இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
சமையல்கட்டு அறிமுகங்கள் Print E-mail
மு.கார்த்திகேயன்   

நான் ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்த சமயம். முதல் இரண்டு வாரங்கள் நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை..ரயிலில் ஏறுவதும் திண்டுக்கல் மதுரை ரயில் போகும் வழித்தடங்கள் எல்லாமே எனக்கு புதியது என்பதால் அதை வேடிக்கை பார்ப்பதுவுமாகவே இருந்தேன். சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகள் எப்பவுமே பச்சை பெயிண்டை கொட்டிவிட்டாற்போல தான் தரையெல்லாம் நெற்கதிர்கள் பரந்து விரிந்து கிடக்கும். ஜன்னல் அருகிலோ இல்லை வாசலிலோ இருந்தால் அந்த நெற்கதிர்களை தொட்டு வரும் வாசம் இதயம் தொடும் போதெல்லாம் அப்படியொரு சிலிர்ப்பு உடம்பில் இருக்கும்.

நான் சென்று வந்த ரயில், தினமும் மதுரை-திண்டுக்கலுக்கு இடையே பயணிப்பது, காலையில் ஏழு மணிக்கும் மாலையில் ஏழு மணிக்கும், வேலைக்கு சென்று வருபவர்களுக்கு ஏதுவாக. அதனால் பயணிகள் எல்லோருமே தினமும் வருபவர்கள் தான். மற்ற ரயில்களைப் போல, நிஜ ரயில் பயணங்கள் அல்ல இது. மெல்ல நண்பர்கள் எனக்கும் அறிமுகமாகி, எண்ணிக்கையில் அதிகமானார்கள்.. எனக்கு பள்ளியில் ஜுனியராக இருந்த ஒரு பையனின் நட்பு கிடைத்தது எனக்கு. அருண் - அவன் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கேட்டரிங் வகுப்பு படித்து வந்தான்.

வாரத்திற்கு இருமுறை அவன் வகுப்பில், செய்முறை பயிற்சியில் செய்த உணவுகளை எடுத்து வருவான், ரயிலுக்கு, எங்களுக்காக. அது அப்போது எங்களது மாலை வேளை ஸ்நாக்ஸாக இருந்தது.. நெய் வடிய வடிய பொங்கலும், மொறுமொறுப்பாக வெளியில் பிரட் தூள்கள் தூவப்பட்ட கட்லெட்டும், நாவில் எச்சில் ஊறவைக்கும் கேரட் அல்வாவும் என தினமும் அவன் செய்து எடுத்து வரும் உணவு பதார்த்தங்களுக்கு எங்கள் ரயில் குரூப்பே அடிமை. அதுவும் அந்த டிபன் பாக்ஸை முதலில் திறப்பவர் அதிர்ஷ்டசாலி. நிறைய சாப்பிடலாம் அல்லவா.. நான் இதற்காகவே எனது கல்லூரி நண்பனின் வண்டியில் ஏறி மதுரை ஜங்க்ஷனுக்கு வேகமாக வந்த காலங்கள் எல்லாம் உண்டு..

அந்த எனது ரயில் ஸ்நேகிதன் தான் சமையல் என்னும் கலையில் எனக்கு ஆர்வத்தை தூண்டியவன். அதுவரை சமையற்கட்டில், என்ன செய்கிறார்கள் என்று எட்டி பார்க்கவே சென்று வந்த நான் அதன் பிறகு எப்படி செய்கிறார்கள் என்று உற்று நோக்க ஆரம்பித்தேன். அருண், அன்றைக்கு செய்து எடுத்து வந்த பதார்த்தங்களை எல்லாம் எப்படி செய்தான் என்று கவனமாக கேட்டு தெரிந்துகொள்வேன். நேரம் கிடைக்கும் போது வீட்டில் அதை செய்து பார்த்து எல்லோரையும் துன்புறுத்துவேன்.. நான் சமையலறைக்குள் நுழைந்தாலே, நான் அன்றைக்கு விரதம் என்று என் தங்கச்சி சொல்லிவிடுவாள்.. (அப்படி சொன்ன என் தங்கை ஒரு முறை சென்னைக்கு தனது தோழியுடன் இன்டர்வியூவிற்கு வந்த போது, பொடி தோசை, நெய் தோசை, மசால் தோசை, வென்காய தோசை னு போட்டு அமர்களப்படுத்தினதுல, என் சமையலை எல்லோருக்கும் போன் போட்டு சொன்னாள், அசத்தல் என்று) ஒன்னும் சரியாக தெரியாத அந்த காலங்களில் உப்பை இனிப்பில் போட்டுவிட்டு, எல்லோரையும் கேரட் அல்வா சாப்பிடச் சொல்லி ஆர்பாட்டம் பண்ணுவேன்.

இப்போதெல்லாம் சன் டிவி இரவு நேர செய்திகளில் ஒரு பகுதி வருகிறது. திருப்பம்ங்கிற தலைப்புல. அது மாதிரி நான் இப்போ இப்படி சமைக்கிறேன்னா அது அன்னைக்கு நான் அருணை சந்தித்ததும் அவன் எனக்கு சொல்லி சொல்லி, சமையல் ஆர்வத்தை தூண்டி விட்டதும் தான். அதன் பிறகு சென்னையில் வேலை செய்ய வந்த பிறகு தட்டு தடுமாறி ஒவ்வொரு வகையையும் தெரிந்து கொண்டாலும், இன்றைக்கு கார்த்தி செஞ்சா எல்லாமே சூப்பர் தான் என்று எல்லோரும் சொல்வதுமாக இருந்தாலும், எல்லாமே அன்றைக்கு எனக்குள் அருண் போட்டு வைத்த விதை தான். எப்படி நமக்கு, கூடவே ஓடி வந்து சைக்கிள் சொல்லித் தந்தவரை மறக்கமுடியாதோ, எனக்கு அப்படி அருணை மறக்க முடியாது. கல்லூரி முடித்து சென்னை வந்த பிறகு ஒரு நாள் தொடர்புகொள்ள முயற்சித்தேன்.. அருணை தொடர்பு கொள்ளமுடியவில்லை.. அப்புறம் அவனது பள்ளி நண்பன் ஒருவன் சொன்னான், அவன் சென்னை சோழா ஷெரட்டனில் வேலை பார்ப்பதாக.. செய்தியை கேட்டவுடன் சந்தோசமாக இருந்தது. அவன் இருக்க வேண்டிய இடம் அது தான் என்று..

நமது வாழ்க்கையில் வந்து சிறிய காலங்களே இருந்தாலும், இது மாதிரி நம்மளை புரட்டி போட்ட மனிதர்கள் பலர்.. எனது வாழ்கையில் எனக்கு சமையலை கற்றுக்கொடுத்து, இப்போது இது போன்ற தனியாக வாழும் காலங்களில் கை கொடுக்கவைத்த அருணும் அவர்களில் ஒரு ஆள்..

எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாதோ, இந்த விஷயம்.. அழகாக தமிழில் விவரிக்கப்பட்டு படங்களுடன் ஒரு தனி தமிழ் வலைப்பக்கமே இருக்கிறது சமையலுக்காக.. கிராமத்து சமையல், செட்டுநாட்டு சமையல் என வட்டார வகைகளும், மாநில வகைகளும் என அங்கிருக்கும் பட்டியல் ஏராளம். புதியதாக முயற்சிக்க வேண்டுமென்றால், இங்கே சென்று பார்க்கலாம். அந்த வலைப்பக்கம் பெயர் அறுசுவை

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)