இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சொன்னா கேளுங்கடே!... Print E-mail
ஆசிப் மீரான்   

இன்று புகையொழிப்பு நாள். துபாயில் இன்று முதல் புகை பிடிப்பவர்களுக்கு வயிற்றெரிச்சலையும், புகை பிடிக்காதவர்களுக்கு ஆறுதலையும் தரும் விதத்தில் புகையொழிப்பு சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. ஏற்கெனவே அரசு அலுவலகங்கள், விமான நிலையம் ஆகியவற்றை 'புகை இல்லாத இடமாக' அறிவித்து விட்டது துபாய். அதன் அடுத்த கட்டமாக, 2009 க்குள் புகையிலை இல்லாத மண்டலமாக துபாயை மாற்றும் முயற்சிக்கான பணிகளில் துபாய் அரசு முனைப்பாக ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியதுதான்.

புகையிலை உபயோகிப்பாளர்களின் பட்டியலில் சீனா முதலிடத்தையும் (2.38 பில்லியன் கிலோ) இந்தியா இரண்டாமிடத்தையும், அமெரிக்கா மூன்றாமிடத்தையும், பிரேசில், ஜப்பான் ஆகியவை முறையே நான்காம் ஐந்தாம் இடங்களையும் பெற்றிருக்கின்றன. இந்தப்பட்டியலில் இடம் பெறாமல் இருப்பதற்கான முயற்சியாகத்தான் அமீரகத்தில் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது. புகை தடுப்பு தொடர்பான முழுமையான சட்டம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லையெனினும் அதற்கான முழுவீச்சில் அரசு முனைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி, ஒரு சிகரெட்டில் சுமார் 4000 வேதிப்பொருட்கள் இருக்கிறதாம். இவற்றில் சுமார் 50 வேதிப் பொருட்களாவது புற்றுநோயை வரவேற்கும் காரணிகளாக செயல்படுகின்றனவாம். அசிட்டோன், அம்மோனியா, மெந்தால், நிகோடின், நாப்தலின், காட்மியம், வினைல் குளோரைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்றவை யெல்லாம் சிகரெட்டின் உடன்பிறப்புகள்.

வேடிக்கை என்னவென்றால் 6.5 நொடிக்கொருவர் புகையிலை உபயோகத்தால் மரணத்தைத் தழுவுகிறார்கள். தங்கள் பதின்ம வயதில் புகைக்கத் துவங்கி இருபதாண்டுகளாக புகைப்பவர்கள் வாழ்நாளில் சுமாராக 20 வயதை இழக்கிறார்கள் என்றும் கணக்குகள் சொல்கின்றன. புற்று நோய் தவிர்த்தால் புகை பிடிப்பதன் மூலம் நமக்கு இலவசமாகக் கிடைக்கும் நோய்கள் வரிசையில் மலட்டுத்தன்மை, அல்சர், கண்பார்வைக் குறைபாடுகள்,பல் தொடர்பான நோய்கள், இதய நோய்கள் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. இது இல்லாமல் வரக்கூடிய பின் விளைவுகளை நாம் இப்போதைக்குப் பட்டியலிட வேண்டாம்.

மது அருந்துவது, விபச்சாரம் செய்வது இவையெல்லாவற்றையும் விட மோசமான பழக்கம் உண்டென்றால் அது புகைபிடிப்பது மட்டும்தான். மற்றவைகளிலாவது சம்பந்தப்பட்டவ்ர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.ஆனால், புகையை உள்ளிழுப்பவனை விட அதை வெளியிடும்போது அதை உள்வாங்குபவனுக்குத்தான் பாதிப்பு அதிகமென்பதால் புகை பிடிப்பதைத் தடுக்கும் முயற்சிகள் உலக சுகாதார அமைப்பின் சார்பில் வெகு தீவிரமாக
முன்னெடுத்துச் செல்லப்பட்டபோதும் கூட அரசுகளின் மெத்தன்ப் போக்குகள், கோடிகோடியாய் பணம் சம்பாதிக்கும் புகையிலை நிறுவனங்கள், புகையை விட முடியாத மூடர்களின் பிடிவாதம் இவற்றால் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவில்லாமல் மிகுந்து கொண்டே போகிறது.

இருந்தும் புகை பிடிப்பதால் ஏற்படும் அதீதமான பின்விளைவுகள் குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. புகை பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருமென்று தெரிந்தும் 'வரும்போது பார்க்கலாம்' என்ற மனப்பான்மையிலேயே சிலர் தொடர்வது ஒருபுறமென்றால்புகையை விட்டாக வேண்டும் என்று நினைத்தும் விடமுடியாமல் அவதிப்படுவோர் பலர்.

ஆரம்ப கால கட்டங்களில் பிறரின் கவன ஈர்ப்புக்காகத் துவங்கும் இந்தப் பழக்கம் பின்னர் கைவிடப்படமுடியாத அளவுக்கு வளர்ந்து விடுவதுதான் மிகப்பெரும் சோகம்.இந்தச் சூழலில் இருந்து விடுபடுவதென்பது கடினமான ஒன்றுதான் என்றாலும் ஒட்டுமொத்தமாக முடியாத காரியமென்று சொல்ல முடியாது. சிரமம்தான். ஆனாலும் முற்றிலுமாக புகை பிடிப்பதிலிருந்து விடுபடமுடியுமென்று நிருப்பித்த மனவலிமையுள்ளவர்கள் இன்னமும்
நம்மிடையே இருக்கிறார்கள். பிரசவ வைராக்கியம் போல இனி முதல் பிடிப்பதில்லை எனச் சூளுரைத்து கொஞ்ச நாளிலேயே முன்னை விட அதிகமாக ஊதித் தள்ளுபவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

நம்மால் முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே புகையை விட்டுத்தள்ள ஆதாரம். கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன் என்பதெல்லாம் 'போகாத ஊருக்கு வழி கேட்பது போல'த்தான். புகை பிடிக்கும் வழக்கத்தை நிறுத்தியேயாக வேண்டுமென தீர்மானித்து விட்டால், சில விதயங்களை முறைப்படுத்துவது நல்லது.

சிகரெட் பிடிக்க வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் அதை ஒரு மணி நேரமாவது தள்ளிப் போடுங்கள்.

பெட்டியில் சிகரெட் வாங்குவதையோ, அல்லது மொத்தமாக சிகரெட் வாங்குவதையோ தவிர்த்து ஒரு சிகரெட்டை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். அது தீர்ந்ததுமே அடுத்ததைப் பற்ற வைக்கக் கூடிய வாய்ப்பு இருக்கக் கூடாதென்று பொருள்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் வேண்டியவர்கள் எல்லாரிடமும் 'புகைப்பதை விட்டுவிட்டேன்' என்று சொல்லி வையுங்கள். 'இனி புகைத்தால் செருப்பால் அடியுங்கள்' என்று கொஞ்சம் மிகையாகவும் சொல்லி வைத்தால் நல்லதுதான் :-)))

புகைபிடிக்கும் நண்பர்களை விட்டு விலகி புகைபிடிக்காத என்னைப் போன்ற நல்லவர்களோடு :-) நேரத்தைச் செலவழியுங்கள்

சாம்பல் கிண்ணத்தை (ash tray) உங்கள் பக்கத்திலேயே சேர்த்துக்கொள்ளாதீர்கள்

முதல் ஐந்து நிமிடங்கள் மிக மிக அரிப்பானதாகத்தான் இருக்கும். உடனே சிகரெட்டால் சொறிந்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் இழுத்துவிடும் புகையால் இன்னொரு சகமனிதன் தேவையில்லாமல் பாதிக்கப்படுகிறான் என்பதை கொஞ்சம் நினைவில் வையுங்கள்.

நீங்கள் சிகரெடுக்குச் செலவழிக்கும் தொகையில் ஒரு ஏழைப் பையனுக்குப் புத்தகமோ பேனாவோ வாங்க முடியும் என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

பணம் செலவழித்து உடலைக் கெடுக்கும் இந்த புகை பழக்கம் அவசியமானதுதானா என்பதை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

இவையெல்லாம் சில குறிப்புகள்தான். இதையும் மீறி 'நான் புகைபிடித்துத்தான் ஆவேன்' என்று அடம் பிடித்தால் வேறென்ன சொல்ல?!!'நல்லா இருங்கடே!'

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)