இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
நியன்டதாலின் காதல் Print E-mail
மயூரேசன்   

இன்றிலிருந்து சுமார் 28,000 ஆண்டுகள் பின்னோக்கிச் வரலாறு திரும்பிப் பார்க்கின்றது. தற்போதைய பிரான்சு, ஸ்பெயின் இடையில் உள்ள அந்தப் பரந்த சமவெளியில் ஒரு உருவம் நிலை குலைந்து நிலத்தில் குப்புறப் படுத்துக்கிடக்கின்றது.. அதுதான் நம் கதையின் நாயகன். ஒரு நியன்டதால் இனத்தை சேர்ந்த அரைமனிதன். "..ஜீ…!!!!" அந்த உருவத்தின் வாயில் இருந்து அடக்க முடியாத வேதனையுடன் பிளிரல் ஒன்று மேல் எழும்புகின்றது. பின்னர் அது மெல்ல மெல்ல அடங்கி முனகல் ஆகின்றது. அதில் அவன் இயலாமையும், வெறுப்பும், இழப்பும் கலந்து ஒலிக்கின்றது. மார்பில் ஆழமாக ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து குருதி இன்னமும் கசிந்துகொண்டே இருக்கின்றது.

"இது எங்கள் பூமி.. நாங்கள் வேட்டையாடிப் பிழைத்த பூமி.. மந்தைகளையும், குதிரைகளையும், மான்களையும் நாம் வேட்டையாடிய பூமி. இடையில் வந்தவர்கள் எம்மை அழிப்பதா?" அவன் மனது பதைபதைத்தது. வேதனை மிகுதியில் மெல்ல மெல்ல வார்த்தைகள் அடங்கி அரை மயக்கத்தின் பிடியில் மாட்டிவிடுகின்றான். நினைவுகள் மெல்ல மெல்ல சுழல்கின்றன.

இது எங்கள் பூமி.. நாங்கள் வேட்டையாடிப் பிழைத்த பூமி.. மந்தைகளையும், குதிரைகளையும், மான்களையும் நாம் வேட்டையாடிய பூமி. இடையில் வந்தவர்கள் எம்மை அழிப்பதா?" அவன் மனது பதைபதைத்தது. வேதனை மிகுதியில் மெல்ல மெல்ல வார்த்தைகள் அடங்கி அரை மயக்கத்தின் பிடியில் மாட்டிவிடுகின்றான். நினைவுகள் மெல்ல மெல்ல சுழல்கின்றன.பச்சிளம் புல்வெளியினூடே அழகிய நியன்டதால் மங்கை ஓடிவருகின்றாள். கையிலே அன்றலர்ந்த சூரியகாந்திப் பூ. அவள் முகத்தின் முன்னே அந்தச் சூரிய காந்திப்பூ களையிளந்துவிடுகின்றது. அவள் கூந்தல் காற்றிலே அங்குமிங்குமாய் அலைபாய்ந்துகொண்டு இருந்தது. அலை பாயும் அந்தக் கூந்தல் அவளுக்கு மேலும் அழகு சேர்ப்பதை கா தன் கண்களால் இரசித்துச் சிரித்துக் கொண்டு இருந்தான்.

"ஏய்.. கா..!!! என்ன?" கண்களால் தன் காதலனைப் பார்த்து கேள்வி கேட்டாள் ஜீ. ஏக்கமும் ஏளனமும் அவள் கண்களில் தெறிப்பதை புரியாதது போல புன்னகை பூத்தான் கா.

ஏய்.. கா..!!! என்ன?" கண்களால் தன் காதலனைப் பார்த்து கேள்வி கேட்டாள் ஜீ. ஏக்கமும் ஏளனமும் அவள் கண்களில் தெறிப்பதை புரியாதது போல புன்னகை பூத்தான் கா.

இவர்கள் இருவரும் இந்த சமவெளியில்தான் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். இருவரும் வெவ்வேறு நியன்டதால் குழுவைச் சேர்ந்தவர்கள். காதல் யாரைத்தான் விட்டது. குழு குழுவாக பரந்த நிலப்பரப்பினூடே இரையைத் தேடி அலைந்து திரிந்த நியன்டதால் மக்கள் இடையிடையே சந்தித்து உறவு பாராட்டுவதும் மோதிக்கொள்வதும் இந்தப் பகுதியில் சர்வசாதாரணமாக நடந்துவருகின்றது. ஜீயைச் சந்தித்த கா அவளைக் கவர்ந்து வந்து தன்னுடைய குழுவுடன் சேர்த்துக்கொண்டான். அத்துடன் குழுவில் உள்ள மற்ற ஆண்கள் யாரும் அவளை அண்டாமல் கவனமாகவும் கவனித்துக்கொண்டான்.

இருவரும் இந்த சமவெளியில்தான் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். இருவரும் வெவ்வேறு நியன்டதால் குழுவைச் சேர்ந்தவர்கள். காதல் யாரைத்தான் விட்டது. குழு குழுவாக பரந்த நிலப்பரப்பினூடே இரையைத் தேடி அலைந்து திரிந்த நியன்டதால் மக்கள் இடையிடையே சந்தித்து உறவு பாராட்டுவதும் மோதிக்கொள்வதும் இந்தப் பகுதியில் சர்வசாதாரணமாக நடந்துவருகின்றது. ஜீயைச் சந்தித்த கா அவளைக் கவர்ந்து வந்து தன்னுடைய குழுவுடன் சேர்த்துக்கொண்டான். அத்துடன் குழுவில் உள்ள மற்ற ஆண்கள் யாரும் அவளை அண்டாமல் கவனமாகவும் கவனித்துக்கொண்டான்.

சில காலங்கள் இருவரும் எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தனர். ஆனாலும் இவர்கள் சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

காலங்கள் இருவரும் எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தனர். ஆனாலும் இவர்கள் சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

கா ஒரு நாள் காலை தன் குழுவுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். தான் கடைசியாகத் தங்கியிருந்த குகையில் ஜீ மற்றும் ஏனைய நங்கைகளை விட்டுவிட்டு கா தன் கூட்டத்துடன் வேட்டைக்குப் புறப்பட்டான். அவன் கையில் மரப் பிடியுடன் அமைந்த கோடாலி இருந்தது. கோடாலியின் வெட்டும் பகுதி கல்லினால் செய்யப்பட்டிருந்தது. அதே போல அவன் நண்பர்கள் ஈட்டி போன்ற அமைப்பைத் தம் கையில் வைத்திருந்தனர்.

ஒரு நாள் காலை தன் குழுவுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். தான் கடைசியாகத் தங்கியிருந்த குகையில் ஜீ மற்றும் ஏனைய நங்கைகளை விட்டுவிட்டு கா தன் கூட்டத்துடன் வேட்டைக்குப் புறப்பட்டான். அவன் கையில் மரப் பிடியுடன் அமைந்த கோடாலி இருந்தது. கோடாலியின் வெட்டும் பகுதி கல்லினால் செய்யப்பட்டிருந்தது. அதே போல அவன் நண்பர்கள் ஈட்டி போன்ற அமைப்பைத் தம் கையில் வைத்திருந்தனர்.நேற்று இவர்கள் வேட்டையாடிய காட்டு எருமையின் எலும்புகள் குகை வாயிலில் கிடந்தது. அவற்றை ஒரு தடவை பார்த்து சிரித்துக்கொண்ட கா சத்தமிட்டு தன் நண்பர்களுடன் பேசத் தொடங்கினான். வார்த்தைகளை விட அங்கங்களே அதிகமாகப் பேசின.

"நேற்று காட்டு எருமை, இன்று மான் அல்லது குதிரையை வேட்டையாட வேண்டும்" அவன் பேச்சின் பின்னர் எல்லோரும் தம் கையில் இருந்த ஆயுதங்களை உயர்த்தி சத்தம் இட்டனர்.

நேற்று காட்டு எருமை, இன்று மான் அல்லது குதிரையை வேட்டையாட வேண்டும்" அவன் பேச்சின் பின்னர் எல்லோரும் தம் கையில் இருந்த ஆயுதங்களை உயர்த்தி சத்தம் இட்டனர்.

பின்னே திரும்பிய கா தன் அருமை ஜீயைப் பார்த்து தீ மூட்டத் தயாராகுமாறு கூறிவிட்டுச் செல்லத் தொடங்கினான். அன்றுதான் கா தன் வாழ்க்கையில் முதல் தடவையாக அந்த வித்தியாசமான விலங்குகளைக் கூட்டமாகப் பார்த்தான். தன்னைப் போலவே உருவமாக இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் முகங்கள் தட்டையாக இருந்தது. உயரத்திலே கொஞ்சம் அதிக உயரமாக இருந்தார்கள்.

திரும்பிய கா தன் அருமை ஜீயைப் பார்த்து தீ மூட்டத் தயாராகுமாறு கூறிவிட்டுச் செல்லத் தொடங்கினான். அன்றுதான் கா தன் வாழ்க்கையில் முதல் தடவையாக அந்த வித்தியாசமான விலங்குகளைக் கூட்டமாகப் பார்த்தான். தன்னைப் போலவே உருவமாக இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் முகங்கள் தட்டையாக இருந்தது. உயரத்திலே கொஞ்சம் அதிக உயரமாக இருந்தார்கள்.

யார் இவர்கள்? எம் பூமியில் இவர்களுக்கு என்ன வேலை?. காவின் மூளையைக் கேள்விகள் துளைக்கத் தொடங்கின. உடனடியாக அவர்களைத் தாக்குவது என்று கா முடிவு செய்தான். தன் கூட்டத்தினருக்கு சைகையால் பதில் சொல்லிவிட்டு எல்லோரும் "ஓ….!!!!!!!!!!!!!!!!!!!!!!" என்று கூக்குரல் இட்டவாறே தங்கள் பூமியுள் புதிதாக கண்ட அந்த விலங்குகளை நோக்கி ஓடத் தொடங்கினர்.

இவர்கள்? எம் பூமியில் இவர்களுக்கு என்ன வேலை?. காவின் மூளையைக் கேள்விகள் துளைக்கத் தொடங்கின. உடனடியாக அவர்களைத் தாக்குவது என்று கா முடிவு செய்தான். தன் கூட்டத்தினருக்கு சைகையால் பதில் சொல்லிவிட்டு எல்லோரும் "ஓ….!!!!!!!!!!!!!!!!!!!!!!" என்று கூக்குரல் இட்டவாறே தங்கள் பூமியுள் புதிதாக கண்ட அந்த விலங்குகளை நோக்கி ஓடத் தொடங்கினர்.

அருகே சென்றதும்தான் அவர்களுக்கு புரிந்தது. தாங்கள் மோதிக்கொண்டிருப்பது தங்களிலும் பார்க்க கொஞ்சம் புத்திசாதூர்யம் கூடியதும், பலம் கொண்டதுமான மனிதர்களுடன் என்பது.

சென்றதும்தான் அவர்களுக்கு புரிந்தது. தாங்கள் மோதிக்கொண்டிருப்பது தங்களிலும் பார்க்க கொஞ்சம் புத்திசாதூர்யம் கூடியதும், பலம் கொண்டதுமான மனிதர்களுடன் என்பது.

இரு தரப்பும் மோசமாக மோதிக்கொண்டனர். மனிதர்கள் கொஞ்சம் முன்னேற்றமான ஆயுதங்களினால் ஆக்ரோஷமாகத் தாக்கினர். ஆயினும் கா தரப்பில் அதிகமான நபர்கள் இருந்ததினால் காயப்பட்ட தம் இனத்தவரைவிட்டுவிட்டு மனிதர்கள் ஓடத் தொடங்கினர்.

தரப்பும் மோசமாக மோதிக்கொண்டனர். மனிதர்கள் கொஞ்சம் முன்னேற்றமான ஆயுதங்களினால் ஆக்ரோஷமாகத் தாக்கினர். ஆயினும் கா தரப்பில் அதிகமான நபர்கள் இருந்ததினால் காயப்பட்ட தம் இனத்தவரைவிட்டுவிட்டு மனிதர்கள் ஓடத் தொடங்கினர்.

கா தன் கையில் இருந்த கோடாரியை உயற்றி.. வெறியுடன் உச்ச ஸ்தாயியில் சத்தம் இட்டான். அவனைத் தொடர்ந்து அவன் குழுவினரும் தம் ஆயுதங்களை உயர்த்திச் சத்தமிட்டனர். இவ்வாறாக சில ஆண்டுகள் மனிதர்களும் நியன்டதாலும் மோதிக்கொண்டு இருந்தனர். சுமார் 10000 ஆண்டுகள் நியன்டதாலும் மனிதர்களும் ஒரே காலப்பகுதியில் ஐரோப்பாவில் இருந்துள்ளனர்.

தன் கையில் இருந்த கோடாரியை உயற்றி.. வெறியுடன் உச்ச ஸ்தாயியில் சத்தம் இட்டான். அவனைத் தொடர்ந்து அவன் குழுவினரும் தம் ஆயுதங்களை உயர்த்திச் சத்தமிட்டனர். இவ்வாறாக சில ஆண்டுகள் மனிதர்களும் நியன்டதாலும் மோதிக்கொண்டு இருந்தனர். சுமார் 10000 ஆண்டுகள் நியன்டதாலும் மனிதர்களும் ஒரே காலப்பகுதியில் ஐரோப்பாவில் இருந்துள்ளனர்.கடைசியாக ஒரு நாள் வேட்டையாடிவிட்டு காவும் குழுவினரும் தாங்கள் கடைசியாக அமைத்துத் தங்கியிருந்த குடில் நோக்கி வருகின்றனர். தூரத்திலேயே அவர்களின் குடிலில் இருந்து புகை மண்டலமாக எழும