34வது இலக்கியச்சந்திப்பு - பெர்லின் ஜேர்மனி
34வது இலக்கியச்சந்திப்பு
பேர்லின், ஜேர்மனி.
ஜூன் 9-10, 2007.
புகலிடத் தமிழர்களின் இலக்கிய நிகழ்வான இலக்கியச் சந்திப்பு, பத்தொன்பதாவது ஆண்டில் காலடி பதிக்கின்றது. இதன் 34வது தொடர் ஜேர்மனி, பேர்லின் நகரில் 2007 ஜூன் மாதம் 9, 10 திகதிகளில் நடைபெறும்.
இலக்கிய ஆவலர்களை இச்சந்திப்பில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சிகள்
09-06-2007 சனிக்கிழமை.
08:30 மணி: காலை உணவு ... பதிவு செய்தல்.
09:00 மணி: வரவேற்புரை, சுய அறிமுகம்.
09:30 மணி: பிரதீபனின் புகைப்படக் கண்காட்சி. புகைப்படங்கள் பற்றிய ஓர் அறிமுகம்.
09.45 மணி: புகலிடச் சஞ்சிகைகள் விமர்சனம்.(உயிர்நிழல், தேசம், உயிர்மெய், இனி...)
10.30 மணி: புத்தக விமர்சனம் - மன்டோவின் கதைகள்
11.00 மணி: போரினால் பெண்கள், குழந்தைகள் மீது ஏற்படும் தாக்கங்கள்
12:30 மணி: தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு
13:30 மணி: மதிய இடைவேளை
14:30 மணி: 1967 அக்டோபர் 21. எழுச்சியும் வீழ்ச்சியும்.
15:30 மணி: புகலிடத்தின் இரண்டாவது தலைமுறையினரின் நிகழ்ச்சி:
1. புகலிடத்தில் அடையாளத் தேடலும் தமிழச்சமூகமும்.
2. இளைஞர் நிகழ்ச்சி.
18:30 மணி: கவிதா நிகழ்வு.
20.30 மணி: முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு.
10-06.2007 ஞாயிறு
08:30 மணி: காலை உணவு. புதிய பதிவுகள்.
09:00 மணி: பிரதீபனின் புகைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள்.
09:30 மணி; இலங்கையின் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுகள் பற்றிய கலந்துரையாடல்.
1. இதுவரை இலங்கையிலிருந்த யாப்புக்களும் அவை மீதான விமர்சனங்களும்.
2. இதுவரை முன்மொழியப்பட்ட தீர்வுகளும் அவற்றின் விபரங்களும்.
3. தற்போதைய சர்வகட்சிப் பிரதிநிதிகள் மகாநாட்டில் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுகள்.
4. கலந்துரையாடல ;
13:00 மணி: மதிய இடைவேளை
14;00 மணி: நியாயமான தீர்வு எப்படி அமைய வேண்டும்
கலந்துரையாடல்.
தீர்மானம்.
17:00 மணி: அடுத்த இலக்கியச்சந்திப்பு, மற்றைய விடயங்கள்.
17:30 மணி: நிகழ்ச்சிகள் நிறைவு.
பங்குகொள்பவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம்: 15 யுரொ. (மாணவர்கள்: 10 யுரொ.)
இலக்கியச்சந்திப்பில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழ்க் காணும் தொலைபேசி
அல்லது இ-மெயில் விலாசத்துதுடன் தொடர்பு கொள்ளவும்.
வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் பிரயாண விபரங்கள் மற்றும் தங்குமிட
வசதிகள் தேவை என்பன பற்றிய விபரங்களை தயவு செய்து முன்கூட்டியே
அறியத்தரவும். (முடியுமானால் படுக்கை உறைகளைக் கொண்டு வருவதும்
நல்லது.)
களம்:
களம்:Werkstatt der Kulturen
Wissmannstrasse 32
12049 Berlin.
தொடர்பு:
தொலைபேசி: 0049 30 62987883, 0049 30 3318136.
மின்னஞ்சல்:
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
&
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it
(இந் நிகழ்ச்சி நிரல் தற்காலிகமானது. மாற்றங்கள் ஏற்படச் சாத்தியங்கள் உண்டு.)
தகவல்: பொ. கருணாகரமூர்த்தி
============
பேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்
வெங்கட்
புலம்பெயர் வாழ் வல்வெட்டித்துறை மக்களின் ஆதரவில்
காலம் சஞ்சிகையின்
பேராசிரியன்
பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்
தலைமை பேராசிரியர் செல்வா கனகநாயகம்
சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்)
இடம்: ஸ்காபறோ சிவிக் சென்றர், டொராண்டோ,
ஜூன் 9 2007 மாலை 5;.30
- சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும்
- சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில்
- மாலை 3:00 மணி தொடக்கம் வாழும் தமிழ்: புத்தகக் கண்காட்சி
- - மாலை 4:00 மணிக்கு நாடகம் உடலங்களின் எண்ணிக்கை : நடிப்பு நெறியாள்கை அ.மங்கை
|
http://domesticatedonion.net/tamil/?p=687
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில், வரும் ஜூன் 9ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு " சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் - நேற்று, இன்று, நாளை " என்ற தலைப்பில் கருத்தரங்கமும், கலந்துரையாடலும் நடைபெறுகிறது.
சிங்கப்பூர், மலேசியாவின் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய ஆதரவில், சிங்கைத் தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்வு பாலு மீடியாவால் ஒருங்கிணைக்கப் படுகிறது.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றி ஒலி 96.8 செய்திப்பிரிவின் மூத்த செய்தி ஆசிரியர் செ.ப.பன்னீர்செல்வம், தேசிய கல்விக்கழகத்தின் முனைவர் சீதாலட்சுமி, எழுத்தாளர் சுப்பிரமணியன் ரமேஷ் ஆகியோர் கட்டுரை படைக்கிறார்கள்.
தமிழ் உலகம் நன்கறிந்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது, மலேயாப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷணன் மணியம், மலேசியாவின் புகழ் பெற்ற வார இதழான "தென்றலின்" ஆசிரியர் வித்யாசாகர் போன்றோர் மலேசிய இலக்கிய சூழல் பற்றிய செய்திகளை சிங்கப்பூர் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
வாசகர்கள் - எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு டாக்டர் சுப.திண்ணப்பனும், சிங்கப்பூர் சித்தார்த்தனும் தலைமை வகிக்க கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ கலந்துரையாடலை வழி நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். மேல் விவரம் வேண்டுவோர் பாலு மணிமாறனோடு 90753234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
http://singaimurasu.blogspot.com/2007/05/blog-post_29.html