இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தொகுப்பாளரின் மேசையிலிருந்து... Print E-mail
ஆசிரியர்குழு   

சிங்கள இனவாத இலங்கை அரசு , தமிழ் மக்களின் மேலான இன்னொரு தாக்குதலாக தமிழ்நெட் (www.tamilnet.com ) இணையச் செய்தித் தளத்துக்கு தடைவிதித்திருக்கிறது. தமிழர்களை கொழும்பில் இருந்து விரட்டி அடித்து அது செய்த இனசுத்திகரிப்பு நடவடிக்கை சர்வதேச அளவில் கண்டனத்துக்கும், கவனத்துக்கும் ஆளானதால் இப்படியொரு அபத்தமான அடக்குமுறையினை ஏவி இருக்கிறது. தமிழ்நெட் இந்த ஜூன் மாதத்தில் தனது 10ஆவது ஆண்டு நிறைவைச் செய்திருக்கும் வேளையில் அதற்கு ஒரு இனவாத அரசு வழங்கும் பரிசு வேறு எப்படி இருக்கமுடியும்? தமிழர்களின் குரல்வளையை நசுக்குவது சிங்கள அரசுகளுக்கு இது முதல்முறையல்ல. 1981 ஆம் ஆண்டே ஈழநாடு பத்திரிக்கை அலுவலகத்தை எரியூட்டியது தொடக்கம், பல செய்தியாளர்களை கொலை செய்தல், பத்திரிக்கை அலுவலகங்களைத் தாக்குதல் போன்றவை அதன் இயல்பான தமிழெதிர்ப்பு நடவடிக்கைகளில் அடங்கும் . இலங்கையின் மற்ற ஊடகங்கள் தமிழர்களின் குரலை, அவர்கள் மீதான அடக்குமுறைகளை வெளிப்படுத்தாத போராட்டச்ச்சுழலில் தமிழ் பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள் கடும் அடக்குமுறையினையும், எதிர்ப்பையும் சந்தித்தே வருகின்றனர். அதில் தமிழ்நெட் அதன் நேர்மையான, உறுதியான செய்திகளுக்காக அறியப்படுவது. இப்போது தமிழ்நெட் இணையத்தளத்துக்குத் தடைவிதித்திருப்பதன் மூலம் இலங்கை அரசு எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற உன்மத்த நிலையை அடைந்திருக்கிறது என்பது புலனாகிறது. இலங்கை அரசின் இந்த அடக்குமுறையினை சுதந்திர ஊடகங்களுக்கான இயக்கமும் (Free Media Movement), மற்றும் எல்லைகள் கடந்த செய்தியாளர்கள் (Reporters without borders (RSF)) அமைப்பும் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கின்றன. இவ்வடக்குமுறையை சுதந்திரத்தையும் நாகரீகத்தையும் போற்றும் உலகின் அத்தனை சக்திகளுடனும் இணைந்து பூங்கா இதழ் கடுமையாகக் கண்டிக்கிறது.

சிங்கள இனவாதம் ஈழத் தமிழர்களின் ஊடகங்களின் குரல்வளையை நசுக்குவதற்கு முனைகையில் , ஈழத் தமிழர்களின் வரலாறு பற்றிய தவறான செய்திகள் பரப்படுவது பற்றிய கரிசனையுடன் எழுதப்பட்டுள்ளது சயந்ததின் 'இது எவருடைய தவறாய் இருக்கலாம் ?' என்ற பதிவு. ஈழத்தமிழர்கள் தங்களது போராட்ட வரலாறு பற்றி மட்டுமல்லாது, தங்களது பூர்வீக தேசிய வரலாற்றையும் தமிழிலும் , ஆங்கிலத்திலும் இடையறாது தொகுப்பதும் , இற்றைப்படுத்துவதும், பரவலாக்குவதும் செய்தல் வேண்டும். அது இன்று அவர்களது போராட்டத்தின் ஒரு முக்கியமான கூறுகளில் ஒன்றாக உள்ளது.

 

வளர்மதியின் பின்நவீனத்துவம் பற்றிய உரையாடலுக்கான துவக்கமாக சில குறிப்புகள் பின்நவீனத்துவம் பற்றிய உரையாடலை முன்னெடுக்கும் முயற்சியில் எழுதப்ப்ட்டிருக்கிறது . மிகவும் ஆரோக்கியமான முறையில் ஒரு திறந்த உரையாடலுக்கான சூழலை இந்த முதல் பதிவே எழுப்பியிருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. பின்நவீனத்துவத்தைத் தமிழில் படித்துக்குழம்புவதை விட ஆங்கிலத்தில் (தட்டுத்தடுமாறி ) புரிந்துகொள்வது மேல் என்பது ஒருசாரரின் கருத்தாக இருக்கலாம். அதில் ஓரளவுக்கு நியாயமும் இருக்கலாம். ஆனால் தமிழ் அந்த ஒரு சாராரின் மொழிமட்டுமல்ல . இப்படியான முயற்சிகள் பல்கிப் பெருகும் போதே குழப்பம் குறைவான மொழியில் கருத்துக்கள் திரட்சி அடையவும், அது கூர்மையாக மாறவும் வழி பிறக்கும். அப்படியே ஒரு மொழியும் , அதன் மக்களும் இணைந்து வளர்கிறார்கள். எனவே வளர்மதி தனது கட்டுரையினை தொடர்ந்து எழுத பூங்கா வேண்டிக்கொள்கிறது . கோவி . கண்ணனின் ' தமிழகத்து தாழ்த்தப்பட்ட பெண் தெய்வங்கள்' என்ற கட்டுரை உண்மையில் நிறுவனப்படுத்தப்பட்டு வரும் இந்துசமயத்தினுள் இயங்கும் சூக்கும அரசியல் பற்றியது. நிறுவனப்படுத்தலின் மூலம் அதிகாரம் கட்டமைக்கப்படுகிறதெனின் அவ்வதிகாரம் படிநிலைகளைக் கொண்டிருக்கும் என்பதும் இயல்பான ஒன்றே ஆகும். இந்தப் படி நிலைகள் ஒரு மதத்தில் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்று அவதானிப்பதும் , அவற்றைக் கட்டுடைப்பதும் , அதிகாரத்துக்கு எதிரான குரல்களை ஒலிப்பவர்களின் கடமைகளில் ஒன்றாகும். இப்படியான முயற்சிகள் காலம் தாழ்ந்தே தமிழில் மேற்கொள்ளப்படுகின்றன என்றாலும் அவைகள் பரவலடைவதற்கான சாத்தியங்கள் இப்போது அதிகரித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது . மதியழகன் சுப்பையாவின் ' டார்ச் வியாபாரி' இவ்வகையில் நல்ல மொழிபெயர்ப்பு. அதே போல ராகவன் தம்பியின் மொழிபெயர்ப்பான ' போர் நாயும்' குறிப்பிடத்தக்கது.

 

இவையல்லாது தமிழ்நதியின் கவிதை பேசப்படாத யசோதரையின் துயரினைப் பேசுகிறது தாலி பற்றிய இராம.கி அவர்களின் பதிவுகளும் வழக்கம் போல முக்கியமானவையே. இந்தவாரம் தமிழ்மணம் வாசிப்பில் பகுதியை நமக்காக நண்பர் சுரதா தொகுத்தளித்திருக்கிறார். அவருக்கு பூங்கா தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.  பழ.நெடுமாறனின் சிறப்புச் செவ்வியானது தவிர்க்க முடியாத பல காரணங்களால் இந்த வாரம் பூங்காவில் வெளிவரவில்லை. அத்ற்காக பூங்கா வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறது. இது தவிர இவ்வார பூங்கா இதழை பல நல்ல பதிவுகள் அலங்கரிக்கின்றன.

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)