இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து Print E-mail
ஆசிரியர்குழு   

தமிழீழப் பகுதிகளிலிருந்து தலைநகர் கொழும்புக்கு வரும் தமிழர்கள் இனி அங்குத் தங்கக்கூடாது என்கிற வகையில் இலங்கை அரசு எடுத்துள்ள தமிழர் வெளியேற்ற நடவடிக்கையின் மூலம் அது தன் முகமூடியைக் கழற்றிச் சிங்களப் பேரினவாத முகத்தை முழுமையாக காட்டியிருக்கிறது. இப்பொழுதும் வழக்கம் போல் உலகநாடுகள் வெற்றுக் கண்டனங்களையும் முதலைக்கண்ணீரையுமே பதிலாக அளித்து புலிகள் அமைப்புக்கெதிராக மட்டும் தங்களுடைய செயல்பாடுகளைக் குறுக்கிக் கொள்ளப் போகின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும்.

இந்த இதழில் பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இரண்டு பதிவுகள் கவனத்தைப் பெறுகின்றன. ஒன்று, பதிவர் மயூரன் மொழி பெயர்த்து வழங்கியுள்ள "மரியா எனப்பட்ட மேரி" என்ற சிங்களச் சிறுகதை; மூலக் கதையின் ஆசிரியர் ஞ்சுள வெடிவர்த்தன இக்கதையின் மூலம் நிறுவனப்பட்ட கிறித்துவ மதத்திலுள்ள மூட நம்பிக்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார். மனித வரலாற்றில் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் அனைத்துமே ஆண்களின் உடற்குறைகளைக்கூட மறைத்து அவற்றைப் பெண்களின் குறைகளாகத் திரித்து தண்டித்தும் ஏமாற்றியும் வந்திருக்கின்றன. இறைநம்பிக்கை, பக்தி என்ற பெயர்களில் ஒடுக்கப்பட்ட மரியா தன்மீதான தளையை உடைத்தெறிக் கதாசிரியர் தேர்ந்தெடுத்த வழி அதிர்ச்சியானது மட்டுமல்லாமல் முள்ளை முள்ளால் எடுப்பதாகவும் உள்ளது. புராணங்களின்படி இந்துமதம் இன்னொரு படி மேலே போய் இந்த வழியையும் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு அளித்து கடவுளே செய்தால் தவறல்ல என்று இன்னொரு கதை புனனந்தது என்பது முரண்நகை. அடுத்து, சுகுணா திவாகர் பெண் எழுத்தாளர்களுக்காகச் சில கேள்விகளை முன் வைக்கிறார். இன்று பல தடைகளையும் வசைகளையும் மீறி வெகுஜனத்தளத்தில் எழுதி வரும் பெண் எழுத்தாளர்கள் பலர் எல்லாவிதச் சமூகப்பிரச்னைகளுக்கெதிராகவும் எழுதவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்த வார, பூங்காவில் இரண்டு நிகழ்வுகளைப்பற்றிய பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக அவை இரண்டுமே வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மத்தியில் ஒருங்கிணைக்கப் படுபவை. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (பெட்னா / பேரவை) வருகிற ஜூலை மாதம் தனது இருபதாவது ஆண்டு தமிழர் மாநாட்டை நடத்த இருக்கிறது. அதையொட்டி பேரவை எழுதியுள்ள பதிவுகள் புலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழர்களின் ஒருங்கிணைப்பு வரலாற்றையும் சாதனைகளையும் அழகாக எடுத்துரைக்கிறது. அடுத்து, ரொரண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிய இயல் துறை ஆண்டுதோறும் நடத்தி வரும் தமிழியல் மாநாடு தமிழ் மொழியியல் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்னைகள் பற்றியும் ஆய்வுக் கருத்தரங்குகளை உள்ளடக்கி இருக்கும். இந்த ஆண்டு மாநாட்டைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் டிசே தமிழன் தன் பதிவிலே வழங்கி வருகின்றார்.

கடந்த வார தமிழ்மணம் நட்சத்திரமான சத்யா தமிழ் மொழியின் நவீன வளர்ச்சிக்கு தமிழ் நாடு அரசு எளிதில் செயற்படுத்தக்கூடிய பல யோசனைகளை தமிழக முதல்வருக்குக் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய புத்தக வாசிப்பனுபவங்களையும் சுவைபட எழுதியுள்ளார். இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணியவேண்டிய அவசியத்தைத் தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதியுள்ளார். புதிய பதிவரான செல்வேந்திரன் கொடிவேரி அணை மற்றும் அருவியின் வனப்பை விவரித்துள்ளார்.

காட்சிகளை விழுங்கியபடி சலனமற்று விழித்திருக்கும் ஆற்றின் உட்பரப்பைப் பற்றிய அய்யனாரின் கவிதையும் மரணத்தைப் பற்றிய வா.மணிகண்டனின் கவிதையும் உள்ளன. குறைகுடம் ப்ரசன்னாவின் "ஒரு கொலை நடந்த கதை" என்கிற கவிதை வரலாற்றுக்குப் பின்னே புதைக்கப்பட்ட குருதி படிந்த அத்தியாயங்களை நினைவூட்டுகிறது. வலைப்பதிவில் நல்ல கவிதைகள் எழுதி வரும் டி சே தமிழன் தன்னுடைய முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். " நாடற்றவனின் குறிப்புகள்" என்ற பெயரில் வந்துள்ள அந்த கவிதை நூலின் விபரங்களைத் தன் பதிவிலே தந்து அறிமுகப் படுத்தியுள்ளார். மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமதின் எழுத்துக்களை ப் பற்றிக் குறிப்பிட்டு, மலேசியத்தமிழ் இலக்கியத்தின் ஒரு பக்கத்தை நமக்கு அறியத் தருகிறார் பாலு மணிமாறன். தமிழ் நூல்கள் மற்றும் இதழ்களின் அட்டை வடிவமைப்பின் முக்கியத்துவத்தையும் வரலாற்றையும் சொல்லுகிறார் ஆர். வெங்கடேஷ்.

இணைய உலகில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு எந்த அரசும் நிறுவனமும் இதுவரை உருப்படியாக எதையுமே செய்யாவிடினும், தமிழ் மொழி மேற்கத்திய மொழிகள் பலவற்றுக்கு இணையாகப் பரவலாக இணையத்தில் பாவிக்கப் படுகிறது. அதற்கு முக்கிய காரணம் எத்தனையோ தன்னர்வலர்கள் தங்களுடைய உழைப்பையும் நேரத்தையும் இதற்காகச் செலவிட்டும் அனைத்துத் தமிழர்களின் பயன்பாட்டுக்கு விட்டுச் சென்றிருப்பதுதான். அந்த வழியில் இன்னொரு மைல்கல், பதிவர் ஜெகத் அண்மையில் அறிமுகப்படுத்தி வரும் வேற்று மொழிகளைத் தமிழ்மொழி எழுத்துக்கள் வாயிலாகப் படிக்க உதவும் கருவிகள். வேற்று மொழிகளைப் பேசவும், புரிந்து கொள்ளவுமே தெரிந்து, ஆனால், தமிழ் மொழியை மட்டுமே எழுதவும் வாசிக்கவும் அறிந்தவர்கள் அம்மொழி எழுத்துக்களைத் தமிழ்மொழி வாயிலாகப் படிப்பதற்கான நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர் ஜெகத். ஏற்கனவே இனியன் என்ற கருவி மூலம் மலையாளப் பதிவுகளைத் தமிழில் படிப்பதற்கு வசதிப்படுத்திய அவர் இப்பொழுது மலையாளப்பதிவுகளைத் திரட்டி அவற்றைத் தமிழில் தெரியவைக்கும் மலையருவி என்ற கருவியை உருவாக்கியிருக்கிறார்.

இலங்கையில் தன்னார்வத்தொண்டுப் பணியாளர்கள் கொலை செய்யப் பட்டதையொட்டி மலைநாடான் வெளிப்படுத்தும் மனக்குமுறல் இலங்கை அரசின் கயமைத் தனத்தையும், உலக நாடுகளின் கையாலாகாப் பாசாங்குத்தனத்தையும் சாடுகிறது. வசந்தனின் புதிய ஒலித்தொடர் தமிழீழத்தில் அவர் ஓடியாடித் திரிந்த ஊர்களைப் பற்றிய நினைவு மீட்டலாக அமைகிறது. 750 எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கும் ஒரு கிழவியின் அனுபவத்தின் வாயிலாக அழகாக விவரிக்கிறார் சின்னக்குட்டி.

இவைதவிர வர்த்தகம் பற்றிய தகவல்கள் மற்றும் தேவைகளை பரிமாறிக் கொள்ளும் வர்த்தகம் பதிவு மண்புழு உரம் தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கார்த்திக் என்ற இளைஞரைப் பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் குறிப்பிடுகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கை எழிலைப் பற்றிப் பூரிப்படைந்து ஆர்ப்பாட்டமாக விவரிக்கிறார் வாசுதேவன் லட்சுமணன். இளம் வயதில் நண்பர்களுடன் பழகும் போது விளையாட்டாய் நம்மிடம் சில நல்ல பழக்கங்களும் கலையார்வமும் தொத்திக் கொள்வதுண்டு. அந்த வழியில் ஒரு நண்பனால் சமையற்கலை மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை எளிமையாக விவரிக்கிறார் மு. கார்த்திகேயன். இளவஞ்சியின் ஒளிப்படங்கள் ஸ்காட்லாந்தை அழகாகக் காட்டுகின்றன.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)