக்காக - திரு.சத்யன் சுகுமாரனுக்கு நன்றி.

 

http://veyilaan.wordpress.com/2007/05/29/

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)