நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் மகாவீர் ஜெய்ன் ஆலயம் ஒன்று உள்ளது. பளிங்கினால் இழைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயம், பளிச் என்று தூய்மையாக உள்ளது. இங்கு நானும் என் அம்மாவும் சென்றோம். நாங்கள் சென்றபோது, அங்கு எங்களைத் தவிர யாரும் இல்லை. அமைதியும் தூய்மையும் நறுமணமும் நிறைந்த அந்த இடம், மனத்திற்கு மகிழ்ச்சி அளித்தது. ஜைன சமயம் பற்றித் தெரிந்துகொள்ளப் பாருங்கள்: ஜைன சமயத்தின் தொன்மையும் தன்மையும்
http://annakannan-photos.blogspot.com/2007/06/blog-post_16.html